"தடுப்பூசி எங்கடா டேய்".. விடாமல் விரட்டும் சித்தார்த்.. தாறுமாறாக வைரலாகும் டிவீட்!
நடிகர் சித்தார்த் பரபரப்பு ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று தடுப்பூசி திட்டம் தொடங்கப்படவில்லை.. இதையடுத்து, நடிகர் சித்தார்த் போட்ட ட்வீட் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Recommended Video
45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.. ஆனால், இளம்வயதுக்காரர்களையும் இந்த இரண்டாவது அலை தாக்கி வருவதால், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்றைய தினம்தான், நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது.. இதற்காக ஏராளமானோர், தடுப்பூசி போடுவதற்காக ஆன்லைனிலும் முன்பதிவு செய்து கொண்டுள்ளனர்.

தடுப்பூசி
ஆனால், நேற்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், "தமிழகத்தில் இப்போதைக்கு போதுமான அளவு தடுப்பூசி இல்லை. அதனால், திட்டமிட்டப்படி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட முடியாது. ஆனால், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெறும்" என்று கூறியிருந்தார். தமிழகம் மட்டுமில்லாமல், இதுபோல பல மாநிலங்களிலும் தடுப்பூசி திட்டம் இன்றைய தினம் தொடங்கப்படவில்லை.

பரபரப்பு
இந்நிலையியில், சித்தார்த் இது தொடர்பாக ஒரு ட்வீட் போட்டுள்ளார்.. "தடுப்பூசி எங்கடா டேய்?" என பதிவிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. இந்த ட்வீட்டை பார்த்த பலரும் திரண்டு வந்து பதிலளித்து வருகின்றனர்.. இதையடுத்து, Vaccine enga da dei?' என்ற ஹேஷ்டேக் வைரலாகியும் வருகிறது.

மாத்திரைகள்
அதேபோல மற்றொரு டிவீட்டில், இந்த வருஷத்தின் இறுதியில் கொரோனாவுக்கு எதிரான மாத்திரைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஃபைசர் நிறுவனம் அறிவித்துள்ளது. உண்மையிலேயே இது வரவேற்கத்தக்க ஒன்று. இருந்தாலும் நாம் எல்லாருமே தடுப்பூசியை சீக்கிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் தடுப்பூசிகளே இல்லாமல் எப்படி தடுப்பூசி போட்டுக்கொள்வது? தடுப்பூசிகள் எங்கே? என்று கேட்டுள்ளார்.

பதிலடி
எனினும், ஒருசிலர் சித்தார்த் ட்வீட்டுக்கு பதிலளித்துள்ளனர்.. அதில், "எங்கே என்று கேட்டால் வீட்டிற்கு வந்திடுமா? எதையும் முறைப்படி செய்ய வேண்டும்.. இதுவும் முடியவில்லை என்றால் அரசு மருத்துவமனையை தொடர்பு கொள்ளவும், நீங்கள் எந்த ஏரியா என்று கூறினால் அந்த ஏரியாவில் எங்கே தடுப்பூசி போடுவார்கள் என்ற விபரத்தை தருகிறேன், இங்க வந்து சும்மா கத்தக்கூடாது" என்றும், இது வரைக்கும் 15 கோடிக்கு மேல இந்தியால தடுப்பூசி போட்டுக் கிட்டாங்க என்றும் சித்தார்த்துக்கு பதிலளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications