பலரும் அறியாத பிக்பாஸ் பவா செல்லத்துரை மறுபக்கம்.. தெரியாம விமர்சிக்காதீங்க - இவ்ளோ செய்திருக்காரா?
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று இருக்கும் எழுத்தாளரும் கதை சொல்லியுமான பவா செல்லுத்துரையின் மறுபக்கம் குறித்து எழுத்தாளர் ஆதிஷா வினோத் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 7 வது சீசன் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கியது. இதில் பிரபல கதை சொல்லியும் எழுத்தாளரும் நடிகருமான பவா செல்லத்துரை கலந்துகொண்டு இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் அதிக வயதுடைய போட்டியாளராக பார்க்கப்படும் பவா செல்லத்துரையின் நிதானமான செயல்பாடுகள், பேச்சுகளை வைத்து 20K கிட்சுகள் அவரை பூமர் என்று விமர்சித்து வருகிறார்கள்.

ஆனால், அவரோ தனது எழுத்துக்கள், பேச்சுக்கள் மூலம் வெளியில் பூமர்தனமான பெண் அடிமைத்தனம், ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றை எதிர்த்து வந்தவர். திருவண்ணாமலையை சேர்ந்த 61 வயது எழுத்தாளரான பவா செல்லத்துரை பல எழுத்தாளர்களின் சிறுகதைகள், நாவல்களை கதையாக சொல்லி, "கதை சொல்லி" என்று புகழ்பெற்றவர்.
7 புத்தகங்களை எழுதி இருக்கும் இவர், பூலோகம் படம் தொடங்கி அண்மையில் வெளியான ரெஜினா, பரம்பொருள் படங்களிலும் நடித்து இருக்கிறார். சூர்யாவின் ஜெய்பீம் படத்தில் கம்யூனிச தலைவராக இவர் நடித்து இருப்பார். ஜோக்கர், சீதகாதி, வெந்து தணிந்தது காடு, பேரண்பு உள்ளிட்ட பெரிய படங்களிலும் இவர் நடித்து இருக்கிறார்.
இந்த நிலையில் இவரை பற்றி அறியாமல் விமர்சிப்பவர்களுக்கு எழுத்தாளர் ஆதிஷா ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அதில், "பவா செல்லதுரை என்பவரை வெறும் யூடியூபில் கதை சொல்லியாக திரைப்பட நடிகராக மட்டுமே அறிந்தவர்கள் அவரைப் பற்றி மோசமாக விமர்சனம் வைப்பது சரியான செயல் அல்ல.
அவர் எழுத்தாளர் மட்டுமல்லாது சிறந்த இலக்கிய ஆர்வலர், தேர்ந்த வாசிப்பாளர். பவா கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக எத்தனையோ இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து அவர்களை சிறந்த படைப்பாளர்களாக மாற்றி உள்ளார். தமுஎசவுடன் இணைந்து அவர் முன்னெடுத்த கலை இரவுகள் ஆயிரக்கணக்கானவர்களை இலக்கியத்தின் பக்கமும் மாற்று கலைகளின் பக்கமும் கொண்டு வந்திருக்கிறது. மேடை அமைத்துக்கொடுத்திருக்கிறது.
வாசிப்பை பரவலாக்க அவர் மேற்கொள்ளும் உழைப்பு, இளைஞர்களிடம் வாசிப்பு பழக்கத்தை கொண்டு சேர்க்க மேற்கொள்ளும் முயற்சிகள் ஏகப்பட்டது. இன்றும் இலக்கிய ஆர்வமுள்ள யாருக்கும் தன் வீட்டின் கதவுகளை திறந்து வைத்திருப்பவர் பவா. புத்தகங்கள் வாங்க காசில்லாவிட்டாலும் எடுத்துட்டு போ என அனுப்புகிறவர்.
வம்சி பதிப்பகத்தின் பதிப்பாளராக மலையாளத்தில் இருந்து தமிழுக்கு எத்தனையோ நல்ல படைப்புகளை மொழிபெயர்ப்பில் கொண்டு வந்திருக்கிறார். அவருடைய கதை சொல்லும் முறையில் விமர்சனம் இருக்கலாம். அவருடைய நண்பர்களோடு முரண் படலாம், அவர் எழுதியதை கூட இலக்கியமில்லை என நிராகரிக்கலாம்.
பாராட்டுகளைப் போலவே விமர்சனங்களையும் புன்னகையோடு எடுத்துக்கொள்கிற ஆள்தான் பவா. அதற்காக அவரையே முற்றிலுமாக நிராகரிப்பது அவருடைய எழுத்துகளை படிக்காமலேயே அவர் எழுத்து குறித்து அவதூறு பரப்புவதும் சரியில்லை. பவா பிக்பாஸ் வீட்டுக்குள் போவதும் போகாமல் இருப்பதும் அவருடைய விருப்பம்.
அங்கே அவருக்கு எது நிகழ்ந்தாலும் அதற்கு அவரே பொறுப்பு. எழுத்தாளன் என்றால் இப்படி இப்படிதான் இருக்கவேண்டும் என்கிற எந்த கட்டாயங்களும் இல்லை. ஆனால் அவர் எங்கு சென்றாலும் எதை செய்தாலும் இலக்கியத்தை படித்த புத்தகங்களை பேசக்கூடியவர். லட்சக்கணக்கானோர் பார்க்கிற நிகழ்ச்சியில் கொஞ்சம் நூல்கள் பற்றியும் பேசிட்டுதான் போகட்டுமே." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications