அடுத்த அதிரடி.. உன்னாவ் வன்புணர்வு வழக்கில் விசாரணை நீதிபதியை அறிவித்தது சுப்ரீம் கோர்ட்!
உன்னாவ் பாலியல் வன்புணர்வு மற்றும் மர்ம மரணங்கள் தொடர்பான ஐந்து வழக்குகள் டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது.
சென்னை: உன்னாவ் பாலியல் வன்புணர்வு மற்றும் மர்ம மரணங்கள் தொடர்பான ஐந்து வழக்குகள் டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை உச்ச நீதிமன்ற தற்போது வெளியிட்டுள்ளது.
உன்னாவில் நடந்த பாலியல் வன்புணர்வும் அதை தொடர்ந்த மர்ம கொலைகளும் தற்போது மிக முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கார் இதனால் கடுமையான நெருக்கடியில் சிக்கி உள்ளார்.

2018 ஏப்ரலில் உத்தர பிரதேசத்தின் உன்னாவில் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் மீது பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணை இத்தனை நாட்களாக நடந்து வருகிறது. தற்போது இதில் உச்ச நீதிமன்றம் சாட்டையை சுழற்றி உள்ளது.
இந்த வழக்கில் பெண்ணின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். பாதிக்கப்பட்ட பெண், அவரது தாயார், வழக்கறிஞர் மற்றும் உறவினர்கள் வாகனத்தில் செல்லும் போது அந்த வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் பெண்ணின் தாயார் உள்ளிட்ட 2 பேர் பலியாகினர்.
அந்த பெண் உட்பட இரண்டு பேர் தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த வழக்கை இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விசாரித்தார். இதன் முடிவில் உன்னாவ் கொடூரம் தொடர்பான அனைத்து வழக்குகளும் லக்னோ சிபிஐ நீதிமன்றத்தில் இருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளது.
அதோடு, 45 நாட்களில் இதில் தீர்ப்பு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த அதிரடியாக உன்னாவ் பாலியல் வன்புணர்வு மற்றும் மர்ம மரணங்கள் தொடர்பான ஐந்து வழக்குகள் டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தற்போது அறிவித்துள்ளது.
டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் தர்மேஷ் சர்மா நீதிபதியாக உள்ளார். இவரின் தலைமையின் கீழ்தான் இந்த 5 வழக்குகளும் இனி விசாரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications