Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இயற்கைக்கு மாறான உறவு.. மனைவி தந்த புகாரில் கணவருக்கு பெரிய நிம்மதி.. அதிரடி காட்டிய நீதிபதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கணவன்-மனைவிக்கு இடையே நடக்கும் வாய்வழி மற்றும் ஆசனவாய் உடலுறவு உள்ளிட்ட பாலியல் செயல்கள், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377-இன் கீழ் "இயற்கைக்கு மாறான குற்றங்களாகாது" என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கின் பின்னணி மற்றும் தீர்ப்பின் விவரம் பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணைக் கொடுமை, உடல்ரீதியான தாக்குதல் மற்றும் கணவர் தன்னை கட்டாயப்படுத்தி இயற்கைக்கு மாறான பாலியல் செயல்களில் (Oral and Anal sex) ஈடுபடுத்தியதாகப் புகார் அளித்தார்.

Unnatural Sex Case MPHigh Court Section 377 Legal News Court Verdict Indian Penal Code Marital Rights Tamil News Husband Wife case Justice Milind Ramesh Bhind News Law And Justice Breaking News Tamil Court Order

இதன் அடிப்படையில், 2023ம் ஆண்டில் கணவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 377 (இயற்கைக்கு மாறான குற்றங்கள்), 498-A (கொடுமை), 354 (பெண் மீதான தாக்குதல்) மற்றும் வரதட்சணைத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு (FIR) பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கணவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி மிலிந்த் ரமேஷ் பட்கே தலைமையிலான அமர்வு, மிக முக்கியமான சட்ட விளக்கத்தை அளித்துள்ளது.

வழக்கும் பின்னணியும்

பாதிக்கப்பட்ட பெண் தன்னுடைய புகாரில், "என்னுடைய கல்யாணத்தின்போது போதுமான வரதட்சணை வழங்கப்பட்டது. ஆனாலும் கணவரும், அவரது குடும்பத்தினரும் கூடுதல் பணமும், ஒரு பைக்கும் கேட்டுத் தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர்.

அதுமட்டுமல்லாமல் என்னுடைய கணவர் என்னை மிரட்டி, உடல்ரீதியான வன்முறையைப் பயன்படுத்தி, மிகுந்த வலி மற்றும் வேதனையை தரக்கூடிய கட்டாய பாலியல் செயல்களில் ஈடுபடுத்தினார்" என்று மனுவில் அந்த பெண் குற்றம் சாட்டினார்.

இயற்கைக்கு மாறான உறவு

இந்த செயல்கள் "'இயற்கைக்கு மாறானவை" எனக் குறிப்பிட்டு, கணவர் மீது பிரிவு 377-இன் கீழ் வழக்குப் பதியப்பட்டது. இந்த வழக்கை ஆய்வு செய்த நீதிபதி, இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 375 மற்றும் 377 ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை விளக்கினார்.

"ஆசனவாய் மற்றும் வாய்வழி உடலுறவு போன்ற செயல்களை உள்ளடக்கிய பாலியல் வன்கொடுமையின் விரிவாக்கப்பட்ட வரையறை மற்றும் திருமண உறவுகளுக்கு ஆதரவான சட்டப்பூர்வ விதிவிலக்கு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, திருமண உறவு நீடிக்கும் காலத்தில் கணவன்-மனைவிக்கு இடையே நிகழும் அத்தகைய செயல்களுக்கு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377-இன் கீழ் குற்றம் சாட்ட முடியாது.

நீதிபதி அதிரடி தீர்ப்பு

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375-இன் விதிவிலக்கு 2-இன் படி, ஒரு கணவன் தனது மனைவியுடன் (சிறுமி அல்லாதவர்) கொள்ளும் உடலுறவு அல்லது பாலியல் செயல்கள் கற்பழிப்பாகாது. இதன் மூலம், அத்தகைய செயல்களைக் கற்பழிப்பாக வழக்குத் தொடரும் நோக்கத்திற்காக, திருமணத்திற்குள் சம்மதம் என்ற அம்சம் சட்டப்படி முக்கியமற்றதாகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377-ன் கீழ் ஒரு குற்றம் நடந்ததை மேலோட்டமாக வெளிப்படுத்தவில்லை" என்று நீதிபதி தீர்ப்பளித்தார்..

ஒரு செயல் கற்பழிப்பு என்ற வரையறைக்குள் வராதபோது, அதை மீண்டும் பிரிவு 377ன் கீழ் கொண்டு வந்து "இயற்கைக்கு மாறான குற்றம்" என வழக்குத் தொடர முடியாது. திருமண உறவு நீடிக்கும் காலத்தில் கணவன்-மனைவிக்கு இடையே நிகழும் பாலியல் செயல்களை, அவை எத்தகைய தன்மையைக் கொண்டிருந்தாலும், பிரிவு 377ன் கீழ் தண்டிக்க முடியாது" என்ற நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, கவனம் பெற்று வருகிறது.

பெண்ணின் முரண்பாடு வாக்குமூலம்

இதனால், மனுதாரரான கணவர் மீது சுமத்தப்பட்ட பிரிவு 377ன் கீழான குற்றச்சாட்டுகளை மட்டும் நீதிமன்றம் ரத்து செய்தது. இருந்தாலும், அந்தப் பெண் சுமத்தியுள்ள வரதட்சணைக் கொடுமை (498-A), தாக்குதல் (354) மற்றும் பிற கொடுமைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் தலையிட நீதிமன்றம் மறுத்துவிட்டது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தில் உள்ள முரண்பாடுகள் மற்றும் மருத்துவ ஆதாரங்கள் போன்றவற்றை முழுமையான விசாரணை மூலமே உறுதி செய்ய முடியும் என்பதால், மற்ற பிரிவுகளின் கீழ் வழக்கு விசாரணை தொடரும் என்று நீதிபதி உத்தரவிட்டார்...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+