காஷ்மீரை விடுங்க.. இனி எந்த மாநிலத்தையும் மத்திய அரசு பிரிக்க முடியும்.. தீர்ப்பு தந்த அதிகாரம்
சென்னை: ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழக்கு காரணமாக.. இனி எந்த மாநிலத்தையும் மத்திய அரசு பிரிக்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு மத்திய அரசுக்கு மாபெரும் அதிகாரம் வழங்கி உள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, 370 சட்ட பிரிவு நீக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் லடாக் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதற்கு எதிராக தொடுக்கப்பட்ட மனுக்களில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்டப்பிரிவை ரத்து செய்தது சட்டப்படி செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

சட்டப்பிரிவு 370 ஒரு தற்காலிக ஏற்பாடு என்று நாங்கள் கருதுகிறோம். 370 சட்டப்பிரிவு மாநிலத்தில் போர் நிலைமைகள் காரணமாக ஒரு இடைக்கால ஏற்பாடாக இருந்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபட்ட இறையாண்மையை கொண்டிருக்கவில்லை. ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஒரு விதி, அதிகார வரம்புகள் உள்ளன. அவர்கள் பயன்படுத்தக்கூடிய அளவிற்கான அதிகார வரம்புகள் உள்ளன. ஆனால் ஜம்மு காஷ்மீருக்கு தனி "இறையாண்மை" என்பது கிடையாது.
ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்து லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்றியது செல்லும் ஜம்மு காஷ்மீருக்கு விரைந்து மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கி, 2024 செப்டம்பருக்குள் அங்கு தேர்தல் நடத்த வேண்டும். லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்றியது செல்லும். லடாக்கை மாநிலமாக்குவது பற்றி உச்ச நீதிமன்றம் எதுவும் சொல்லவில்லை, என்று தீர்ப்பு வழங்கி உள்ளது.

முக்கிய தீர்ப்பு; குடியரசுத் தலைவர் ஆட்சி அங்கு இருக்கும் போது ஒன்றிய அரசு எடுக்கும் முடிவுகளை கேள்விக்கு உள்ளாக்க முடியாது. ஜம்மு காஷ்மீர் 370வது பிரிவை ரத்து செய்ய மாநில அரசின் ஒப்புதல் தேவை இல்லை மாநில அரசை கேட்காமல் அவர்களின் அதிகாரத்தை நீக்கியதால்.. இனி மாநில அரசுகளின் அதிகாரத்தை நீக்க.. அவர்களை யூனியன் பிரதேசமாக மாற்ற.. மாநில அந்தஸ்தை நீக்க மத்திய அரசு சட்டசபை அனுமதியை கேட்க வேண்டியது இல்லை என்ற நிலை ஏற்படுகிறது, என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
அதிகாரம் வழங்கி உள்ளது. இன்று வந்த தீர்ப்பு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது தொடர்பானது மட்டும் என்று நினைத்தால் அது தவறானது. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழக்கு காரணமாக.. இனி எந்த மாநிலத்தையும் மத்திய அரசு பிரிக்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு மத்திய அரசுக்கு மாபெரும் அதிகாரம் வழங்கி உள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும் போது மாநிலத்தை இரண்டாகப் பிரிக்கவோ அதன் அதிகாரத்தை குறைக்கவோ குடியரசு தலைவருக்கான (மத்திய அரசு) அதிகாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது உதாரணமாக பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தை பிரிக்க நினைத்தால்.. மத்திய அரசு.. மாநில அரசின் அனுமதியை கேட்காமல்.. அங்கே மாநிலத்தை பிரிக்க முடியும்.
ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாகவோ அல்லது யூனியன் பிரதேசத்தை மாநிலமாகவோ மாற்றுவது என்பது நாடாளுமன்றத்திற்கு உள்ள அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்பதால் இனி எந்த மாநிலத்தையும் எளிதாக உடைக்க முடியும்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications