Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமித் ஷா ஆடும் ஆடு புலி ஆட்டம்! ஆபரேஷன் ஆரம்பம்.. களமிறக்கப்பட்ட அண்ணாமலை - ஆடிட்டர்! தமிழ்நாடு லகலக

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு சென்றார்.. அதே நாளில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்.. இதற்கெல்லாம் பின் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆடும் தரமான ஆடு புலி ஆட்டம் ஒன்று உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் அடுத்த 5 மாதங்களில் நடக்க போகும் சட்டசபை தேர்தலை எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்பதில் அமித் ஷா தீவிரமாக இருக்கிறாராம். சமீபத்தில் அகமதாபாத் மாநகராட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித் ஷா, பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வென்றதைக் குறிப்பிட்டார். அடுத்த ஆண்டு மேற்கு வங்கம், தமிழ்நாட்டிலும் என்.டி.ஏ. வலுவான வெற்றியைப் பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். 2014 மக்களவை முதல் 2025 வரை தமிழ்நாட்டில் பா.ஜ.க. தொடர் வளர்ச்சியைச் சந்தித்துள்ளது என்றார்.

மம்தா பானர்ஜி மற்றும் ஸ்டாலின் தயாராக இருக்க வேண்டும். பீகாருக்குப் பிறகு மேற்கு வங்கம், தமிழ்நாட்டில் என்.டி.ஏ.வின் நேரம் இது. பிரதமர் மோடி தலைமையில் நாட்டின் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டு மக்கள் உறுதியுடன் உள்ளனர். எதிர்க்கட்சிகளுக்குத் தலைவர்களோ, கொள்கைகளோ இல்லை என்றார். திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் திமுக-வைக் குறிப்பிட்டு, "தேர்தல் முடிவுகளில் மேற்கு வங்கம், தமிழ்நாட்டில் அவர்கள் அடியோடு துடைத்தெறியப்படுவார்கள்," என உறுதிபடக் கூறினார்.

Union Minister Amit Shah major operation for BJP AIADMK Tamil Nadu ahead of elections

அமித் ஷா தீவிரம்

அமித் ஷா இப்படி தீவிரமாக, உறுதியாக கூறுவதற்கு பின் முக்கியமான காரணங்கள் உள்ளதாம்.

1. தமிழ்நாட்டில் NDA கூட்டணி ஆட்சியை பிடிக்க வேண்டும்.

2. NDA கூட்டணியில் ஆட்சியில் பங்கு பெற வேண்டும்.

3. இதன் மூலம் தமிழ்நாட்டில் கோட்டையை பிடிக்க வேண்டும்.. பாஜகவிற்கு கொள்கை ரீதியாக வலுவான எதிரியாக இருக்கும் திமுகவை வீழ்த்திவிட்டோம் என்றால் காங்கிரஸ் போன்ற மற்ற கட்சிகள் சித்தாந்த ரீதியாக வலிமை இழக்கும் என்று அமித் ஷா நினைக்கிறாராம்.

இதற்காக அமித் ஷா பெரிய ஆடு புலி ஆட்டம் ஒன்றையும் கையில் எடுத்து உள்ளாராம். 3 முக்கியமான தலைகளை களமிறக்கி அமித் ஷா முக்கியமான ஆட்டம் ஒன்றை தொடங்கி உள்ளாராம்.

தேமுதிக வழிக்கு வந்தது

இந்த ஆபரேஷன்படி ஏற்கனவே தேமுதிகவிடம் பேசிவிட்டனர். தேமுதிக பாஜக கூட்டணிக்கு வர ஒப்புக்கொண்டது. அதன்படி முன்பு ராஜ்ய சபா சீட்டு கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதால் அதிமுக கூட்டணிக்கு எதிராக தேமுதிக திரும்பியது. ஆனால் இப்போது அமித் ஷா அனுப்பிய தூது மூலம் பேசி தேமுதிகவை சம்மதிக்க வைத்துள்ளனர். அதன்படி 2026ல் ராஜ்யசபா சீட்டு கண்டிப்பாக வழங்கப்படும் மற்றும் 15 எம்எல்ஏ தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறி உள்ளனர். இதை பிரேமலதா ஏற்றுக்கொண்டதாகவும்.. அதிமுக கூட்டணியில் மீண்டும் இணைய ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஓ பன்னீர்செல்வம் வழிக்கு வருவார்

இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வத்திடம் பேசி உள்ளனர். அவர் தனிக்கட்சி தொடங்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறார். மாறாக அமித் ஷா ஆடிட்டர் ஒருவர் வழியாக பேசி.. நீங்கள் தனிக்கட்சி தொடங்கி அதிமுக உடன் வேண்டாம் பாஜக உடன் கூட்டணி வையுங்கள். உங்களுக்கு நாங்கள் இடம் ஒதுக்குகிறோம். கட்சி நிதியை பார்த்துக்கொள்கிறோம் என்று கூறி உள்ளார்களாம் . முதலில் இதை ஏற்றுக்கொள்ள ஓ பன்னீர்செல்வம் மறுத்தாலும்.. அதிமுக பொதுக்குழுவில் தன்னை சேர்க்க எந்த விதமான முனைப்பும் எடுக்காத காரணத்தால் தனி கட்சி தொடங்கி விடலாமா என்று யோசித்துக்கொண்டு இருக்கிறாராம். ஆடிட்டர் சொன்னப்படியே தனிக்கட்சி தொடங்கி பாஜக உடன் கூட்டணி வைக்கலாமா என்று நினைத்துக்கொண்டு இருக்கிறாராம்.

டிடிவி தினகரன் - களமிறக்கப்பட்ட அண்ணாமலை

இன்னொரு பக்கம் அண்ணாமலையை இரண்டு முறை டெல்லி அழைத்து அமித் ஷா பேசிவிட்டார். இதுவரை டிடிவி தினகரன் அமமுகவும் அமித் ஷா பேச்சை கேட்பதாக இல்லை. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை கூட்டணி இல்லை என்று டிடிவி தினகரன் கூறிவிட்டார். அதேபோல் ஓ பன்னீர்செல்வமும் கிட்டத்தட்ட இதே நிலைப்பாட்டை எடுத்துள்ளார். இவர்கள் மனசு மாறி அதிமுகவுடன் நெருக்கம் ஆனாலும் அவர்களை எடப்பாடி ஏற்றுக்கொள்வது சந்தேகம்தான். இங்கும் அமித் ஷாவின் சாணக்யத்தனம் தோற்று வருகிறது.

இதை சரி செய்ய அண்ணாமலை களமிறக்கப்பட்டு உள்ளாராம். அவரிடம் பேசி.. மீண்டும் கூட்டணிக்கு கொண்டு வருவது உங்கள் வேலை என்று அண்ணாமலையிடம் அமித் ஷா கூறி உள்ளாராம்.

அவசரமாக போன நயினார்

இன்னொரு பக்கம் நயினார் நாகேந்திரன் அமித் ஷா மூலம் களமிறக்கப்பட்டார். அவரின் உத்தரவின் பெயரில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி பாஜக நயினாரிடம் சில விஷயங்களை கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. முக்கியமாக கூட்டணி பற்றி ஆலோசனைகளை இவர் செய்தார். ஓ பன்னீர்செல்வம் வந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள், டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கூறினாராம்.

எடப்பாடி பழனிசாமி நயினார் நாகேந்திரன்

இதற்கு எடப்பாடி நயினாரிடம் பேசுகையில், கூட்டணியில் யார் இணையலாம் என்பதை அதிமுகவே முடிவு எடுக்கும். அதிமுக கூட்டணியில் பாஜக மட்டும் இருந்தால் போதும். வேறு கட்சிகளை கொண்டு வர பாஜக நினைக்க வேண்டும். அதிமுகவே கூட்டணி பேச்சுவார்த்தைகளை செய்யும்.

எந்தெந்த கட்சி உள்ளே வரலாம் என்பதை பாஜக முடிவு செய்ய கூடாது. அதிமுகவே முடிவு செய்யும். வேண்டுமென்றால் இடஒதுக்கீடு பேச்சுவார்த்தைகளில் அதிமுக உடன் பாஜக இணையலாம். ஆனால் மற்றபடி கூட்டணிக்கு யார் வரலாம் என்று பாஜக முடிவு செய்ய கூடாது.. இடஒதுக்கீடு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை அதிமுகவே முடிவு செய்யும் என்று எடப்பாடி பழனிசாமி நயினார் நாகேந்திரனிடம் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்போதைக்கு எடப்பாடி தீவிரமாக இருந்தாலும் அவரை மனம்மாற்றிவிடலாம் என்று நயினார் நினைக்கிறாராம். எடப்பாடியை எப்படியாவது சம்மதிக்க வைத்துவிட்டால் கூட்டணி உறுதியாகிவிடும் என்பதால் நயினார் அதற்கான பணிகளில் அமித் ஷா மூலம் களமிறக்கப்பட்டு உள்ளாராம்.

இப்படி ஒவ்வொருவராக சம்மதிக்க வைத்து தமிழ்நாட்டில் மீண்டும் NDA கூட்டணியை வலுப்படுத்தலாம் என்று அமித் ஷா இந்த ஆபரேஷனை களமிறக்கி உள்ளாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+