தீபாவளிக்கு டபுள் சர்ப்ரைஸ்.. அகவிலைப்படியோடு வரும் அரியர்ஸ்.. வங்கி கணக்கில் கொட்டும் பணம்!
சென்னை: கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட, 18 மாத அகவிலைப்படி/அகவிலை நிவாரண (DA/DR) நிலுவைத் தொகை வழங்குவது குறித்து விரைவில் அறிவிப்பு இந்த மாதம் வெளியாகும் அகவிலைப்படி உயர்வு அறிவிப்போடு சேர்த்து வெளியிடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அகவிலைப்படி உயர்வு எவ்வளவு
தீபாவளி பண்டிகைக் காலத்திற்கு முன்பாக அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி (DA) மூன்று சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உயர்வு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு ஜூலை 1 முதல் (பின்தேதியிட்டு) அமலுக்கு வரும்.
இந்த ஆண்டு அகவிலைப்படி உயர்வு வருவது இது இரண்டாவது முறை. கடந்த மார்ச் மாதம் இரண்டு சதவீத உயர்வு அறிவிக்கப்பட்டது. அப்போது அகவிலைப்படி அடிப்படைச் சம்பளத்தில் 53 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக உயர்ந்தது. இதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னர், அதாவது கடந்த ஆண்டு அக்டோபரில் மூன்று சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மூன்று சதவீத அகவிலைப்படி உயர்வு
அகவிலைப்படி என்பது அரசு ஊழியர்களுக்கு பணவீக்கத்தின் தாக்கத்தை ஈடுசெய்வதற்காக வழங்கப்படுகிறது. இந்த மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு, தொழில்துறை ஊழியர்களுக்கான நுகர்வோர் விலை குறியீட்டின் (CPI) அடிப்படியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருமுறை வழங்கப்படும் அகவிலைப்படி திருத்தங்களுக்கு இந்த தரவுகள்தான் அடிப்படை.
இந்த புதிய உயர்வு காரணமாக, அடிப்படைச் சம்பளம் ரூ. 60,000 உள்ள ஊழியருக்கு, மார்ச் மாத உயர்விற்குப் பிறகு கிடைத்த ரூ. 33,000 அகவிலைப்படியுடன் சேர்த்து, கூடுதலாக ரூ. 34,800 கிடைக்கும்.இதோடு சேர்த்து அகவிலைப்படி அரியர்ஸ் தொகையும் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
DA நிலுவைத் தொகை தொடர்பான விவாதம்
சமீபத்தில் தேசிய கவுன்சிலின் (கூட்டு ஆலோசனை பொறிமுறை) நிலைக்குழுவின் 63-வது கூட்டம் டெல்லியில் உள்ள சிவில் சர்வீசஸ் அதிகாரிகள் பயிற்சி மையத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊழியர்களின் முக்கியமான பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, கொரோனா காலகட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 18 மாத DA மற்றும் DR நிலுவைத் தொகையை வழங்குவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், அரசு துறையின் பல செயலாளர்கள் தலைமையேற்றனர். சிவகோபால் மிஸ்ரா மற்றும் எம். ராகவய்யா போன்ற மூத்த தலைவர்கள் ஊழியர்களின் பிரதிநிதிகளாக பங்கேற்றனர். மார்ச் 2020 முதல் ஜூன் 2021 வரையிலான 18 மாத DA/DR தொகையை வழங்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தப்பட்டது. ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஊரடங்கு காலத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர்.
இருப்பினும், மத்திய நிதி அமைச்சகம் இவர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. கொரோனா பெருந்தொற்று காரணமாக நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமடைந்தது. 2020-21 நிதியாண்டுக்கு அப்பாலும், அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களுக்கான சுமை அதிகரித்தது. எனவே, DA / DR நிலுவைத் தொகையை வழங்குவது சாத்தியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் இந்த அரியர்ஸ் தொகை குறித்து ஆலோசனைகள் செய்யப்பட்டன.
எட்டாவது ஊதியக் குழுவின் உருவாக்கம் மற்றும் DA நிலுவைத் தொகை
இதனால் விரைவில் 18 மாதங்களுக்கான டிஏ அரியர் விரைவில் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தொகையை மத்திய அரசு ஒதுக்க உள்ளதாக கூறப்பட்டது. கடந்த பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்புகள் வரவில்லை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதியக்குழுவிற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை என்பதால் இந்த அரியர் இந்த வருட இறுதிக்குள் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது . சீனியர் ஊழியர்களுக்கு சுமார் 1.90 லட்சம் ரூபாய் வரை நிதி ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட ஒன்றரை கோடி குடும்பங்களுக்கு இதனால் நேரடி பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications