பிக்பாஸில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த ஓட்டு கூட கமலுக்கு கிடைக்காது.. வைகைச் செல்வன்
சென்னை: பிக்பாஸில் பங்கு பெற்ற ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த ஓட்டு கூட கமலஹாசனுக்கு கிடைக்காது என அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் விமர்சனம் செய்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 104-வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் காந்தி ரோட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் கலந்து கொண்டார்.

வாக்காளர்கள்
அப்போது அவர் பேசியதாவது: வாடகை பாக்கி வைத்திருந்த ரஜினிகாந்த் இறுதியில் என்னிடம் வாடகை கேட்காதீர்கள். நான் அரசியலுக்கு வரவில்லை என கூறிவிட்டார். டிடிவி தினகரன் உலக அரசியல் வரலாற்றிலேயே வாக்காளர்களுக்கு கடன் வைத்த ஒரே நபராவார்.

டார்ச்லைட்
இதில் அதிமுகவும் அமுமுகவும் ஒன்றிணையுமா? என்று பொய் பிரச்சாரம் செய்கிறார். கமல்ஹாசன் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பிக்பாஸில் பங்குபெற்ற ஷிவானி, ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த ஓட்டுகள் கூட கமல்ஹாசனுக்கு கிடைக்காது. ஏனெனில் ரம்யா பாண்டியனுக்கு நானே 5 ஓட்டுக்கள் போட்டு உள்ளேன்.

நல்ல பெண்
ரம்யா பாண்டியன் பார்ப்பதற்கு அழகாகவும் நல்ல பெண்ணாகவும் இருப்பதனால் பிழைத்துப் போகட்டும் என ஐந்து ஓட்டுகள் போட்டேன். மூன்று கோடி நான்கு கோடி ஓட்டுகள் விழுவதற்கு அரசியல் களம் பிக்பாஸ் அல்ல என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

விமர்சனம்
கமல்ஹாசன் கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் தனது பிரச்சாரத்தில் ஆளும் கட்சியை விமர்சனம் செய்து பேசி வருகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
-
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications