மதிமுகவுக்கு ஒளிமயமான எதிர்காலம்! எவர் நினைத்தாலும் கழகம் சிதையாது! முயற்சி முனை மழுங்கும்! -வைகோ
சென்னை: மதிமுகவை எவர் நினைத்தாலும் உருக்குலைக்க முடியாது என்றும் முயற்சிகள் அனைத்தும் முனை மழுங்கும் எனவும் வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக 30ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கவுள்ள நிலையில் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதைக் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக வைகோ தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது;
''மே 6 2023ல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் 30 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. நாம் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கிற பொழுது பெருமித உணர்வும் அதே சமயத்தில் திகைப்பும் ஏற்படுகிறது.
திராவிட இயக்கத்தின் ஒரு கூறாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் காலத்தின் தேவையாக கரு கொண்டது. ஒரு மாபெரும் இலட்சிய இயக்கமாக உரு கொண்டது.
இந்த மூன்று பத்து ஆண்டுகளில் எத்தனையோ காட்டாறுகளை நாம் கடந்து வந்திருக் கிறோம். அதுவும் நெருப்பு ஆற்றில் நீந்தி வந்திருக்கிறோம்.
ஜூன் 14 ஆம் தேதி கழகத்தின் 29 வது பொதுக்குழு கூடி தலைமைக் கழக நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் வகையில் திட்டமிடப்பட்டிருக்கிறது.
பொதுக் குழுவில் கழகம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து திட்டவட்ட மான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.
2024 நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் கழகம் அமைக்க வேண்டிய வியூகங்கள் குறித்தும் பொதுக்குழுவில் தீர்மானிக்கப்படும்.
குளித்தலையில் நடந்த கழகத்தின் மாணவரணி செயலாளர் தம்பி பால.சசிகுமார் திருமண விழாவில் நான் குறிப்பிட்டதை போல கழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது. கடந்த காலங்களில் கழகத்தை சிதைக்க எண்ணியவர்கள் நினைப்பில் மண் விழுந்தது என்றும் அந்த திருமண விழாவில் பேசினேன். அதை மீண்டும் நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.
பாச இழைகளால் பின்னப்பட்டுள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் எனும் இந்த மகத்தான இயக்கத்தை எந்த உற்பாதத்தாலும் உருக்குலைக்க முடியாது. அந்த முயற்சிகள் அனைத்தும் கடந்த காலங்களில் முனை மழுங்கியது போலவே எவர் நினைத்தாலும் இப்போதும் அதுவே நடக்கும்.
முப்பதாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தமிழக அரசியலில் முதன்மையான இடத்தை பெற்றே தீரும்.'' இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications