கூட்டணியில்… இன்னும் பல கட்சிகள் வர உள்ளன… பொன். ராதாகிருஷ்ணன் தகவல்
சென்னை:அதிமுக,பாஜக ,பாமக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் சேரும் வாய்ப்பு இருப்பதாக மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மே மாதம் நடைபெறும் லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் உள்ள அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் சுறுசுறுப்பாகி உள்ளன. அதிமுக, பாஜக, பாமக கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. அதிமுக தலைமையிலான இந்த கூட்டணியில் பாமகவுக்கு 7 லோக்சபா சீட்களும், ஒரு மாநிலங்களவை சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் பாஜகவுக்கு 5 சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டணியில் தேமுதிகவை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இருப்பினும், பாமகவை விட கூடுதலாக... தொகுதிகள் வேண்டும் என்று தேமுதிக முரண்டு பிடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
திமுக. காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அவைகளுடன் கை கோர்க்கும் மற்ற கட்சிகள் குறித்து விரைவில் இறுதி அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அதிமுக,பாஜக ,பாமக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் சேரும் வாய்ப்பு இருப்பதாக மத்திய இணை அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுக - பாஜக கூட்டணியில் பல கட்சிகள் சேர வாய்ப்புள்ளது. தேமுதிகவை சேர்க்க தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் நல்ல முடிவு வெளிவரும் என்று அவர் கூறினார்.
-
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்!












Click it and Unblock the Notifications