"ஒரே நாடு ஒரே தேர்தல்!" இணை அமைச்சர் முரளிதரன் பரபர கருத்து.. திமுக பற்றி கேட்டதும் வந்ததே கோபம்!
சென்னை: விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன், திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
Recommended Video
தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் திமுக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இணக்கமான போக்கு இல்லை. இரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வருகிறது.
மேற்கு வங்கம், முன்பு இருந்த தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா அரசு அளவுக்கு மோதல் இல்லை என்றாலும் கூட, அவ்வப்போது இரு தரப்பும் காரசார பதிலடிகளைப் பகிர்ந்தே வருகின்றனர்.

முரளிதரன்
அப்படித்தான் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும் போது திமுக அரசைக் கடுமையாகச் சாடியிருந்தார். திருச்சியில் விரைவில் ஹிந்தி பிரச்சார சபா சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற உள்ளது. இந்த ஹிந்தி பிரச்சார சபா விழாவில் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன் கலந்து கொள்கிறார்.

ஒரே நாடு ஒரே தேர்தல்
இதற்காக நேற்றிரவு அவர் டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல முக்கிய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். ஒரே நாடு, ஒரே தேர்தல் பற்றி நாடு நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறதாகக் குறிப்பிட்ட அவர், இதன் காரணமாகத் தகுந்த நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சீன கப்பல்
மேலும் கச்சத்தீவை மீட்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், இலங்கைக்குச் சீன உளவு கப்பல் வந்துள்ள விவகாரத்தைத் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளதாகவும் தேசியப் பாதுகாப்பிற்காகச் சீன உளவு கப்பலைத் தீவிரமாக மத்திய அரசு கண்காணித்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

குடும்ப ஆட்சி
தொடர்ந்து சாவர்க்கர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவில்லை என பெரும்பாலான தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தெரிவிக்கிறார்கள் என்ற கேள்விக்குப் பதில் அளித்த அவர், திமுக மட்டுமே அப்படிச் சொல்லி வருகிறது என்றும் எந்த கட்சி சொன்னாலும் அவரது வரலாற்றைப் படித்தால் அவரை பற்றித் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். மேலும், திமுகவின் ஊழல்களை மற்றும் குடும்ப ஆட்சியைத் தொடர்ந்து பாஜக எதிர்த்து வருவதால் தமிழக மக்களின் ஆதரவு பாஜகவிற்கு அதிகரித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications