ஒற்றை ஓட்டு- டெபாசிட் இழப்பதில் பா.ஜ.க.தான் நம்பர் ஒன் கட்சி- கி.வீரமணி கடும் சாடல்
சென்னை: தேர்தல்களில் டெபாசிட் பணத்தை இழப்பதில் பாஜகதான் நம்பர் ஒன் கட்சி என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சாடியுள்ளார்.
இது தொடர்பாக கி.வீரமணி இன்று வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்றத் தேர்தல் (2019), சட்டமன்றத் தேர்தல் (2021) மற்றும் ஊராட்சி மன்றத் தேர்தல்கள் ஆகியவற்றில் தி.மு.க., தி.மு.க. கூட்டணியினர் பெற்ற வெற்றிகளை மேலும் பெருக்கிய வண்ணம் - திராவிட மாடல் ஆட் சிக்கு, தி.மு.க.வின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்குப் பேராதரவு தந்து - எதிர்த்து நின்ற கட்சிகளுக்குப் படுதோல்வியையே பரிசாக அளித்து, வரலாறு படைத்துள்ளனர் தமிழ்நாட்டு வாக்காளர் பெருமக்கள்.
கடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வாக்கு சதவிகிதத்தைக்கூட, இடங்களையோ எதிர்க்கட்சி வரிசையில் உள்ள அரசியல் கட்சிகளான அ.தி.மு.க., அதன் கூட்டணிக் கட்சிகள் தற்போது நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெறவில்லை. தமிழ்நாடு வாக்காளர்கள் அவர்களைப் புறக்கணித்த தோடு, புறந்தள்ளியும், நல்ல தீர்ப்பைத் தந்துள்ளதன்மூலம் - 9 மாத தி.மு.க. ஆட்சி - பார் போற்றும் ஆட்சியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சித் திகழுகிறது என்பதைப் பறையாற்றியுள்ளனர். இத்தேர்தலில் தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் ஊர்போற்றும் ஆட்சியின், நல்லாட்சி நாயகரின் மகுடத்தில் மேலும் பல வெற்றிகள் என்ற ஜொலிக்கும் வைரக்கற்களைப் பதித்து, திராவிடர் ஆட்சியின் மாட்சியின் பெருமையை உலகறியச் செய்யும் சான்றிதழ் வழங்கி, சரித்திரம் படைத்துள்ளனர்.

வெற்றிக்கான காரணங்கள்
இந்த வியத்தகு வெற்றிக்கு வித்தான முதலமைச்சர் அவர்களின் ஆட்சிச் சாதனைகள் - 1. அனைவருக்கும் அனைத்தும் என்ற சமூகநீதியின் பட்டாங்க செயலாக்கம். 2. பக்குவப்பட்ட தேர்தல் வியூகம், கூட்டணிக் கட்சிகளையும் 2019 முதலே அரவணைத்துச் சென்று, மதச்சார் பற்ற முற்போக்குக் கூட்டணியின் பலம் குன்றாமல் மேலும் வலுவடையச் செய்யும் விரிந்த மனப்பான்மை. 3. தி.மு.க. அமைச்சர்கள், செயல்வீரர்கள், பொறுப் பாளர்களின் கடினமான உழைப்பும், உத்வேகமும், கட்டுப்பாடு நிறைந்த அணுகுமுறைகளும். 4. எதிரணியினரின் பலத்தைக் குறைத்து மதிப் பிடாமல், வெற்றி என்ற இலக்கு நோக்கியே உழைத்து, செய்த பிரச்சாரம், கட்டமைப்புகளின் பலமான வீச்சு - திட்டமிட்ட செயலாக்கம்.

பொய் பிரசாரம் முறியடிப்பு
தாம் நேரிடையாக மக்களைச் சந்தித்துப் பிரச்சாரம் செய்தால் கரோனா கொடுந்தொற்று மேலும் பல்லாயிரம் பேருக்குப் பரவிடும் அபாயம் உண்டு என்று முதல மைச்சர் அவர்கள் பொறுப்புணர்ச்சியோடு சிந்தித்து, காணொலிமூலம் மாவட்டம் வாரியாக செய்த அரு மையான பிரச்சாரத்தின்மூலம் அவ்வப்போது எதிர்க் கட்சிகளின் அவதூறு பிரச்சாரத்திற்குத் தக்க பதிலடி கொடுக்கத் தவறவில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், அஞ்சி காணொலிமூலமே பேசுகிறார் என்று எதிர்க்கட்சித் தலைவரும், பா.ஜ.க. அண்ணாமலையும் அவதூறு பரப்பி வந்த நிலையில், சொன்னதைச் செய்வதும், செய்வதையே சொல்வதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சரித்திரம் என்பதை நன்கு புரிந்துகொண்ட மக்கள், எடுபடாத ஏகடியங்களுக்கு நல்ல தீர்ப்பின் மூலமே பதிலளித்து - அவர்களின் பொய்ப் பிரச்சாரத் திரையைக் கிழித்துத் தொங்கவிட்டார்கள்!

பாஜகவிடம் சரண்
அண்ணா பெயர் கொண்ட கட்சி என்பதையே அறவே அவர்கள் மறந்துவிட்டு, பா.ஜ..க.வின் ஊதுகுழலாகி, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதைப் பொருத்தமின்றி வரவேற்று, மாநில உரிமையை மண்டியிட்டு, பிரதமர் மோடியிடம் அடகு வைத்ததற்கு மக்களின் தக்க மறுப்பும், பதிலும்தான் இந்த பிரம்மாண்ட பெருவெற்றி! நீட் தேர்வு எதிர்ப்பில்கூட இரட்டை வேடம்; பா.ஜ.க.வின் பணத்தோட்டத்தை உலுக்கிவிட்டனர்! கூட்டணியில் கூட ரகசிய ஒப்பந்தம் - தற்காலிக நாடகம் - இச்சாயங்களை வெளுக்க வைத்தனர் தமிழ்நாட்டு வாக்காளர்கள்.

வீண் வாதங்கள்
முந்தைய சட்டப்பேரவைத் தேர்தலில் 4 தொகுதிகளை அ.தி.மு.க.வின் தயவில் பெற்றார்களே பா.ஜ.க. வினர், அந்தத் தொகுதிகளுக்குள்ள உள்ளாட்சி இடங் களைக்கூட இத்தேர்தலில் அவர்களால் பெற முடிய வில்லை என்பதைவிட, அவர்கள் கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போன்ற வீண் வாதத்திற்கு வேறு உதாரணம் வேண்டுமா? டில்லி பா.ஜ.க. ஒன்றிய அரசுக்கு சரணம் பாடுவதில் யார் முதலில் என்றுதான் போட்டி போட்டார்கள்; இராஜாவை மிஞ்சும் இராஜ விசுவாசிகளாக இத்தேர்த லின் போதும், பிரச்சாரத்தின்போதும் கொள்கைச் சூன்யங்கள் என்று தங்களை பாரறிய அறிவிப்பதுபோல் நடந்துகொண்டதைவிட பரிதாபம் வேறு உண்டா? எடப்பாடியையே பறிகொடுத்தார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார். சொந்தத் தொகுதியை இழந்தார் பணிவாளர் என்ற பவ்விய புருஷர்! சவால் விட்டவர்கள் தலை தொங்கும் நிலை! வேலும் பயன்படவில்லை; மணியும் பயன்பட வில்லை; சவால் விட்டவர்கள் தலை தொங்கும் நிலையை வாக்காளர்கள் தீர்ப்பின்மூலம் வழங்கி விட்டனர். வாகை சூடி நிற்கின்றன தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் - கம்பீரத்துடனும், கண்ணியம் குறை யாமலும்!

பாஜகவின் கனவு கலையும்
பா.ஜ.க. மொத்த வாக்கு சதவிகிதம் காட்ட, வாக்காளர்களைத் தேடுமுன், வேட்பாளர்களைத் தேடித் தேடி பணமாலையைச் சூட்டி, ஜாதி, மதவெறியை ஊட்டிப் பார்த்தது; பெரியார் மண் அதற்கு இடந்தரவில்லை. ஒரு பேரூராட்சியை - அவர்களின் செல்வாக்கு இருக்கிறது என்று பிதற்றித் திரியும் குமரி, கோவை, திருப்பூரில் பெற்றதுண்டா? தொடர் தோல்விகளுக்கான அச்சாரத் தோல்விகள் - அலை போன்ற இந்தத் தோல்விகள்! வெற்றி பெற்ற தி.மு.க. கூட்டணியினருக்கும், அதன் மூலகர்த்தாவான முதலமைச்சர்களிலேயே முதல் முதலமைச்சர் என்று ஓங்கு புகழ் கொண்ட நமது சமூகநீதிக்கான சரித்திர நாயகருக்கும் நமது வாழ்த்துகள்! வாணன் புகழ்க்கெல்லை வாழ்த்துவோர் நாவெல்லை! என்று தஞ்சைவாணன் கோவையில் ஒரு வரி உண்டு - முதலமைச்சரின் வெற்றியை நமக்கு நினைவூட்டுகின்றன. உள்ளாட்சி வெற்றி நாயகர்களே, தலைமையின் பெருமையை தகத்தகாய ஒளிவீசச் செய்யுங்கள்! எதிர்க்கட்சி நண்பர்களே, இனியாவது தமிழ்நாட்டு நலனில் ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பைத் தந்து, சறுக்கலைச் சரி செய்துகொள்ளுங்கள் - காவிக் கனவுகள் கலையட்டும்!
-
Annamalai: தமிழக சட்டசபை தேர்தல்.. ஒரு வழியாக பாஜகவின் "அந்த" பட்டியலில் இடம்பெற்ற அண்ணாமலை பெயர்! -
"அண்ணாமலை சட்டசபைக்குள் வரக்கூடாது என பிளான் போட்ட முக்கிய தலைகள்”.. போட்டு உடைத்த திருச்சி சூர்யா! -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
நம்மதான் ஜெயிக்கிறோம்.. கோவையில் செந்தில் பாலாஜி மாஸ் திட்டம்.. கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை -
Sellur Raju: பாஜகவுடன்தானே? பாகிஸ்தானுடனா கூட்டணி வைத்தோம்? ஆவேசமான செல்லூர் ராஜு! -
விஜய் மனதில் பாஜக இருக்கிறது.. அடித்து சொல்லும் குஷ்பூ.. காரணம் தெரியுமா? -
எச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவி? சென்னையில் உறுதி கொடுத்த பிரதமர் மோடி.. பாஜக மேலிடம் எடுத்த முடிவு! -
காலம் இருக்கு.. காட்சிகள் மாறும்! தேர்தலில் போட்டியிடாதது ஏன்? அண்ணாமலை கொடுத்த புது விளக்கம் -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஒரு சோர்ந்துபோன கூட்டணி.. புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்! -
அண்ணாமலைக்கு இந்த பவர்ஃபுல் போஸ்ட்டிங் தர்றாரா மோடி.. கோவை பிடிவாதம் உடைந்ததா? லாபமா? நஷ்டமா -
தேர்தல் பரப்புரையில்.. துரந்தர், கேரளா ஸ்டோரி, காஷ்மீர் ஃபைல்ஸ் பற்றி பேசிய மோடி! கேரளாவில் சலசலப்பு












Click it and Unblock the Notifications