Tamil Nadu Lock down: எதற்கெல்லாம் தளர்வுகள் நீட்டிக்கப்படலாம்...நீக்கப்படலாம்!!
சென்னை: தமிழ்நாட்டில் பொது முடக்கத்தில் இருந்து எது, எதற்கு தளர்வுகள் அறிவிக்கலாம் என்பது குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். மதியம் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். பின்னர் தளர்வுகள் குறித்த அறிவிப்பை வெளிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமலில் இருக்கிறது. ஒவ்வொரு கட்டமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மாநில அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது.

ரயில்கள் இயக்கம்
தற்போது போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து மற்றும் தனியார் பஸ்கள் இயங்குவதில்லை. ரயில்கள் இயங்குவதில்லை. இவற்றில் இன்று தளர்வுகள் அறிவிக்கப்படுமா அல்லது நீட்டிக்கப்படுமா என்பது தெரிந்துவிடும். இன்னும் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா தொற்று குறையவில்லை. அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னைக்கு மக்கள் வந்து கொண்டு இருப்பதால், கொரோனா தொற்று விகிதம் அதிகரித்து வருகிறது.
பஸ்கள் இயக்கப்படுவது குறித்து முக்கிய முடிவு இன்று எடுக்கப்படும் என்று தெரிகிறது. முன்பு போல் மண்டலங்களுக்குள் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

கர்நாடகாவில் ரத்து
இதற்கிடையே இ-பாஸ் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டு இருந்தது. மத்திய அரசின் அறிவிப்பையும் மீறி தமிழகத்தில் இ பாஸ் கட்டுப்பாடு அமலில் இருக்கிறது. இதற்கு பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கர்நாடகா மற்றும் புதுச்சேரியில் இ பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் அனைவருக்கும் திறந்து விடப்பட்டுள்ளது.

வெளிமாநில வாசிகள்
இந்த நிலையில் தமிழகத்தில் இ பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படும் என்று நம்பப்படுகிறது. அதேபோல், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.

ஆட்டோ டாக்சி
சென்னை மெட்ரோ ரயில்கள் குறைந்த அளவில் இயக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆட்டோக்கள், டாக்சிகளை இயக்குவதற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருந்த நிலையில் இதற்கு தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.

கடை திறப்பு நேரம்
தற்போது ஞாயிற்றுக் கிழமைகளில் மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்ப்பதற்காக முழு முடக்கம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் தளர்வுகள் இருக்கலாம். கடை திறப்பு நேரம் நிபந்தனைகளுடன் விதிக்கப்படலாம்.

நோ ஏசி
திரையங்குகள் திறக்கப்படுவது குறித்தும் இன்று முடிவு செய்யப்படலாம். இதுவரை அனுமதியில்லை. பெரிய அளவில் திரையரங்கு உரிமையாளர்கள் இழப்பை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. திரையரங்குகளில் ஏசி இயக்க முடியாது என்பதால் மேலும் ஒரு மாதத்துக்கு அனுமதி மறுக்கப்படும் என்றே கூறப்படுகிறது.

வழிபாட்டு தளங்கள்
பள்ளி, கல்லூரிகளை திறப்பது இல்லை என்று ஏற்கனவே கல்வித்துறை உறுதிபடுத்தியுள்ளது. எனவே இந்த முடிவில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. சிறிதளவு வருமானம் இருக்கும் வழிபாட்டு தளங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெரிய தளங்களுக்கும் அனுமதி வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

கோயம்பேடு காய்கறி சந்தை
கோயம்பேடு காய்கறி சந்தை திறக்கப்பட வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்து இருந்தனர். இதன்படி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு துணை முதல்வர் பன்னீர் செல்வம் அங்கு நேரில் சென்று பார்வையிட்டார். ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

ஜிம் யோகா
பூங்காக்கள், அழகு நிலையங்கள், ஜிம் ஆகியவை திறப்பது குறித்தும் இன்று அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிம், யோகா, உடற்பயிற்சி மையங்களில் ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தளர்வுகள் இருக்குமா
பார்களில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் நிபந்தனைகளுடன் தளர்வுகள் இருக்கலாம். உணவு விடுதிகளில் ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கும் நிபந்தனைகள் உள்ளது. இதில் தளர்வுகள் இருக்கலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications