ஆஹா.. ஸ்டாலினை அப்டியே ஃபாலோ பண்ணும் பாஜக முதல்வர்.. என்னன்னு பாருங்க.. புருவம் உயர்த்தும் வடமாநிலம்
இலவச பஸ் பயண அறிவிப்பை வெளிப்படுத்தி உள்ளார் உத்தரகாண்ட் முதல்வர்
சென்னை: அப்படியே நம் தமிழக முதல்வர் ஸ்டாலின் பாணியை, ஒரு பாஜக முதல்வர் பின்பற்ற ஆரம்பித்துள்ளார்.. இதுதான் தேசிய அரசியல் வியப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடனேயே, பெண்களுக்கு பேருந்தில் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்... முதல்நாளே 5 கோப்புகளில் அவர் கையெழுத்திட்ட நிலையில், 3வது கையெழுத்தே இலவச பேருந்து அறிவிப்புக்குதான் போட்டார்..
அதுமட்டுமல்ல, அடுத்தநாளே இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்றும் அறிவித்தார்.. முதல்வரின் இந்த அறிவிப்பு தமிழகம் முழுவதும் பெண்களின் கவனத்தை ஈர்த்தது..

பெண்கள்
நாடு முழுவதுமுள்ள நிபுணர்களும் இந்த திட்டத்தை பற்றி கருத்து கூறினார்கள். இது பெண்களின் பயணங்களை அதிகரிப்பது மட்டுமல்லாமல் பெண்களின் வாழ்க்கையை மாற்றவும், மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்தவும் செய்யும் என்று கருத்து கூறினார்கள்.. பெண்களுக்கு வழங்கப்படும் இலவச பயண வசதியால், மாநில போக்குவரத்து நிறுவனங்களின் ஆண்டு வருவாயில் கருவூலத்திற்கு ரூ.1200 கோடி செலவாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக அரசின் அறிவிப்பு பல்வேறு தரப்பில் பேசப்பட்டது..

தொற்று
இத்தனைக்கும் கொரோனா உச்சத்தில் இருந்த சமயம் அது.. அதிமுக ஆட்சியானது கஜானாவை காலி செய்துவைத்து விட்டு போயிருந்ததாகவும் கூறப்பட்ட நிலையில், இலவச பேருந்து பயணம் மகத்தான வரவேற்பை பெண்களின் மத்தியில் ஸ்டாலினுக்கு பெற்று தந்தது... இந்த அறிவிப்பை, வேறு மாநிலங்களில் பின்பற்ற தொடங்கி உள்ளது நமக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.. அதிலும் பாஜக மாநில முதல்வரே இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது பெருமையாகவும் பார்க்கப்படுகிறது.

ஆட்சி
உத்தரகாண்ட் மாநிலத்திற்கு விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது.. இதனால் அங்கு ஆட்சியை தக்க வைத்து கொள்ள பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்ட ஒரு அறிவிப்பில் பள்ளி, கல்லூரி மாணவிகள் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

அறிவிப்பு
"பள்ளி, கல்லூரி மாணவிகள் எங்களுக்கு முக்கியமானவர்கள், அவர்களின் கல்வி அவர்களுக்கு எளிதான அனுபவமாக இருக்க வேண்டும். அதனால்தான் நாங்கள் அவர்களுக்காக இந்த சேவையைத் தொடங்கினோம் என்று ஏஎன்ஐக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.. எந்த ஒரு திட்டமானாலும் அதற்கு மக்கள் வரவேற்பு தரும் பட்சத்தில், மற்ற மாநிலங்களும் பின்பற்றுவது இயல்புதான் என்றாலும், திமுக அரசின் அறிவிப்பை ஒரு பாஜக மாநில முதல்வரும் கையில் எடுத்துள்ளது வியப்பை தந்து வருகிறது.
-
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
கோவை மக்களுக்கு ஜாக்பாட்! பல மாத காத்திருப்புக்கு விடிவுகாலம்.. மெகா திட்டத்திற்கு கிரீன் சிக்னல்! -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications