ஒரு பக்கம் தளர்வு.. இன்னொரு பக்கம் "இது" வேறயா?.. இப்படியே போனா.. தமிழ்நாட்டில் 3ம் அலைதான்?!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியா முழுக்க கண்டிப்பாக மூன்றாம் அலை கொரோனா தாக்குதல் ஏற்படும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தமிழ்நாட்டிலும் மூன்றாம் அலை தோன்றுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அடுத்தடுத்து நடக்கும் 3 விஷயங்கள் மூன்றாம் அலை தோன்றும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதிதாக பதவி ஏற்ற தமிழ்நாடு அரசு கடந்த 40 - 50 நாட்களில் மிக சிறப்பாக செயல்பட்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்தியது. இரண்டாம் அலையில் மற்ற மாநிலங்கள் மிக மோசமாக திணறிய நிலையில், தமிழ்நாட்டில் அதிக கேஸ்கள் வந்தாலும் பெரிய அசம்பாவிதங்கள் ஏற்படாமல் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து மக்கள் தங்கள் பணிகளை செய்ய அனுமதிக்கும் வகையிலும், பொருளாதார செயல்பாடுகளை தொடங்கும் வகையிலும் லாக்டவுனில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

மூன்று

மூன்று

தமிழ்நாடு மொத்தம் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட வகை 1, மாவட்ட வகை 2, மாவட்ட வகை 3 என்று மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மூன்றாவது வகையாகும். இங்கு மிக அதிக அளவில் தளர்வுகளும், செயல்பாடுகளும் அனுமதிக்கப்பட்டுள்ளன.

மக்கள்

மக்கள்

மாவட்ட வாரியாக தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு பக்கம் மக்கள் அதிக அளவில் வெளியே செல்வது அதிகரித்துள்ளது. மூன்று வகையாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டாலும், மக்கள் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் வெளியே சுற்றும் போக்கு அதிகரித்து இருக்கிறது. சென்னை உள்ளிட்ட 4 நான்கு மாவட்டங்களில் மக்கள் அதிக அளவில் கூடுவது கூட தளர்வு காரணமாக என்று ஒப்புக்கொள்ளலாம்.

கூட்டம்

கூட்டம்

ஆனால் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் மக்கள் விதிகளை மதிக்காமல் வெளியே சுற்றும் போக்கு அதிகரித்து இருக்கிறது. கொரோனா போன வாரமே காணாமல் போய்விட்டது போல மக்கள் அதிக அளவில் வெளியே செல்ல தொடங்கி உள்ளனர்.

Recommended Video

    Corona 3rd Wave எப்படி இருக்கும்? - AIIMS விளக்கம் | Oneindia Tamil
    அரசு அறிவுரை

    அரசு அறிவுரை

    அரசு முறையான அறிவுரை, கட்டுப்பாடுகளை அறிவித்து இருந்தாலும், அதை எல்லாம் மதிக்காமல் மக்கள் மொத்தமாக வெளியே சுற்றுவதும், கடைகளுக்கு செல்வதும் அதிகரித்து உள்ளது. லாக்டவுனா.. அது எங்கே என்று கேட்கும் அளவிற்குதான் மூன்று வகை மாவட்டங்களிலும் மக்கள் கூட்டம் அதிகம் உள்ளது. அரசு இது தொடர்பாக பல்வேறு அறிவுரைகளை மக்களுக்கு எடுத்துக் கூறினாலும் அதைக் மக்கள் பெரிதாக கேட்டுக்கொள்வது இல்லை.

    இன்னொரு பக்கம்

    இன்னொரு பக்கம்

    ஒரு பக்கம் கொரோனா தளர்வுகளை பயன்படுத்தி மக்கள் கூடும் நிலையில், இன்னொரு பக்கம் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. மத்திய அரசு போதிய அளவு தடுப்பூசியை வழங்காத நிலையில் இன்று சென்னையிலும், திருச்சியிலும் தடுப்பூசி முகாம்கள் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட வேகமாக தடுப்பூசி போட்டாலும் கூட போதிய அளவு வேக்சின் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படாமல் தாமதம் செய்யப்படுகிறது.

    தாமதம்

    தாமதம்

    இதனால் சென்னை, திருச்சி என்ற இரண்டு பெருநகரங்களில் வேக்சின் போடுவது நிறுத்தப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் வேக்சின் தட்டுப்பாடு காரணமாக முகாம்கள் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்னொரு பக்கம் தென் மாவட்டங்களில் முகாம்களின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. காரணம் மத்திய அரசு போதிய வேக்சின் ஒதுக்கீடு செய்யவில்லை.

    என்ன நடக்கும்

    என்ன நடக்கும்

    ஒரு பக்கம் கூட்டம் அதிகரிப்பு.. இன்னொரு பக்கம் வேக்சின் தட்டுப்பாடு இது இரண்டும் சேர்ந்தால் கண்டிப்பாக அது கொரோனா பரவலை மீண்டும் அதிகரிக்கும். எங்கெல்லாம் கொரோனாவை அரசு கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தியதோ அங்கெல்லாம் மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஒரு பக்கம் நிலைமை இப்படி இருக்கத்தான் தமிழ்நாட்டில் டெல்டா + பரவலும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    டெல்டா +

    டெல்டா +

    டெல்டா அலை கேஸ்களில் எண்ணிக்கையே இன்னும் குறையாத நிலையில் தற்போது டெல்டா + கேஸ்கள் வர தொடங்கி உள்ளன. தமிழ்நாட்டில் தற்போது 9 டெல்டா + கேஸ்கள் உள்ளன. ஆனால் உண்மையில் அதிக ஜீனோம் சோதனை மேற்கொண்டால், அதிக டெல்டா + கேஸ்கள் கண்டுபிடிக்கப்பட வாய்ப்புள்ளது. மக்கள் வெளியே அதிகம் செல்வது டெல்டா + பரவலை அதிகரிக்கும்.

    ஏன்

    ஏன்

    மூன்றாம் அலை குறித்தும் டெல்டா + குறித்தும் எய்ம்ஸ் வெளியிட்டுள்ள சில எச்சரிக்கைகள் தமிழ்நாட்டிலும் மூன்றாம் அலை ஏற்படுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. டெல்டா + வகை கொரோனா தாக்கியவரின் அருகில் நடந்து சென்றாலே டெல்டா + கொரோனா பரவும்.இரண்டாம் அலை ஏற்பட்ட 8 வாரங்களுக்குள் மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்புள்ளது.

    மூன்றாம்

    மூன்றாம்

    மூன்றாம் அலை கண்டிப்பாக ஏற்படும் என்று எய்ம்ஸ் மற்றும் ஐசிஎம்ஆர் எச்சரித்து உள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசத்தில் மூன்றாம் அலைக்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளதால், தமிழ்நாட்டிலும் கேஸ்களும் உயருமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மக்கள் நினைத்து, முடிந்த அளவு வெளியே செல்லாமல் இருந்தால் மட்டுமே மூன்றாம் அலையை கட்டுப்படுத்த முடியும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+