தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்!
சென்னை: தமிழக சட்டசபையில் எனது குரல் ஒலிக்காது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் வைகோவை போட்டியிட அவரது கட்சி நிர்வாகிகள் வற்புறுத்தி வந்த நிலையில் அவர் இவ்வாறு மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 29 நாட்கள் உள்ளன. இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

அந்த 4-ல் 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும் ஒரு தொகுதியில் தனிச் சின்னமான தீப்பெட்டி சின்னத்திலும் போட்டியிடுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அரியலூர், மதுராந்தகம், மதுரை தெற்கு, வாசுதேவநல்லூர், சாத்தூர், பல்லடம் ஆகிய 6 தொகுதிகளில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது.
இதில் சாத்தூர், வாசுதேவநல்லூர், அரியலூர், மதுரை தெற்கு ஆகிய 4 தொகுதிகளில் வென்றது. இந்த நிலையில் வரும் தேர்தலில் கடந்த முறை வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளையே மதிமுக கேட்கக் கூடும். எனினும் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட பிரபலமான முகம் தேவை என்பதால் வைகோ போட்டியிட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் விரும்பினர்.
இதனால் அவர் கோவில்பட்டி அல்லது சாத்தூர் தொகுதியில் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடுவார் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் நேற்று வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் "வைகோவின் குரல் சட்டசபையில் ஒலிக்க வாய்ப்புள்ளதா" என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு வைகோ, "ஒலிக்காது" என ஒற்றை வார்த்தையில் பதிலளித்தார். மேலும் அவர் கூறுகையில், "இந்த தேர்தல் குறித்து ஏற்கனவே திட்டவட்டமாக கூறியுள்ளேன்.
திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெறும். திமுக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். கூட்டணி கட்சிகளும் வெல்லும். இதுவே தமிழக மக்களின் தீர்ப்பாக இருக்கும் என்றார். எனவே 4 தொகுதிகளிலும் மதிமுக நிர்வாகிகள்தான் போட்டியிடுவார்கள்.
மதிமுகவில் ஏற்கெனவே மல்லை சத்யா பிரிந்து தனி அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். அது போல் மதிமுகவில் உள்ள சிலர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதையெல்லாம் சமாளித்து மதிமுக தனி சின்னத்தில் வெல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
-
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து?












Click it and Unblock the Notifications