Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்காவோ.. பீகாரோ.. ஒரே மாதிரி மெசேஜ் கொடுத்த மக்கள்.. தெளிவா இருக்காங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அது அமெரிக்க அதிபர் தேர்தலோ.. அல்லது பீகார் சட்டசபை தேர்தலோ.. மக்களின் மன ஓட்டம் ஒரே திசையை நோக்கி இருக்கிறது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

Recommended Video

    Bihar Exit polls ஒவ்வொன்றும் என்ன சொல்கிறது ? | Oneindia Tamil

    பீகாரில் மூன்று கட்டங்களாக நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலையடுத்து சனிக்கிழமை மாலை எக்ஸிட் போல் கருத்துக்கணிப்புகள் வெளியாகின.

    பெரும்பாலான அரசியல் பண்டிதர்கள் கணித்து வைத்திருந்த புள்ளிவிவரங்களை தவிடு பொடியாக்கும் வகையில் அவை அமைந்திருந்தன.

    பீகார்-அமெரிக்கா

    பீகார்-அமெரிக்கா

    பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் ராஷ்டிரிய ஜனதா தளம்-காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் அடங்கிய மெகா கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி தோல்வியை தழுவும் என்றும் தெரிவித்துள்ளன. அதே நாளில்தான் இன்றோ நாளையோ என்று இழுத்துக் கொண்டு இருந்த, அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையிலும் ஒரு வழியாக ரிசல்ட் வெளியானது. 290 ஓட்டுகளுடன் அபாரமாக ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 214 ஓட்டுகள் மட்டுமே டொனால்ட் ட்ரம்ப்புக்கு கிடைத்தது.

     ஆளும் கட்சிகளுக்கு எதிர்ப்பு

    ஆளும் கட்சிகளுக்கு எதிர்ப்பு

    1992 ஆம் ஆண்டு பிறகு 28 வருடங்களின் முதல் முறையாக அமெரிக்க அதிபர் தேர்தலில் மறுபடியும் அதே அதிபர் தேர்ந்தெடுக்கப்படாமல் தோல்வியைத் தழுவியுள்ளார் என்றால் அது டிரம்புதான். பீகாரிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. 15 வருடங்களாக முதல்வராக பதவி வகித்தவர் நிதிஷ்குமார். இதுதான் தனது கடைசி தேர்தல் என்று பிரச்சாரத்தின்போது உருக்கமாக கூறி இருந்தார். ஆனால் எக்ஸிட் போல் முடிவுகள் அவருக்கு இப்போதே, அரசியலில் இருந்து குட் பாய் சொல்வதைப்போல வந்துள்ளன.

    தேர்தல் பிரச்சாரங்கள்

    தேர்தல் பிரச்சாரங்கள்

    கொரோனா பெரும் தோற்று நோய் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள போதிலும் அதைப் பற்றி பேசாமல், "ஜோ பிடன் ஒரு தூங்குமூஞ்சி" என்று பிரச்சாரம் செய்வதிலேயே குறியாக இருந்தார் டிரம்ப். கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தி விட்டதாகவும் பொய்யாக வாக்குறுதிகளை அள்ளி வீசினார். பீகாரிலும் அப்படித்தான் நடந்தது, நோய் பரவல் காரணமாக வேலைவாய்ப்பை இழந்து புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியதால் மோசமாக பாதிப்படைந்த மாநிலங்களில் முக்கியமானது பீகார். ஆனால் தேஜஸ்வி யாதவ் பிரச்சாரக் கூட்டங்களுக்கு வரும் இளைஞர் கூட்டத்தை, ஆளும் கூட்டணி தலைவர்கள் கிண்டல் அடித்துக்கொண்டு இருந்தார்கள். பத்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு தருவேன் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையை சாத்தியமில்லாதது என்று கூறி எள்ளி நகையாடினார் நிதிஷ்குமார்.

    மக்கள் தேவை மாறியுள்ளது

    மக்கள் தேவை மாறியுள்ளது

    இப்போது வெளியாகியுள்ள எக்ஸிட் போல் முடிவுகள் நிதிஷ்குமார் கணிப்புகளை தவிடு பொடியாகி விட்டது. அமெரிக்காவிலும் அப்படித்தான் நடந்துள்ளது. ஆளும் கட்சிகளுக்கு மறுபடியும் வாய்ப்பு தர போவதில்லை என்று மக்கள் அழுத்தம் திருத்தமாக அமெரிக்காவிலும், பீகாரிலும் சொல்லி இருக்கின்றனர் என்பதுதான் இதிலிருந்து கற்க வேண்டிய பாடம். கொரோனா போன்ற பேரிடர் காலத்திற்குப் பிறகு மக்களின் தேவைகள் மாறி உள்ளன. அதை பூர்த்தி செய்ய விரும்புவோருக்குத்தான் மக்கள் ஓட்டளிக்க விரும்புகிறார்களே தவிர பழம்பெருமை பேசுவதில் ஒரு பயன் கிடையாது என்பதையும் இந்த தேர்தல் முடிவுகள் கோடிட்டுக் காட்டுகின்றன.

    வலதுசாரி சித்தாந்தம்

    வலதுசாரி சித்தாந்தம்

    அமெரிக்காவிலும் சரி, பீகாரிலும் சரி, ஆட்சியில் இருப்பது வலதுசாரி சித்தாந்தம் கொண்ட கட்சிகள்தான். இப்போது இரண்டு ஆட்சிக்கு எதிராகவும் மக்கள் தீர்ப்பு அமைந்து உள்ளது. கடந்த அதிபர் தேர்தலின்போது யாரும் எதிர்பார்க்காத விதத்தில் முன்னேறி அதிபரானார் டிரம்ப். வெறுப்பு விதைகளை தூவி வாக்கு அறுவடை செய்தார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது உண்டு. ஆனால் இப்போது அமெரிக்க வாக்காளர்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளனர் அவருக்கு. வலதுசாரி சித்தாந்தத்தின் மீது மக்கள் நம்பிக்கையை இழக்கிறார்களா என்ற கேள்வியை தேஜஸ்வி யாதவின் அபார வளர்ச்சியும், ஜோ பிடனின் விஸ்வரூபமும் எழுப்புகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+