வடக்கிலிருந்து 3 பேர் வருகிறார்களாம் பாண்டியா.. தாமரையை மலர வைக்க!
தமிழகத்திற்கு உபி முதல்வர் யோகி வரப்போவதாக கூறப்படுகிறது.
சென்னை: தமிழகத்தை 3 பேர் குறி வைத்து வட நாட்டில இருந்து இங்க வரப்போறங்க. அவங்க யார் தெரியுமா?
விரைவில் தேர்தல் வரப்போகிறது. இதற்காக எல்லா கட்சிகளும் தீவிரமாக களப்பணியில் இறங்கி உள்ளன. தேர்தலுக்கான பிரச்சாரத்தை எப்படியெல்லாம் முன்னெடுக்கலாம் என்று யோசனையில் இருக்கிறார்கள்.
அதிலும் ஒரு விளம்பரம் என்றாலே பாஜகதானே... இந்த முறை பிரச்சாரத்தின்போது எப்படியெல்லாம் விளம்பரங்களை மக்களிடம் கொண்டு செல்லலாம், புது புது ஐடியாக்கள் என்னென்ன, பிரச்சார யுக்திகள் என்னென்ன என்று பக்கா பிளானில் இறங்கி உள்ளது.

பாஜக தலைவர்கள்
இந்த நிலையில் ஒரு சூடான தகவல் பரவி வருகிறது. தமிழகத்தில் பிரச்சாரத்திற்கு 3 பேர் வரப்போகிறார்களாம். அந்த 3 பேருமே வடமாநில பாஜக தலைவர்கள்! அவர்கள், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், முன்னாள் மத்திய அமைச்சர் முரளி மனோஜர் ஜோஷி ஆகியோர்தான்!

தமிழகம்
இவர்களில் 2 முதல்வர்களும், தங்களது மாநிலத்தில் நடந்த தேர்தலின்போது, பிரச்சாரத்திற்கு என்னவெல்லாம் ஸ்கெட்ச் போட்டு மக்களிடம் கொண்டு சென்று, வெற்றி வாகை சூடினார்களோ, இப்போது அதையே தமிழகத்தில் களமிறக்க முடிவு செய்துள்ளார்களாம். மேலும் அந்தந்த மாநிலங்களில் தாங்கள் கொண்டு வந்துள்ள சிறப்பு மற்றும் மக்களிடம் பிரபலமான திட்டத்தையும் தமிழகத்தில் கொண்டு வருவது குறித்தும் பிரச்சாரம் செய்வார்கள் என்று சொல்லப்படுகிறது.

யோகி
அது மட்டுமில்லை.. சமீபத்தில் உபி முதல்வர் யோகி பிற மாநிலங்களில் செய்த பிரச்சாரத்தினால் வெற்றி பெற முடிந்ததாம். அதனால் அதே சென்ட்டிமென்ட்டுக்காக யோகியை தமிழகத்திற்கு வரவழைத்து பிரச்சாரம் செய்தால் வொர்க் அவுட் ஆகும் என்று பாஜக தலைமை நினைக்கிறதாம்.

பிரச்சாரம்
அதனால்தான் இந்த 3 பேரும் தமிழகத்துக்கு பாஜக சார்பில் பிரச்சாரம் செய்ய போவதாக ஒரு தகவல் வருகிறது. இவர்கள் 3 பேரும் வந்து தாமரையை மலர வைக்கிறார்களா என்று பார்ப்போம்.. ஆனா இந்த தாமரையை மலர வைக்க இன்னும் என்னெல்லாம் செய்யணும்னு தெரியலையே!
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications