முக்கிய மூவ்.. தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நியமனம்!
சென்னை: தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இணை பொறுப்பாளர்களாக அர்ஜூன் ராம் மேக்வால், முரளிதர் மோஹால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக பொறுப்பாளர்கள், இணை பொறுப்பாளர்கள் நியமனம் செய்தது பாஜக.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக, வரும் தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்பதில் தீவிரமாக செயல்படுகிறது. தற்போதே தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ள பாஜக , வலுவான கூட்டணியை அமைக்க முடிவு செய்துள்ளது.

பியூஸ் கோயலுக்கு பொறுப்பு
இத்தகய சூழலில்தான் பியூஸ் கோயல் நியமனம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சராக உள்ள பியூஸ் கோயல், மகாராஷ்டிராவை சேர்ந்தவர். 61 வயதான பியூஸ் கோயல் பாஜகவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
பியூஸ் கோயல் தேர்தல் வியூகம் வகுப்பதில் வல்லவராக அறியப்படுகிறார். இதற்கு முன்பு பியூஸ் கோயல் தமிழக பாஜக பொறுப்பாளராக இருந்துள்ளார். அதிமுக தங்கமணி, வேலுமணி ஆகியோருடன் கடந்த காலங்களில் பல முறை மீட்டிங் நடத்தியவர். ஜெயலலிதாவுக்கு பிந்தைய அதிமுக - பாஜக கூட்டணியை ஷேப் செய்ததில் முக்கியமானவராக இருந்தார்.
ஜெயந்த் பாண்டா நீக்கம்
இந்த நிலையில் தான் ஏற்கன்வே தமிழக பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஜெய்ந்த பாண்டாவுக்கு பதிலாக பியூஸ் கோயலையே நியமித்துள்ளது பாஜக தலைமை. ஜெய்ந்த் பாண்டா இவ்வளவு நாட்களாக தமிழக பாஜக பொறுப்பாளராக இருந்தும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் கூட்டணியில் வேறு கட்சிகள் சேர்க்கப்படாமலும் இருந்தது. இதையடுத்து தான் அவரை நீக்கிவிட்டு பியூஸ் கோயல் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோன்று தேசிய அளவிலும் பல்வேறு தேர்தல்களில் பியூஸ் கோயல் பங்களித்துள்ளார். இந்த சூழலிதான் பியூஸ் கோயல் களமிறக்கப்பட்டுள்ளார். பியூஸ் கோயல் தவிர மேலும் இரண்டு இணைபொறுப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இணை பொறுப்பாளர்களாக அர்ஜூன் ராம் மேக்வால், முரளிதர் மோஹால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
50 இடங்களில் போட்டியிட திட்டம்
அதிமுகவுடன் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்பதில் பாஜக திட்டவட்டமாக உள்ளது. தற்போது பாஜகவிற்கு தமிழகத்தில் 4 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர். கடந்த தேர்தலை போன்று இல்லாமல் இந்த முறை எப்படியாவது 50 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட பாஜக திட்டமிட்டுள்ள நிலையில், அதிமுகவிடம் கூட்டணி பேரம் பேசுவது உள்ளிட்டவற்றில் தேர்தல் வியூகத்தில் அனுபவம் பெற்றவர் என்ற அடிப்படையில் பியூஸ் கோயல் நியமனம் செய்யப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
-
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம்












Click it and Unblock the Notifications