"இந்தியா தான் பெஸ்ட்.. அமெரிக்கா கூட தோத்துடும்" பாராட்டி தள்ளிய அமெரிக்க யூடியூபர்.. டிரெண்டிங்
சென்னை: இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்த அமெரிக்க யூடியூபர் ஒருவர் இங்குள்ள மருத்துவ முறை மற்றும் சிகிச்சைகளைப் பாராட்டியுள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட மேற்குல நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் சிகிச்சை முறை மிகச் சிறப்பாக இருப்பதாகவும் அவர் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
பொதுவாக இந்தியா என்றால் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தோர் மோசமான பார்வையைக் கொண்டுள்ளனர். இந்தியாவைப் பற்றித் தெரிந்து கொள்ளாமலேயே அவர்கள் இஷ்டத்திற்கு அடித்துவிடுவார்கள். ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஒருவர் இந்திய மருத்துவ முறைகளையும் சுகாதார கட்டமைப்புகளையும் பாராட்டியுள்ளார்.

அமெரிக்க யூடியூபர்
சார்லி எவான்ஸ் என்ற இந்த நபர், மேற்கத்திய நாடுகளை விட இந்தியச் சுகாதார அமைப்பு மிகவும் உயர்ந்தது என்று பாராட்டியுள்ளார். ரிஷிகேஷில் தற்போது பயணம் செய்து வரும் எவான்ஸ், தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் இந்திய மருந்துகள் தன்னை குணப்படுத்திய விதம் தனக்கு மிகப் பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்ததாகவும் எவான்ஸ் கூறுகிறார்.
ஆயுர்வேதமும் நவீன மருத்துவமும் கலந்து இருப்பதாகக் கூறியுள்ள எவான்ஸ், இந்தியாவில் எளிதில் கிடைக்கும் சிகிச்சைகளைப் பெரிதும் பாராட்டினார். இது தொடர்பான வீடியோவில் எவான்ஸ் மேலும், "நான் ஒரு அமெரிக்கன், கடந்த 148 நாட்களாக இந்தியாவில் வசித்து வருகிறேன். கடந்த வாரத்தில் நான் இரண்டு முறை மருத்துவமனைக்குச் சென்றேன். என்ன நடந்தது என்பதையும், மேற்கத்திய மருத்துவத்தை விட இந்திய மருத்துவம் ஏன் சிறந்தது என்பதையும் உங்களுக்குச் சொல்லப்போகிறேன்" என்றார்.
உடல்நலக்குறைவு
ராஜஸ்தானில் தனது பயணத்தைத் தொடங்கிய எவான்ஸுக்கு சில வாரங்களிலேயே உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. தொண்டைப் புண்ணாக இருக்கும் என அவர் சந்தேகித்துள்ளார். இருப்பினும், ரிஷிகேஷ் திரும்பும் வரை அவர் எந்த வித மருந்தையும் எடுக்கவோ மருத்துவமனைக்குச் செல்லவோ இல்லையாம். ஆனால், வலி கொஞ்சம் அதிகமானதும் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அப்போது தான் இந்தியாவில் மருத்துவமனைக்குச் செல்வது மிகவும் எளிது என்பதை உணர்ந்துள்ளார்.
அமெரிக்கச் சுகாதார கட்டமைப்பு
மருத்துவமனைக்குச் செல்வதில் என்ன கஷ்டம் என நீங்கள் யோசிக்கலாம். நேராக மருத்துவமனைக்குப் போகிறோம்.. டோக்கன் வாங்கி டாக்டரை பார்க்கிறோம்.. அதில் என்ன பிரச்சினை என நீங்கள் கேட்கலாம்.. உண்மையில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் மருத்துவமனைக்குச் செல்வது ரொம்பவே சிக்கலானது. நேராக நம்மால் மருத்துவரைப் பார்க்க முடியாது. அப்பாய்மெண்ட் வாங்கி மருத்துவமனைக்குப் போய் காத்திருந்து பார்ப்பதற்குள் தலை சுற்றிவிடும். அதைத் தான் ஒப்பிட்டு எவான்ஸ் கூறியுள்ளார்.
மேலும், எவான்ஸ் தனது சிகிச்சை அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர், "நான் அருகே உள்ள மருந்துக் கடைக்குச் சென்றேன். அங்கு சில மாத்திரைகளை வாங்கினேன். அவை அமெரிக்காவில் கிடைப்பதில்லை.. ஆனால் அவை அற்புதமான பலனைத் தந்தன. நான் இவற்றை எனது தொண்டைப் புண்ணிற்குப் பயன்படுத்தினேன். இரண்டாவதாக, இந்த இருமல் மாத்திரைகள். இவை மிகவும் நம்ப முடியாதவை. அமெரிக்காவில் இவை கிடைத்தாலும் கூட இந்தியாவில் கிடைக்கும் மருந்துகள் வித்தியாசமாக உள்ளன. சிறந்தது போலத் தெரிகிறது" என்றார்.
இந்தியாவுக்குப் பாராட்டு
இந்தியர்கள் உடல்நலம் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்கள் என்று குறிப்பிட்ட எவான்ஸ், பலரது வீடுகளிலும் பொதுவாகக் காணப்படும் ஆயுர்வேத மருந்துகளே நோய்களைக் குணப்படுத்துவதாகவும் பாராட்டினார். அவர் மேலும், "இந்தியாவில் வாழும்போது, உங்களது இந்திய நண்பர்கள் மூலிகை மருந்துகளை அளிப்பார்கள். எனக்கு என் நண்பர் இதைக் கொடுத்தார். இது ஒரு இயற்கையான மருந்து. இதுதான் இந்தியாவுக்கு வருவதில் ஆச்சரியமான விஷயம். சில சமயங்களில் மருந்தகம் அல்லது அவசர சிகிச்சை அறை கூட தேவையில்லை.. ஏனென்றால் உங்கள் இந்திய நண்பர்களிடம் இது போல ஏதாவது இருக்கும்
எவான்ஸின் இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. பல்வேறு தரப்பினரும் பல கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். இந்தியாவைப் பற்றி வேண்டும் என்றே தவறான தகவல்களைச் சொல்லி வியூஸ் வாங்குவோர் மத்தியில் எவான்ஸ் நேர்மையான கருத்துகளைக் கூறியிருப்பதாகப் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
-
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி












Click it and Unblock the Notifications