உத்தர பிரதேசம் 11.. பீகாருக்கு 10.. தொகுதி மறுவரையறையில் அதிக சீட் பெறும் மாநிலங்கள் இதுதான்-லிஸ்ட்
சென்னை: மக்கள் தொகை அடிப்படையில் 2026ம் ஆண்டுக்கு பிறகு தொகுதி மறுவரையறை செய்யப்படும்போது தமிழ்நாடு உள்பட தென்மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. அதேவேளையில் உத்தர பிரதேசம், பீகார் உள்பட வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வரும் 2026ம் ஆண்டுக்கு பிறகு மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட தென்மாநிலங்களில் தற்போது உள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை என்பது குறையலாம் என கூறப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் தென்மாநிலங்கள் மக்கள்தொகை பெருக்கத்தை திட்டமிட்டு கட்டுப்படுத்தியது தான். ஆனால் மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த தவறிய வடமாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை என்பது அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதற்கு தென்மாநில அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலினும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தான் சர்வதேச அமைதிக்கான கார்னேஜ் (Carnegie) அமைப்பு சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவு குறித்த விபரத்தை இந்தியா டூடே வெளியிட்டுள்ளது. அதில் எந்தெந்த வடமாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகள் அதிகரிக்கும் என்பது குறித்த முக்கிய விஷயம் இடம்பெற்றுள்ளது.
அதன்படி உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பீகார், மத்திய பிரதேசம், குஜராத் ஹரியானா, ஜார்கண்ட், டெல்லி, சத்தீஸ்கார் மாநிலங்களில் நாடாளுமன்ற தேர்தல்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதிகபட்சாக உத்தர பிரதேசத்தில் 11 தொகுதிகளிலும், பீகாரில் 10 தொகுதிகளும் அதிகரிக்கலாம் என இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் படி உத்தர பிரதேசத்துக்கு 11 நாடாளுமன்ற தொகுதிகள் கூடுதலாக கிடைக்கும். தற்போது 80 தொகுதிகள் உள்ள நிலையில் கூடுதலாக 11 தொகுதிகளை சேர்த்து 91 என உயரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பீகார் மாநிலத்தில் தற்போது 40 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் கூடுதலாக 10 தொகுதிகள் வரை கிடைக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் ராஜஸ்தானில் 21 தொகுதிகள் உள்ள நிலையில் 6 தொகுதிகளும், மத்திய பிரதேசத்தில் 29 தொகுதிகள் உள்ள நிலையில் 4 தொகுதிகளும் அதிகரிக்கலாம். இதுதவிர குஜராத், ஹரியாணா, ஜார்க்கண்ட், டெல்லி மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதிகள் அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications