ஈரானை சல்லி சல்லியாக நொறுக்கிய அமெரிக்கா.. இஞ்ச் இஞ்சாக சால்லடை போட்ட இஸ்ரேல்! எத்தனை தாக்குதல்?
நியூயார்க்: இஸ்ரேல், அமெரிக்க படைகள் ஈரான் மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில்,ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் இந்த தாக்குதல் காரணமாக மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஒரு வாரத்தில் ஈரானில் உள்ள 3,000க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, கடந்த வாரம் தொடங்கிய ராணுவ நடவடிக்கையின் போது ஈரானில் பல்வேறு முக்கிய இலக்குகள் குறிவைத்து தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஈரான் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த தாக்குதல்கள், மேற்காசியாவில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன.
மார்ச் 7 ஆம் தேதி அதிகாலை வளைகுடா பகுதியில் உள்ள சில அரபு நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் பஹ்ரைன், சவுதி மற்றும் அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அமெரிக்கா ஈரான் தாக்குதல்
கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை தொடங்கின. அந்த நடவடிக்கையின் போது ஈரானின் பல முக்கிய ராணுவ மற்றும் அரசியல் இலக்குகள் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்ளிட்ட சுமார் 50 உயர் அதிகாரிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஈரானும் பதிலடி நடவடிக்கையாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைத்தளங்கள் உள்ள வளைகுடா நாடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேல் ஈரான் போர்
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளும் தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த சூழலில் அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கை தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதில், "ஆபரேஷன் எபிக் ஃப்யூரி" என்ற பெயரில் நடத்தப்பட்ட நடவடிக்கையின் முதல் வாரத்திலேயே அமெரிக்கப் படைகள் ஈரானில் 3,000க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ட்ரம்ப் ஈரான் கருத்து
மேலும் இந்த நடவடிக்கையின் வேகம் குறையவில்லை என்றும், தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரங்களுக்கு நடுவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட கருத்துகளும் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளன. அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ஈரானுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்துவதற்கு முன் அந்த நாடு நிபந்தனையற்ற சரணடைதலை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஈரான் ஏவுகணை தாக்குதல்
நிபந்தனையற்ற சரணடைதலைத் தவிர ஈரானுடன் எந்த ஒப்பந்தமும் இருக்காது. எந்தவொரு ராஜதந்திர பேச்சுவார்த்தைகளும் தொடரும் முன் ஈரான் சரணடைய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும், குறிப்பாக இஸ்ரேல் உடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஈரானின் தற்போதைய தலைமை முழுமையாக மாற்றப்பட்டு, ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய தலைமையிடம் அதிகாரம் ஒப்படைக்கப்பட்ட பின்னரே அந்த நாட்டுடன் எந்த ஒப்பந்தத்தையும் பரிசீலிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
புதிய ஆயுத விற்பனை
கூடுதலாக அமெரிக்க நிர்வாகம் இஸ்ரேலுக்கு 151 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான புதிய ஆயுத விற்பனையையும் அங்கீகரித்துள்ளது. இந்த நடவடிக்கையும் மேற்காசியாவில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கக்கூடியதாக பார்க்கப்படுகிறது. அதே பதிவில், ஈரானில் நல்ல மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அந்த நாட்டை மீண்டும் முன்னேற்ற பாதைக்கு கொண்டு வர அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் முயற்சி மேற்கொள்வார்கள் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
-
அமெரிக்க போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்.. விமானியை உயிருடன் பிடித்து கொடுப்பவருக்கு பரிசு அறிவிப்பு -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
அமெரிக்காவுக்கு அடிமேல் அடி! சக்தி வாய்ந்த போர் விமானத்திற்கு நேர்ந்த கதி.. கெத்து காட்டும் ஈரான்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
கண்கள் சிவந்த டிரம்ப்.. அமெரிக்க ராணுவ தளபதி அதிரடியாக நீக்கம்! ஈரான் போரில் தடுமாறுவது தான் காரணம்? -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
அமெரிக்கா ஈரானை அடித்த அடி.. ஏழைகள் வயிற்றில் விழுது! கிடைக்காத கேஸ் சிலிண்டர்.. கடைகளுக்கு பூட்டு! -
இதுக்கு ஒரு எண்டே கிடையாதா.. கதறும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. ஈரான் போர் இந்திய இழந்தது என்ன..?












Click it and Unblock the Notifications