களமிறக்கப்பட்ட ₹10,907 கோடி..நாடு முழுக்க பல ஆயிரம் பேருக்கு.. அரசு அனுப்பிய பணம்.. யாருக்கு வரும்?
சென்னை: சுமார் ₹10,907 கோடி அளவிலான நிதியை பிஎம் சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா (PMSGMBY) திட்டத்தின் கீழ் மத்திய அரசு விடுவித்து உள்ளது.
மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்படி, பிஎம் சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா (PMSGMBY) திட்டம், குடும்பங்களுக்கு மலிவு விலையில் தூய்மையான சூரிய ஆற்றலை வழங்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. 2025 செப்டம்பர் நிலவரப்படி, பொதுத்துறை வங்கிகள் (PSBs) 5.79 லட்சத்துக்கும் அதிகமான கடன் விண்ணப்பங்களை அங்கீகரித்துள்ளன. இதன் மதிப்பு சுமார் ₹10,907 கோடி ஆகும். இது மேற்கூரை சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவுவதற்கான நிதி திட்டம் ஆகும்.

பிஎம் சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா
இத்திட்டத்திற்கான கடன்கள், ஜனசமர்த் போர்ட்டல் வழியாக செயல்படுத்தப்படுகின்றன. இது pmsuryaghar.gov.in என்ற தேசிய போர்ட்டலுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பயனாளிகள் டிஜிட்டல் முறையில் எளிதாகவும், வெளிப்படையாகவும் விண்ணப்பிக்க முடியும். இது சிறந்த பயனர் அனுபவத்தையும், தரவு அடிப்படையிலான முடிவுகளையும் உறுதி செய்கிறது.
இந்த மாதிரி கடன் திட்டம் பல முக்கிய பலன்களை வழங்குகிறது. ₹2 லட்சம் வரையிலான கடன்கள், குறைந்த வட்டி விகிதங்களில், பிணையம் இல்லாமல் வழங்கப்படுகின்றன. மின்சார செலவு சேமிப்புக்கு ஏற்றவாறு நீண்ட கால திருப்பிச் செலுத்தும் கால அவகாசம், கடன் விநியோகத்தில் இருந்து 6 மாத சலுகைக் காலம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும்.
தமிழக அரசு திட்டம்
இதேபோன்ற திட்டத்தை தமிழக அரசும் வழங்குகிறது. தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், https://www.pmsuryaghar.gov.in/, https://www.tnebltd.gov.in/usrp/applycfa.xhtml ஆகிய இரண்டு லிங்குகளில் ஒன்றை கிளிக் செய்து சோலார் பேனல் நிறுவலாம் என்று அறிவித்து உள்ளனர். தமிழ்நாட்டில் மேற்கூரை சோலார் பேனல்கள் அமைப்பதற்கு என்று வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. வீட்டிற்குத் தேவையான சூரிய கூரை திறன் கணக்கீடு செயலியை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. இதை பயன்படுத்தி மின்சார கட்டணம் இன்றியே வீட்டிற்கு தேவையான மின் தேவைகளை சமாளிக்க முடியும்.
மேற்கூரை சோலார் பேனல்கள் மூலம் மின்சார வசதி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் மானியம் தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதில், உங்கள் வீட்டிற்கு சூரிய மேற்கூரை மூலம் சூரிய ஒளியின் பரிசை கொடுங்கள்!
1 கிவா ரூ30,000/-
2 கிவா ரூ 60,000/-
3 கிவா ரூ 78,000/- வரை மானியம். வழங்கப்படும்.
பூமியை பசுமையாக வைத்திருக்க உதவுங்கள். இணைய தளத்தில் முதலில் பதிவு செய்யவும். அடுத்து, விண்ணப்பியுங்கள்!
1. உங்கள் வீடுகளில் தனியார் அல்லது அரசின் உதவியுடன் மேற்கூரையில் சோலார் அமைக்க வேண்டும்.
2. பொதுவாக மேற்கூரையில் சோலார் அமைக்க சதுர அடி பொறுத்து 50 ஆயிரம் முதல் 2-3 லட்சம் வரை செலவு ஆகும்.
3. மேற்கூரையில் சோலார் அமைத்தால் வீட்டில் பெரும்பாலும் மின்சார தேவை பூர்த்தி ஆகிவிடும். மழை காலம், பனி காலத்தில் 1-2 மணி நேர மின்சார நிலையத்தின் மின்சார சப்ளை தேவை மட்டும் இருக்கும்.
4. நீங்கள் மேற்கூரையில் சோலார் வைத்துள்ளதை அரசிடம் பதிவு செய்ய வேண்டும்.
5. அப்படி செய்திருக்கும் பட்சத்தில் அந்த குறைந்த பட்ச மின்சார தேவையை அரசே ஏற்றுக்கொள்ளும் திட்டம்தான் இது.
6. பொதுவாக மேற்கூரையில் சோலார் இருந்தால்.. மாதம் உங்களுக்கு மின்சார வாரியத்தின் மின்சாரத்தில் 100 யூனிட் கூட அவசியம் இருக்காது. இருந்தாலும் நீங்கள் 300 யூனிட் வரை இலவசமாக பயன்படுத்த முடியும்.
7. மேற்கூரையில் சோலார் அமைப்பதை ஊக்குவிக்கும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications