டிரம்ப் ரிட்டர்ன்ஸ்! இந்தியாவிற்கு இது முக்கிய காலம்.. அமெரிக்க அதிபர் ரிசல்ட்.. மாறும் 10 விஷயங்கள்
சென்னை: அமெரிக்க அதிபர் தேர்தலில் அமெரிக்க முன்னாள் அதிபர் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் வெற்றிபெற்றுள்ளார். டொனால்ட் டிரம்ப் மெஜாரிட்டிக்கு தேவையான 270க்கும் அதிகமான எலக்ட்ரல் வாக்குகளை பெற்று வெற்றி பெறும் நிலையில் உள்ளார். தற்போது வரை 277 எலக்ட்ரல் வாக்குகளை வென்றுள்ளார். இதன் மூலம் டிரம்ப் வெற்றி உறுதியாகி உள்ளது. கமலா ஹாரிஸ் 224 வாக்குகளை வென்றுள்ளார். மொத்தமாக 538 எலக்ட்ரல் வாக்குகளில் 270 யாருக்கு கிடைக்கிறதோ அவர்தான் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவார். அந்த வகையில் டிரம்ப் வென்று மீண்டும் அதிபராகிறார்.
இந்த அமெரிக்க தேர்தல் காரணமாக இந்தியாவில் பல முக்கியமான மாற்றங்கள் ஏற்படும். அவை என்னென்ன என்று பார்க்கலாம்.

1. அமெரிக்க அதிபர் யாராக இருந்தாலும்.. அமெரிக்காவுடன் இந்தியா ஒரே மாதிரியான உறவையே பேணும். இப்போது டிரம்ப் இந்தியாவில் பாஜகவிற்கு நெருக்கம். கமலா ஹாரிஸ் இந்தியாவிற்கு உறவு ரீதியாக நெருக்கம் என்றாலும்., ஆளும் பாஜகவின் கொள்கைக்கு எதிரானவர். அந்த வகையில் டிரம்ப் வருகை பாஜகவிற்கு சாதகம்.
2. டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபராவதால் மோடி - டிரம்ப் உறவு இந்தியாவிற்கு சாதகமாக அமையும். டிரம்பிற்கு 4 வருடங்களுக்கு முன் மோடி பிரச்சாரம் செய்ததை மறக்க வேண்டாம். இரண்டு நாட்டு உறவு இன்னும் வலிமை அடையும்.
3. ஆனால் இறக்குமதி - ஏற்றுமதி வரியில் டிரம்ப் கண்டிப்பானவர். இந்தியா அமெரிக்க பொருட்களின் இறக்குமதி வரியை குறைக்கவில்லை என்றால்.. டிரம்ப் இந்திய பொருட்களின் இறக்குமதி வரியை ஏற்றுவார். இதனால் இந்தியாவில் பொருட்களின் விலை உயரலாம். அதேபோல் இந்தியா ஏற்றுமதி செய்வதும் சிக்கலாக மாறும்.
4. டிரம்ப் வரும் போதெல்லாம் டாலர் வலிமை அடைந்து உள்ளது. அப்படி நடந்தால்.. இந்தியாவிற்கு பொருளாதார சிக்கல் ஏற்படும். டாலர் வலிமை அடைந்தால்.. இந்தியாவில் சில பொருட்களின் விலை உயரும்.
5. தங்கத்தின் விலை குறையும். அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி தற்போது வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்து உள்ளது. இந்த முடிவு டாலரை பலவீனப்படுத்தி உள்ளது. இதனால் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. ஆனால் இனி வரும் நாட்களில் டாலரின் மதிப்பு உயர்ந்தால் தங்கத்தின் விலை உயரும்.
6. டிரம்ப் இந்தியாவின் அரசியல் நடவடிக்கைகளை எதிர்த்தது இல்லை. இந்தியாவின் உள்நாட்டு நடவடிக்கைகளை எதிர்த்ததே இல்லை. இது இந்தியாவிற்கு கண்டிப்பாக சாதகமாக அமையும்.
7. டிரம்ப் பொதுவாக கடுமையான விசா கொள்கைகளை கொண்டவர். இது இந்தியர்களுக்கு சிக்கல் ஆகும். இனி மேலும் கடுமையான கொள்கைகளை வெளிக்காட்டும் வாய்ப்புகள் உள்ளன.
8. அதோடு அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளை அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை தருவதில் டிரம்ப் ஆர்வம் கொண்டவர் என்பது இந்தியர்களுக்கு சிக்கல் ஆகலாம்.
9. ஆனால் பாதுகாப்பு ரீதியாக டிரம்ப் இந்தியாவிற்கு நெருக்கம். முக்கியமாக ஆயுத ஏற்றுமதி, சீன எதிர்ப்பில் இந்தியாவுடன் டிரம்ப் இருப்பார்.
10. சர்வதேச அளவில் போர்களை தடுப்பதில் டிரம்ப் பெயர் பெற்றவர். இதனால்.. சர்வதேச அரசியலில் போர்கள் குறையலாம். அதனால் இந்தியாவிற்கு சாதகமாக மாறும் சூழல்கள் உள்ளன.












Click it and Unblock the Notifications