அரசு கொடுத்த பங்களாவை உடனே காலி செய்ய முடியாது.. முன்னாள் அமைச்சர்கள் கறார்!
சென்னை: புதிய அமைச்சர்களுக்கு அரசு தரப்பில் ஒதுக்கப்பட்ட பங்களாவை கொடுக்க வேண்டியுள்ளதால், முன்னாள் அமைச்சர்கள் பங்களாக்களை காலி செய்ய பொதுப்பணித்துறை உத்தரவிட்டிருந்தது. ஆனால், உடனடியாக காலி செய்ய முடியாது என அமைச்சர்கள் மறுப்பு தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் அமைச்சர்களின் குடியிருப்புகள் சென்னையின் முக்கியப் பகுதியான பசுமைவழிச் சாலையில் அமைந்துள்ளன. இங்கு வெறும் வீடுகள் மட்டுமல்லாது, அமைச்சர்கள் தங்கள் தொகுதியிலிருந்து வரும் பொதுமக்களைச் சந்திக்கவும், கோப்புகளை ஆய்வு செய்யவும் வீட்டிலேயே தனியாக அலுவலகம், அமைச்சரின் உதவியாளர்கள், தனிச் செயலாளர்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்களுக்காகத் தனித்தனி குடியிருப்புகள் ஆகியவை இருக்கின்றன. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இங்கு பெரிய பங்களா ஒதுக்கப்பட்டிருக்கிறது.

உதயநிதிக்கு நோட்டீஸ்
பெரும்பாலான பங்களாக்கள் விசாலமான புல்வெளி மற்றும் தோட்ட வசதிகளுடன் கூடிய பழங்காலக் கட்டிடக்கலை பாணியில் அமைந்தவை. இந்த பங்களாக்களைப் பராமரிக்கும் பொறுப்பு பொதுப்பணித் துறையிடம் (PWD) உள்ளது. அமைச்சர்கள் பதவியேற்பதற்கு முன்பாக, அவர்களின் ரசனைக்கு ஏற்ப வர்ணம் பூசுதல், மின்சாதனப் பழுதுகள் மற்றும் உட்புற அலங்காரப் பணிகள் பொதுப்பணித் துறையினரால் மேற்கொள்ளப்படும்.
தற்போது திமுக ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டிருக்கிறது. எனவே பங்களாக்களை காலி செய்ய வேண்டும் என்று பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜெயகர் வாயிலாக முன்னாள் அமைச்சர்களுக்கு உத்தரவு அனுப்பப்பட்டிருந்தது. எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழந்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பதவியை இழந்த உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் உதவியாளர்களுக்கு இந்த உத்தரவு பறந்திருந்தது.
ஆனால், உடனடியாக பங்களாக்களை காலி செய்ய அமைச்சர்கள் மறுப்பு தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2 மாதங்களுக்கு பிறகே பங்களாவை காலி செய்ய முடியும் என்று கறாராக கூறியிருக்கின்றனர்.
எப்போது காலி செய்ய வேண்டும்?
வழக்கமாக புதிய அமைச்சரவை பதவியேற்ற 15-20 நாட்களுக்குள், முன்னாள் அமைச்சர்கள் பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று உத்தரவு பொதுப்பணித்துறை அதிகாரிகளால் பிறப்பிக்கப்படும். 30 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்படும். அதையும் மீறி பங்களா தேவையாக இருக்கிறது எனில் அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து பொதுப்பணித்துறைக்கு கடிதம் எழுத வேண்டும். கோரிக்கை நியாயமாக இருந்தால் 2 மாதங்கள் வரை கட்டணத்துடன் தங்கிக்கொள்ள பொதுப்பணித்துறை அனுமதி வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
கும்பகோணத்தில் “காவலர் தேவநாதன் கையை முறித்த த.வெ.க.வினர்” என்ற செய்தியே தவறு.. காவல்துறை விளக்கம் -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
ஓடியாங்க, ஓடியாங்க.. தமிழ்நாட்டில் முதலீடு.. விஜய் போட்ட உத்தரவு.. அமைச்சர் கீர்த்தனா-வின் 4 முக்கிய வாக்குறுதி! -
அரசு மருத்துவமனையில் தந்தையை அனுமதித்து இரவு முழுவதும் தங்கிய அமைச்சர் மதன் ராஜாவுக்குப் பாராட்டு -
விஜய்யுடன் டெல்லி பயணித்த அந்த இளைஞர் யார்? போகுமிடமெல்லாம் கூடவே இருந்தாரே.. பின்னணி -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!











Click it and Unblock the Notifications