இந்தியா இருக்கட்டும்.. தமிழ்நாட்டிற்கு பெரிய செக் வைக்கும் டிரம்ப்.. அமெரிக்காவின் பயங்கர பிளான்
சென்னை: அமெரிக்காவிற்கு வெளியே அமெரிக்க நிறுவனங்களின் பொருட்களை தயாரிப்பதை தடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முயன்று வருகிறாராம். அதாவது அமெரிக்காவின் டெஸ்லா, ஆப்பிள் ஐபோன், கார் நிறுவனங்களை வெளிநாடுகளில் உற்பத்தி செய்வதை டிரம்ப் விரும்பவில்லையாம்.
இதற்காக அமெரிக்க நிறுவனங்களின் பொருட்களை தயாரிப்பதை மொத்தமாக நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறாராம். இதில் ஆப்பிள் நிறுவனமும், டெஸ்லா நிறுவனமும்தான் கட்டுப்பாடுகளுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் ஆப்பிள் நிறுவனத்தைதான் அமெரிக்காவிற்குள் மீண்டும் கொண்டு வர டிரம்ப் முயன்று வருகிறாராம். ஆப்பிள் நிறுவனம் தைவான் நிறுவனங்களின் ஒப்பந்தம் மூலம் தைவான், தமிழ்நாட்டில் உற்பத்தி செய்கிறது. இந்த உற்பத்தி டிரம்ப் செயலால் பாதிக்கப்படலாம். முக்கியமாக தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் ஆப்பிள் உற்பத்தி பாதிக்கப்படலாம்.

தமிழ்நாடு ஆப்பிள் ஏற்றுமதி
ஆப்பிள் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் மீண்டும் தமிழ்நாடு முதலிடம் பிடித்து சாதனை படைத்து உள்ளது. ஏப்ரல் முதல் டிசம்பர் FY25 வரை தமிழ்நாடு $9.36 பில்லியன் மதிப்பிலான மின்னணு பொருட்களை ஏற்றுமதி செய்து உள்ளது. இந்தியாவின் $26.12 பில்லியன் ஏற்றுமதியில் 39% பங்களிப்பை தமிழ்நாடு அளித்துள்ளது. FY24 இல் $9.56 பில்லியனை தமிழ்நாடு ஏற்றுமதி செய்தது. அதைவிட சற்று குறைவாக இருந்தாலும், தமிழ்நாடு தொடர்ந்து ஏற்றுமதியில் முதல் மாநிலமாக உள்ளது.
தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் ஐபோன் உற்பத்தி இதற்கு முக்கிய காரணம் ஆகும். டாடா எலக்ட்ரானிக்ஸ் தனது ஐபோன் அசெம்ப்ளி யூனிட்டை ஓசூரில் உள்ள புதிய தளத்தில் மேலும் விரிவுபடுத்த உள்ளது. ஏற்கனவே முன்மொழியப்பட்ட விரிவாக்கத்துடன் மேலும் விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இங்கே கிட்டத்தட்ட 2 லட்சம் ஐபோன்களை உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் கிளஸ்டர் இங்கே உருவாக்கப்படுகிறது. உலகிலேயே பெரிய ஐபோன் தொழிற்சாலைகளில் ஒன்றாக இது இருக்கும் என்கிறார்கள்.

டாடா குழுமம் ஓசூரில் உள்ள ஐபோன் கேசிங் யூனிட்டின் தற்போதைய ஆலையை விட இரண்டு மடங்கு அளவுக்கு விரிவுபடுத்த உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்தியாவின் மிகப் பெரிய ஐபோன் அசெம்ப்ளி ஆலையை ஓசூரில் டாடா உருவாக்க உள்ளது.
மற்ற மாநிலங்கள்
கர்நாடகா 4.95 பில்லியன் டாலர்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா முறையே 3.78 பில்லியன் டாலர் மற்றும் 2.72 பில்லியன் டாலர்களைப் பதிவு செய்துள்ளது. 2024 டிசம்பரில், தமிழ்நாட்டின் ஏற்றுமதி நவம்பரில் $1.534 பில்லியனில் இருந்து 1.524 பில்லியன் டாலராக சிறிது சரிவைக் கண்டது, ஆனாலும் மாநிலம் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
நம்பர் 1 தமிழ்நாடு: ஏற்கனவே 2023-24 நிதியாண்டில் 32.84% மொத்த பங்குடன் 9.56 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த எண்ணிக்கை வெறும் 1.86 பில்லியனாக இருந்தது.
தமிழ்நாடு சாதனை: தமிழ்நாடு ஏற்றுமதியின் எண்ணிக்கை இந்தியாவின் மொத்த மின்னணு ஏற்றுமதியில் 39% ஆகும். அதே காலகட்டத்தில் இந்தியாவில் மொத்தமாக செய்யப்பட்ட மின்னணு ஏற்றுமதியை $16.48 பில்லியன் ஆகும். கடந்த வருடம் ஏப்ரல்-அக்டோபர் மாதங்களில் மட்டும் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 90% சதவிகித மின்னணு ஏற்றுமதியை தமிழ்நாடு செய்துள்ளது. முந்தைய நிதியாண்டில் இருந்து தமிழ்நாடு அதன் சாதனையை இந்த வருடம் முறியடிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு மீண்டும் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக மாற உள்ளது. கர்நாடகா ஏற்றுமதி மதிப்பை விட இரு மடங்கு ஏற்றுமதியை தமிழ்நாடு மேற்கொண்டு உள்ளது. தமிழ்நாடு மீண்டும் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக மாற உள்ளது. தொடர்ந்து 3வது வருடமாக இதில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஏற்றுமதி மதிப்பை விட இரு மடங்கு ஏற்றுமதியை தமிழ்நாடு மேற்கொண்டு உள்ளது. இதனால் உத்தர பிரதேசம் உட்பட எந்த மாநிலமும் எட்ட முடியாத உயரத்தில் தமிழ்நாடு உள்ளது.












Click it and Unblock the Notifications