Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பரங்குன்றம் மலையில் அமர்ந்து அசைவ உணவு.. எம்.பி நவாஸ் கனிக்கு எதிராக கொந்தளித்த எல்.முருகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருப்பரங்குன்றம் கோயில் மலையில் அமர்ந்து, தமிழகத்தின் மத நல்லிணக்க பண்பாட்டை சீர்குலைக்கும் வகையில் அசைவ உணவு சாப்பிட்ட மக்களவை உறுப்பினர் நவாஸ்கனியின் செயல்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இந்து அமைப்புகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு, கோழிகளை பலியிட்டு கந்தூரி வழிபாடு செய்ய போலீசார் தடை விதித்துள்ளனர். தொழுகை வழிபாடு செய்ய மட்டுமே அனுமதி அளித்தனர். மதுரை திருப்பரங்குன்றத்தில் மலை மேல் உள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளை பலியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டதால் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர்.

l murugann thiruparankundram navas kani


இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக திருப்பரங்குன்றம் சென்ற வக்பு வாரிய தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவருமான ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி தர்காவுக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அவருடன் வந்தவர்கள் பார்சலாக வாங்கி வந்த பிரியாணியை சாப்பிட்டனர். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் கோவில் மலையில் அமர்ந்து நவாஸ்கனி அசைவ உணவு சாப்பிட்டதாக குற்றம்சாட்டி, மத்திய அமைச்சர் எல்.முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் எல்.முருகன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழர் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் கோவில் மலையில் அமர்ந்து, தமிழகத்தின் மதநல்லிணக்க பண்பாட்டை சீர்குலைக்கும் வகையில் அசைவ உணவு உண்ட பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி அவர்களின் செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கிறேன்.


மதநல்லிணக்கம் பற்றி மாவட்ட ஆட்சியரிடம் பேசியிருப்பதாக கூறிவிட்டு, இந்து சமுதாய மக்களின் புனித மலையாக போற்றப்படுகின்ற திருப்பரங்குன்றம் முருகன் மலையில் அமர்ந்து கும்பலாக சென்று அசைவம் சாப்பிட்டுள்ளார். தொடர்ந்து மதநல்லிணக்க பண்போடு அமைதியாக இருந்து வந்த மக்களிடத்தில் பிரிவினையை தூண்டுகின்ற நோக்கில், ஒரு பிரிவினைவாதியைப் போல் செயல்பட்டிருக்கிறார் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் விரும்பத்தகாத சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை திசை திருப்பும் நோக்கத்தோடு, திருப்பரங்குன்றம் மலைமீது சென்று அசைவ விருந்து அளிக்க முற்பட்டவர்களால் ஏற்பட்ட பதற்றமான சூழலை, ரகசியப் பிரமாணம் மேற்கொண்டு பதவியேற்ற பாராளுமன்ற உறுப்பினர் மேலும் பதற்றமானதாக மாற்றுவது எப்படி ஏற்கத்தக்கதாகும்.

மேலும், தமிழகத்தில் எல்லோருக்குமான மற்றும் சமூகநீதி ஆட்சி வழங்குவதாக கூறிக்கொள்ளும் போலி திராவிட மாடல் திமுக அரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும், இந்து சமுதாய விரோதப் போக்கை கைவிடப் போவதில்லை என்பதும் இன்று நடந்த சம்பவத்தின் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதுபோன்ற செயல்பாடுகள் தொடர்வது சமூகத்தின் அமைதியை நிச்சயம் சீர்குலைக்கும். ஆகவே, பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி மேற்கொண்ட இந்தச் செயலை வன்மையாகக் கண்டிப்பதோடு, இச்செயல் புரிந்ததற்காக தமிழக மக்களிடத்தில் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்பதையும் கூறிக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ள நவாஸ் கனி எம்.பி, “மலை மீது அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவில் ஆண்டாண்டு காலமாக ஆடு கோழிகள் நேர்ச்சை செய்யப்பட்டு உணவு வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் தற்போதுதான் ஏதோ புதிதாக அசைவ உணவு கொண்டு சென்று உண்ணுவதைப் போன்ற ஒரு தோற்றத்தை அரசியல் ஆதாயத்திற்காக சிலர் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். கடந்த ஆண்டு வரை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் அங்கு ஆடு, கோழிகள் நேர்ச்சை செய்யப்பட்டது.

இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் அனைத்து மத மக்களும் அங்கு நல்லிணக்கத்துடன் ஒற்றுமையுடன் இணைந்து சென்று வந்து கொண்டிருக்கிறார்கள். தற்போது இதன் மூலம் அரசியல் ஆதாயம் கண்டிட வேண்டும் என்ற நோக்கத்தில் இதனை அரசியல் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.” எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+