ஆதிச்சநல்லூர், பெண்கள் ஹாஸ்டல்.. அப்படியே ஸ்டாலின் ஸ்டைலை கையில் எடுத்த நிர்மலா.. கவனிச்சீங்களா
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் ஸ்டைலில்.. தமிழ்நாட்டில் ஏற்கனவே ஹிட் அடித்த திட்டங்களின் அடிப்படையில் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
திமுக ஸ்டைலில் தமிழ்நாட்டிற்கு அறிவிப்பு
கீழடி, பெருநை அருங்காட்சியகம் தமிழ்நாடு அரசால் வெற்றிகரமாக கொண்டு வரப்பட்டது - இதை அடிப்படையாக வைத்து ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு மலையேற்ற நடவடிக்கைக்கு கடந்த மாநில பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டது. இதை போலவே மத்திய பட்ஜெட்டில் பொதிகை மலையில் மலையேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மகளிர் விடுதி அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். தமிழ்நாட்டில் ஏற்கனவே மாநில அரசின் தோழி விடுதிகள் ஹிட் அடித்துள்ள நிலையில் அதே போன்ற அறிவிப்பை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

பட்ஜெட் உரையில் சொன்னது என்ன?
மத்திய பட்ஜெட் உரையை தாக்கல் செய்து உரையாடிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், புனிதமான தைப்பூச நாளிலும், ரவி தாஸ் ஜெயந்தி நாளிலும் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன். தன்னிறைவு இந்தியா என்ற இலக்கை நோக்கி நாம் வேகமாக முன்னேறி வருகிறோம். பணவீக்கத்தை முறையாக கட்டுப்படுத்தியதால் நாட்டின் வளர்ச்சி மேம்பட்டுள்ளது . புதிய தொழில்நுட்பங்கள் மூலம் உற்பத்தி துறை பலமடங்கு வளர்ச்சி. கர்த்தவ்ய பவனில் தயாரித்த முதல் பட்ஜெட் இதுவாகும்
மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்கும் நாட்டு மக்களுக்கு நன்றிகள். அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. இளைஞர்களின் கரங்களை வலுப்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும். பல்வேறு நோய்களுக்கன மருந்தகள் இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கிறது.
தொடர் வளர்ச்சி, உற்பத்தி அதிகரிப்பு, பொருளாதார மேம்பாட்டை அடிப்படையாக வைத்து பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. பயோ பார்மா சக்தி திட்டம் கொண்டு வரப்படும். இதற்காக ரூ.10,000 கோடியில் பயோ பார்மா சக்தி திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. செமி கண்டக்டர் துறைக்கு ரூ.40,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
உள்கட்டமைப்பு எந்திரங்களின் உற்பத்தி ஆலைகள் அமைக்க ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஜவுளி துறையில் தன்னிறைவு பெறுவதற்கு புதிய திட்டம் அறிவிக்கப்படுகிறது. மகாத்மா காந்தி ஸ்வராஜ் திட்டம் என்ற பெயரில் 4 மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும்
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு முதலீட்டு வரம்பு 5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக ஆக உயர்த்தப்படும். இந்தியாவின் ஆயுர்வேத மருந்துகளை ஏற்றுமதி செய் ஆயுர்வேத மையங்கள் அமைக்கப்படும். என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications