புருஷன் எனக்குத்தான்! பஞ்சாயத்துக்கு போன மனைவிகள்: வாரம் 3 நாள் அவளுக்கு? கணவனின் வினோத டைம் டேபிள்
சென்னை: சொத்து தகராறு, நிலப்பிரச்சனை என பஞ்சாயத்துகளை பார்த்து பழகிய மக்களுக்கு, உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் நடந்த அந்த பஞ்சாயத்து ஒரு மிகப்பெரிய ஆச்சரியத்தை தந்து வருகிறது.. இப்படிகூட எங்காச்சும் நடக்குமா? என்று ஒவ்வொருவரும் மூக்கின் மேல் விரலை வைத்துள்ளனர்.. சம்பந்தப்பட்ட வழக்கில், அனைவரும் சேர்ந்து ஒரு டைம் டேபிள் போட்டிருக்கிறார்கள்.. அது என்ன தெரியுமா?
ராம்பூர் மாவட்டம் நாக்லியா அகில் என்ற கிராமத்தை சேர்ந்த ஒரு நபருக்கு வீட்டில் பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.. ஆனால் சில நாட்கள் கழித்து, அந்த கணவர், வேறு ஒரு பெண்ணையும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்..

ஒரே வீட்டில் இரண்டு மனைவிகளுடன் குடி வைத்து, குடித்தனம் நடத்தி வந்தார்.. ஆரம்பத்தில் 2 மனைவிகளும் ஒற்றுமையாகவே இருந்தனர்.. ஆனால் நாட்கள் செல்ல செல்ல, "கணவர் எனக்குத்தான் சொந்தம்" என்று இரண்டு மனைவிகளும் போர் கொடி தூக்கத் தொடங்கினர்.
இரண்டு மனைவிகள் - ஒரு கணவன்
வீட்டில் ஆரம்பமான இந்த சண்டை தெருவுக்கு வந்தது.. கடைசியில் கிராம பஞ்சாயத்துக்கு சென்றது.. பிறகு பொறுமை இழந்த 2 பெண்களும் கணவரை அழைத்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கே சென்றுவிட்டனர்.
"இவர் யாருக்குச் சொந்தம் என்று நீங்களே சொல்லுங்க" என போலீசாரிடம் முறையிட்டனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், இது குடும்ப பிரச்சனை என்பதால் கிராமப் பெரியவர்களே பேசித் தீர்த்துக்கொள்ளட்டும் என பஞ்சாயத்துக்கு அனுப்பி வைத்தனர்.
பிறகு கிராமத்தின் பெரியவர்கள் முன்னிலையில், அனல் பறக்கும் விவாதங்கள் நடந்தன. இரு பெண்களுமே கணவரை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை.. இதனால் பஞ்சாயத்தில் முடிவு எட்டப்படவில்லை..
வினோத டைம் டேபிள்
இதனால் ஊர் பெரியவர்கள் ஒரு வினோதமான முடிவை அறிவித்தனர். அதன்படி வாரத்தின் 7 நாட்களும் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. திங்கள், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய முதல் 3 நாட்கள் கணவர் முதல் மனைவியின் வீட்டில் இருக்க வேண்டும். அடுத்த 3 நாட்களான வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளை 2வது மனைவியுடன் கழிக்க வேண்டும்.
சரி, மீதமுள்ள அந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை? அதற்கும் ஒரு சுவாரஸ்யமான தீர்வு சொல்லப்பட்டது. வாரத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை மட்டும் அந்த நபருக்கு "சுதந்திர தினம்".. அதாவது அன்று அவர் தனது விருப்பப்படி எந்த மனைவியுடன் வேண்டுமானாலும் இருக்கலாம் அல்லது தனியாகவும் இருக்கலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த முடிவை கணவர் மற்றும் இரண்டு மனைவிகளும் ஏற்றுக்கொண்டனர். இது வெறும் வாய் வார்த்தையாக மட்டுமல்லாமல், ஒரு ஒப்பந்தமாக எழுதப்பட்டு 3 பேரும் சேர்ரந்து அதில் கையெழுத்திட்டனர்.
ஆச்சரியம் - பஞ்சாயத்து
இந்த வினோத "டைம் டேபிள்" ஒப்பந்தம்தான் சோஷியல் மீடியாவில் வைரலாகி பலரது கவனத்தையும் பெற்று வருகிறது. இதை பார்த்து ஏராளமான நெட்டிசன்கள் இந்த குடும்பத்தினரை கிண்டலடித்து வருகிறார்கள்.. இப்படிப்பட்ட தீர்ப்பை, எங்குமே கேள்விப்பட்டதில்லை, ஒற்றுமையாக இருக்க டைம் டேபிளா? என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்..
ஆனாலும் ஊர் மக்கள் எந்த விமர்சனத்தை பற்றியும் கவலைப்படவில்லை.. ஒருவழியாக இந்த வீட்டு பிரச்சனை தீர்ந்ததே என்று நிம்மதி அடைந்து உள்ளார்களாம்..!!












Click it and Unblock the Notifications