ஓய்வூதியதாரர்களுக்கு இனிப்பு செய்தி.. இன்றே வருகிறதாம் ஹேப்பி நியூஸ்.. ரெடியா இருங்க மக்களே
சென்னை: அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி வந்துள்ளது.. இதுகுறித்த பலன்கள், இன்று அல்லது நாளைக்குள் கிடைத்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
அமைப்பு சாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்புக்காக மத்திய, மாநில அரசுகளால் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் செயல்படுத்தப்படுகிறது. தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் பல்வேறு நலவாரியங்கள் செயல்பட்டு வருகின்றன.. இதற்கான நிதியுதவிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் நல வாரியம், சலவை தொழிலாளர்கள் நல வாரியம், முடித்திருத்துவோர், தையல் தொழிலாளர்கள், கைவினைத் தொழிலாளர்கள், பனைமரத் தொழிலாளர்கள், ஓவியர்கள், பொற்கொல்லர், மண்பாண்ட தொழிலாளர்கள், வீட்டுப் பணியாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள் உள்ளிட்ட 18 நல வாரியங்கள் செயல்பட்டு வருகிறது.
நிவாரணம்: இதில் பதிவு பெற்ற அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, இயற்கை மரணம், ஈமச்சடங்கு நிவாரணம், விபத்து மரணம், விபத்து ஊனம், பணியிடத்தில் விபத்து மரணம், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் கட்டுமான தொழிலாளர் தின வீட்டு வசதி திட்டம் ஆகிய நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த அக்டோபர் 31ம் தேதி நிலவரப்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 70,252 நபர்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 61,360 நபர்களும் என மொத்தம் 1,31,612 நபர்கள் இந்த 18 நல வாரியத்தில் பதிவு செய்திருந்தனர்.
1000 ரூபாய்: இந்நிலையில், தமிழக அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தின் கீழ், ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களுக்கு, கடந்த 5 மாதங்களாகவே ஓய்வூதிய தொகை வழங்கப்படாமல் உள்ளது.. அதாவது, இந்த வாரியத்தில் பதிவு செய்து, 60 வயதை எட்டியவர்களுக்கு, மாதம் 1,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
ஆனால், கடந்த மார்ச் மாதத்தில் இருந்ததே, அரசு ஓய்வூதியம் வழங்கப்படாமல் உள்ளது. இந்த ஓய்வூதியம் குறித்த அறிவிப்புதான் தற்போது வரஉள்ளதாக சொல்கிறார்கள்.
பெருத்த நம்பிக்கை: இது குறித்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தரப்பில் சொல்லும்போது, கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் தவிர, மற்ற வாரியத்தின் வழியே ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களுக்கு, காலாண்டுக்கு ஒரு முறை, அரசிடம் நிதி கேட்டு பெற்று வழங்கப்படுகிறது. அந்த வகையில், மார்ச் மாதத்தில் இருந்து, 3 மாதங்களுக்கு உரிய ஓய்வூதியத்தை வழங்க, அரசு அனுமதி தந்திருக்கிறது. எனவே, இன்று அல்லது நாளை இந்த நிதி வழங்கப்பட்டுவிடும் என்று நம்பிக்கை தந்துள்ளார்கள். ப்பு சாரா தொழிலாள
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications