ராமர் கோயில் கும்பாபிஷேகம்.. திடீரென கண் கலங்கிய நிர்மலா சீதாராமன்! அடுத்து என்ன செய்தார் பாருங்க
சென்னை: அயோத்தி நிகழ்வைக் காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து கண்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கும்பாபிஷேகத்தின் போது கண் கலங்கிப் போனார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. ராமர் பிறந்த இடமாக இந்த இடம் கருதப்படும் நிலையில், அயோத்தியில் உள்ள இந்த கோயிலில் குழந்தை வடிவிலான ராமர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இந்த ராமர் பிரதிஷ்டை நிகழ்வு இன்று வெகு சிறப்பாக அயோத்தியில் நடைபெற்றது. இந்த நிகழ்வை முன்னிட்டு அயோத்தியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
அயோத்தி நிகழ்வு: இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், தொழிலதிபர்கள், திரை பிரபலங்கள் என்று பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ராமர் சிலைக்குச் சிறப்புப் பூஜைகளைச் செய்தார். இதற்காக பிரதமர் மோடி கடந்த 11 நாட்கள் விரதம் இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அயோத்தியில் பூஜைகள் நடைபெற உள்ளன.
இந்த நிகழ்விற்காக அயோத்தி முழுக்க கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சில மீட்டர் இடைவெளியில் போலீஸ் குவிக்கப்பட்டு இருந்தனர். கும்பாபிஷேக நாளில் பொதுமக்கள் அயோத்திக்கு வர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஏற்கனவே பாஸ் பெற்ற வாகனங்களுக்கு மட்டுமே அயோத்திக்குள் நுழைய அனுமதி தரப்பட்டது. மற்ற வாகனங்களை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
நிர்மலா சீதாராமன்: இருப்பினும், இந்த நிகழ்வை நாடு முழுக்க நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அதன்படி தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் கோயிலில் நடக்கும் நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி காஞ்சிபுரத்தில் உள்ள கோயிலில் ராமர் கோயில் நிகழ்வை ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இருப்பினும், அதற்கு முறையான அனுமதி பெறவில்லை என்று போலீசார் நேற்று இந்த திரைகளை அகற்றினர்.
இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் நேரலை ஒளிபரப்பு மற்றும் பஜனை நிகழ்வுகளுக்கு போலீசார் அனுமதி தேவையில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து மீண்டும் காமாட்சி அம்மன் கோவிலில் எல்இடி திரை பொருத்தப்பட்டு அயோத்தி நிகழ்வை நேரலையில் ஒளிபரப்ப தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பொதுமக்களுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் கலந்து கொண்டார். அப்போது ஒரு கட்டத்தில் மிகவும் எமோஷனலான நிர்மலா சீதாராமன், கண் கலங்கினார். அதன் பின்னர் கண்களில் நின்ற நீரைத் தனது புடவையால் துடைத்துக் கொண்டு அயோத்தி கும்பாபிஷேக நிகழ்வைப் பார்த்தார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்கலங்கிய வீடியோ இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications