அடடே.. அமெரிக்க அதிபராகும் ஜோ பிடனின் மூதாதையர்களும் சென்னையில் வாழ்ந்தவர்கள்தானா?
சென்னை: அமெரிக்காவின் 46வது அதிபராகும் ஜோ பிடனின் மூதாதையர்களும் சென்னையில் வாழ்ந்திருக்கக் கூடும் என்கிற தகவல்கள் ஆச்சரியம் தருகின்றன.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார் ஜோ பிடன். அமெரிக்காவின் முதலாவது பெண் துணை அதிபராகிறார் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ்.
கமலா ஹாரிஸின் தாய்வழி பூர்வீகம், தமிழ்நாட்டின் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமம். கமலா ஹாரிஸின் தேர்தல் வெற்றியை துளசேந்திரபுரம் கிராமம் கொண்டாடி மகிழ்ந்தது.

இந்தியாவில் மூதாதையர்கள்?
இந்த நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராகும் ஜோ பிடனின் மூதாதையர்களும் சென்னையில் வாழ்ந்தவர்களா? என்கிற தகவல் ஆச்சரியம் தருகிறது. 19-ம் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட கிழக்கிந்திய கம்பெனியில் கிறிஸ்டோபர் பைடன், வில்லியம் பைடன் எனும் இருசகோதரர்கள் பணியாற்றினர்.

கிறிஸ்டோபர் பிடன் சென்னை
லண்டனுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான கப்பல் போக்குவரத்தில் மாலுமிகளாக இருவரும் பணியாற்றி இருக்கின்றனர். இவர்களில் கிறிஸ்டோபர் பிடன், சென்னையிலேயே தங்கி இருந்திருக்கிறார். சென்னையில் புகழ்பெற்ற பிரமுகராகவும் திகழ்ந்திருக்கிறார்.

நினைவுகூர்ந்த ஜோ பிடன்
2013-ம் ஆண்டு அமெரிக்க துணை அதிபராக இருந்த போது இந்தியாவுக்கு முதல் முறையாக ஜோ பிடன் வருகை தந்தார். மும்பைக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஜோ பிடன், தமது தூரத்து உறவினர்கள் மும்பையில் வசித்ததையும் தாம் எம்.பியாக பதவி ஏற்ற போது பிடன் என்ற பெயரில் மும்பையில் இருந்து வாழ்த்து கடிதம் வந்ததையும் சுட்டிக்காட்டியும் இருந்தார்.

இந்திய பெண்ணுடன் திருமணம்
2015-ம் ஆண்டு வாஷிங்டனில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜோ பிடன், மூதாதையர்களில் ஒருவரான ஜார்ஜ் பிடன், இந்தியாவில் இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றியதையும் சுட்டிக்காட்டினார். அவர் பணி ஓய்வு பெற்ற பெண் இந்திய பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டி செட்டிலாகிவிட்டதாகவும் கூறியிருந்தது.

கிறிஸ்டோபர் பைடன் கல்லறை
சென்னை கதீட்ரலில் கிறிஸ்டோபர் பைடன் பெயரிலான கல்லறை ஒன்றும் இருக்கிறது. இந்த கிறிஸ்டோபர் பைடன், அமெரிக்காவின் அதிபராகும் ஜோ பிடனின் மூதாதையராக இருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications