மொத்தமாக மாறிப்போன தூத்துக்குடி ஏர்போர்ட்.. என்னென்ன வசதிகள் இருக்குன்னு பாருங்க? செம!
தூத்துக்குடி: ரூ.452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யபப்ட்ட தூத்துக்குடி விமான நிலையத்தினை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். மாலத்தீவில் இருந்து இரவு 7.30 மணிக்கு தூத்துக்குடி வந்த பிரதமர் மோடி, விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தினை திறந்து வைதத்தார். இந்த புதுப்பிக்கப்பட்ட விமான நிலையத்தில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன என்பதை இங்கு பார்க்கலாம்.
தூத்துக்குடியில் தொழில் வளர்ச்சிகளை மேலும் அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மத்திய, மாநில அரசு சார்பில் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த வகையில், தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ரூ.452 கோடி செலவில் விமான நிலைய விரிவாக்க பணி நடைபெற்று முடிந்தது.

என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன?
இரவு நேரத்திலும் விமானம் தரையிறங்கும் படியும், முதலில் 1,350 மீட்டர் நீளம் கொண்ட ஓடுபாதையானது இப்போது 3,115 மீட்டர் நீளம் கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது. இதேபோன்று ஒரே நேரத்தில் 5 ஏ.321 ரக விமானங்களை நிறுத்தக்கூடிய வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தினை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இன்று தூத்துக்குடி வருகை தந்த பிரதமர் மோடி விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தினை இரவு 7.50 மணியளவில் திறந்து வைத்தார். பிரிட்டன் மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு 4 நாட்கள் பயணமாக சென்ற பிரதமர் மோடி, 2 நாட்கள் பயணமாக தமிழகம் வருகை புரிந்துள்ளார். புதுப்பிக்கப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைத்த பிறகு, விமான நிலைய பயணிகள் முனையம் உள்ளிட்ட இடங்களை நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து திருச்சி புறப்பட்டு சென்றார். பிரதமர் மோடி திறந்து வைத்த விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன என்று பார்க்கலாம்.
3,115 மீட்டர் நீளம் கொண்ட ஓடுபாதை
* தூத்துக்குடி புதிய விமான நிலையம் சுமார் 17 ஆயிரத்து 341 சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
* புதிய விமான முனையத்தில் 5 விருந்தினர்கள் அறைகள், பெரிய உணவகம், சிற்றுண்டி கடைகள், மருந்தகம் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் உள்ளன.
* புதிய முனையத்தின் 4 வாயில்களும், 21 பயணிகள் செக்-இன் கவுன்டர்களும் உள்ளன.
* 1 மணி நேரத்துக்கு 1,440 பயணிகளை கையாலும் வகையில் அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 4 நட்சத்திர அந்தஸ்து பெற்ற பசுமை கட்டிடமாக அமைக்கப்பட்டுள்ளது.
* ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் பயணிகளை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
* இரவு நேரத்திலும் விமானம் தரையிறங்கும்படி வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
* 1,350 மீட்டர் நீளம் கொண்ட ஓடுபாதையானது இப்போது 3,115 மீட்டர் நீளம் கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது.
இணைப்பு சாலை
* தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் 1 கிமீ தூரத்துக்கு இணைப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது.
* 500 பயணி வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதிகள் உள்ளன.
* 2 விஐபி ஓய்வு அறைகள், 644 இருக்கைகள், 2 கன்வேயர்கள் பெல்ட்கள், 21 செக் இன் கவுண்டர்கள், 3 ஏரோ பிரிட்ஜ்கள், 4 நுழைவு வாயில்களுடன் இந்த புதுப்பிக்கப்பட்ட விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications