ஆன்மீகத்திற்கு எதிரான கட்சி ஆளவே கூடாது! "எல்லாம் கோழைத்தனம்.." நிர்மலா சீதாராமன் சரமாரி தாக்கு
சென்னை: சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், திமுகவைக் கடுமையாகச் சாடினார். மேலும், மதத்தை எதிர்ப்போருக்கு வாக்களிக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
பிரபல யூடியூப் சேனலான சாணக்கியா டிவியின் 5ஆம் ஆண்டு விழாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் திமுகவைக் கடுமையாக விமர்சித்துப் பேசிய அவர், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியையும் அவர் சாடினார்.

நிர்மலா சீதாராமன்: பிரியாணி பொட்டலத்திற்கும் பணத்திற்கும் வாக்களித்தால் எந்தவொரு நாடும் வல்லரசு இல்லை.. புல்லரசு கூட ஆக முடியாது என்றும் விமர்சித்த அவர் நாட்டுக்காக உழைக்கும் கட்சி நேர்மையான தலைவர்கள் இருக்கும் கட்சிக்குத் தான் பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் சாடினார். மேலும், குடும்பத்தைக் காக்கும் கட்சிகளால் இந்த நாட்டிற்கு எந்த பலனும் இல்லை என்ற அவர் போதைப் பொருள் ஆட்சியை இப்படியே விட்டு வைக்கப் போகிறீர்களா என்றும் கேள்வி எழுப்பினார்.
அந்த நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசுகையில், "ஒரு ஊழல் இல்லாமல் 10 ஆண்டு பாஜக ஆட்சி நடந்துள்ளது. அதற்கு முந்தைய 10 ஆண்டுகளில் தினமும் ஒரு ஊழல் நடந்து கொண்டு இருந்தது. ஊழல் இல்லை என்பதை இங்கே மிகப் பெரிய விஷயமாக இருக்கிறது. ஆனால், முன்பு ஊழல் நடக்காமல் இருந்ததே இல்லை.. எனக்கெல்லாம் 1.76 லட்சம் கோடி ரூபாய் என்றால் அவ்வளவு தொகையா என இருந்தது. நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்த போது ஊழல் குறித்த தகவல்களைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதை மிகவும் கடினமாக இருந்தது.
மோடியை நீக்குவதே நோக்கம்: இப்போது இருக்கும் எதிர்க்கட்சிகள் என்ன செய்கிறார்கள் எனப் பாருங்கள்.. 2047இல் நாட்டை வல்லரசு ஆக்குவோம் என்கிறார் மோடி.. உங்களால் முடிந்தால் அதற்கு முன்பு நாட்டை வல்லரசு ஆக்குவோம் என்று சொல்லுங்கள். அவரை நீக்குவது எல்லாம் ஒரு விஷயமாக இருக்கக் கூடாது. இப்போது அனைத்து எதிர்க்கட்சிகளும் இருக்கும் ஒரே விஷயம் மோடியை நீக்க வேண்டும் என்பது தான்.
மோடியை ஏன் நீக்க வேண்டும். அவர் என்ன செய்தார். ஊழல் செய்தாரா.. நமது நாட்டு மக்களுக்கு தானே நல்லது செய்தார். பாகிஸ்தான் மக்களுக்காக நல்லது செய்தார். எதிர்க்கட்சிகள் அரசியலை எப்படிச் செய்கிறார்கள் எனப் பாருங்கள். இப்போது லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், அதில் இந்தியா கூட்டணி ஒரு பொழுது போக்கு போலவே இருக்கிறது.
அந்த கூட்டணியில் இருக்கும் கட்சி என்ன செய்கிறார்கள் பாருங்கள்.. நமது நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் மதம் குறித்து கீழ்த்தரமாகப் பேசலாமா.. நீங்கள் எந்தவொரு மதத்தையும் பக்கத்தில் சேர்த்துக் கொள்ளவும் வேண்டாம். எந்தவொரு தாழ்வும் படுத்தக்கூடாது. எமர்ஜென்சி காலத்தில் சட்ட விரோதமாக நமது நாட்டின் அரசியலமைப்பில் மதச்சார்பற்ற அதாவது செக்குலர் என்ற வார்த்தையைச் சேர்த்துள்ளார்கள். அதை வைத்துக் கொண்டு நமது செக்குலர், செக்குலர் எனப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
இப்படிப் பேசலாமா: டெங்கு, மலேரியாவைப் போல மதத்தை நீக்க வேண்டும் என்கிறார்கள். இப்படிச் செய்யலாமா.. செக்குலர் எனச் சொல்பவர்கள் தான் இப்படிப் பேசுகிறார்கள். அது ஏன் ஒரு மதத்தை மட்டும் அழிக்கப் போகிறேன் என்கிறார்கள். முடிந்தால் அனைத்து மதங்களையும் சொல்லட்டும். அதற்குத் தைரியம் இல்லை. கோழைத்தனமாகப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இன்று ஆளும் கட்சியாக இருந்து கொண்டே பேசிக் கொண்டு இருக்கிறார்கள்..
ஆளும் கட்சியாக வரக்கூடாது: ஆன்மீகத்திற்கு எதிராக இருக்கக்கூடிய எந்தக் கட்சியும் எதிர்க்கட்சியாகவோ ஆளும் கட்சியாகவே வரக்கூடாது. கோயிலை அழிக்கக்கூடிய மதத்தை அழிப்பேன் என்று சொல்லும் கட்சிக்கெல்லாம் ஏன் வாக்களிக்கிறீர்கள். வாக்களிக்கும் முன்பு நன்கு யோசித்து வாக்களிக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ்












Click it and Unblock the Notifications