இந்தியாவிற்கு போகாதீங்க.. ஆப்பிள் நிறுவனத்திற்கு டிரம்ப் செக்.. தமிழ்நாட்டிற்குத்தான் பெரிய சிக்கல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் கூக்கிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் தொழிற்சாலைகளை தொடங்க வேண்டாம் என்று கூறி உள்ளார்.

இது தொடர்பாக டிரம்ப் விடுத்த எச்சரிக்கையில், நேற்று டிம் கூக் உடன் எனக்கு ஒரு சின்ன பிரச்சனை ஏற்பட்டது. நான் அவரிடம் சொன்னேன், நீங்கள் என் ஃப்ரெண்ட், நான் உங்களை ரொம்ப நன்றாக நடத்துகிறேன். ஆனால் நீங்கள் பல பில்லியனை இந்தியாவில் முதலீடு செய்கிறீர்கள். இப்போ இந்தியா முழுக்க கட்டிடம் கட்டுவதாக கேள்விப்பட்டேன். நீங்கள் இந்தியாவில் கட்டிடம் கட்டுவதை நான் விரும்பவில்லை.

இந்தியாவை கவனித்துக் கொள்ள விரும்பினால், நீங்க இந்தியாவில் கட்டிடம் கட்டலாம். ஆனால் நீங்கள் அமெரிக்க நிறுவனம். இந்தியாவில் கட்டிடம் கட்ட கூடாது. ஏனென்றால் இந்தியா உலகத்துலயே அதிக வரி விதிக்கிற நாடுகளில் ஒன்று. அதனால் இந்தியாவில் உங்கள் பொருட்களை விற்பது ரொம்ப கஷ்டம்.

US President Donald Trump conversation with Apple Tim Cook may affect Tamil Nadu

நீங்க பல வருஷமாக சீனாவில் கட்டிய எல்லா பிளாண்ட்களையும் நாங்க பொறுத்துக்கிறோம். ஆனால் இப்போது நீங்க இந்தியாவில் கட்டுவதை நாங்கள் விரும்பவில்லை. இந்தியா தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ளட்டும்.. நீங்கள் அமெரிக்காவை பாருங்கள் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

தமிழ்நாடு பாதிக்கும்

அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்டு வரும் நடவடிக்கையால் ஐடி துறை தொடங்கி ஆட்டோமொபைல் துறை வரை பல துறைகள் இந்தியாவில் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. அதில் முக்கியமாக இந்தியாவில் தமிழ்நாடு அதிகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்த்தக போரை தொடங்கி உள்ளார். உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் மீது வர்த்தக போரை அறிவித்து உள்ளார். 10% அடிப்படை வரி உலகம் முழுக்க உள்ள எல்லா நாடுகள் மீதும் விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த புதிய பதிலடி வரி விதிப்பின் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீத விகிதத்தையும் சீனா 34 சதவீத வரியையும் எதிர்கொள்கிறது. இந்தியா 26 சதவீதம், தென் கொரியா 25 சதவீதம் மற்றும் ஜப்பான் 24 சதவீதம்., வரி விதிக்கப்படும். அதிகபட்சமாக கம்போடியா மீது 49%, வியட்நாம் மீது 46%, இலங்கை மீது 44% வரி விதிக்கப்பட்டு உள்ளது. சீனா மீது 34%, ஐரோப்பிய ஒன்றியம் மீது 20%, ஜப்பான் மீது 24% வரிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வரிகள் எல்லாம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டிற்கு சிக்கல்

தமிழ்நாட்டில்தான் இந்தியாவில் ஐபோன் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. இதை டிரம்ப் தடுக்கும் பட்சத்தில் அது இந்தியாவிற்கு பெரிய சிக்கலாக மாறும். உதாரணமாக ஐபோன் ஏற்றுமதி காரணமாக.. தமிழகத்தின் ஏற்றுமதி முதன்முறையாக இந்த முறை 50 பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடும் போது இது 9 பில்லியன் டாலர் கூடுதல் ஆகும். இதன் மூலம் இந்தியாவில் எந்த பெரிய மாநிலத்திலும் இல்லாத அதிகபட்ச உயர்வை தமிழ்நாடு பதிவு செய்துள்ளது.

24-25 நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் மொத்தப் பங்கு 13.38% (கடந்த ஆண்டில் 10.15% இல் இருந்து உயர்ந்து உள்ளது). இந்த முறை $52.073 பில்லியன் மதிப்புள்ள வணிகப் பொருட்களை மாநிலம் ஏற்றுமதி செய்தது. கடந்த ஆண்டு தமிழ்நாடு $43.56 Bn செய்தது. அதாவது தமிழ்நாடு அரசு 9 பில்லியன் டாலர் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

அடுத்தடுத்து சாதனை

ஏற்கனவே FY25 இல் இந்திய மாநிலங்களில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

1. தமிழ்நாடு: $14.65 பில்லியன்
2. கர்நாடகா: $7.85 பில்லியன்
3. உத்தரப்பிரதேசம்: $5.26 பில்லியன்
4. மகாராஷ்டிரா: $3.51 பில்லியன்
5. குஜராத்: $1.85 பில்லியன்
6. தெலுங்கானா: $641.5 மில்லியன்
7. ஆந்திரப் பிரதேசம்: $387.3 மில்லியன்

2025 நிதியாண்டில் இந்தியாவின் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டும் 41.2% பங்களித்தது. தமிழ்நாடு மீண்டும் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக மாறி உள்ளது. கர்நாடகா ஏற்றுமதி மதிப்பை விட இரு மடங்கு ஏற்றுமதியை தமிழ்நாடு மேற்கொண்டு உள்ளது. தமிழ்நாடு மீண்டும் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக மாற உள்ளது. தொடர்ந்து 3வது வருடமாக இதில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஏற்றுமதி மதிப்பை விட இரு மடங்கு ஏற்றுமதியை தமிழ்நாடு மேற்கொண்டு உள்ளது. இதனால் உத்தர பிரதேசம் உட்பட எந்த மாநிலமும் எட்ட முடியாத உயரத்தில் தமிழ்நாடு உள்ளது. இதில் ஐபோன் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்போது டிரம்ப் விடுக்கும் எச்சரிக்கையால் இதெல்லாம் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+