நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு நாடகம்.. வைகோ விமர்சனம்
சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு நாடகம் நடத்துகிறது என ராஜ்யசபா எம்பி வைகோ விமர்சனம் செய்துள்ளார்.
மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நுழைவு தேர்வான நீட்டை தமிழக மக்கள் எதிர்க்கின்றனர். தேசிய அளவில் நடத்தப்படும் இந்த தேர்வால் கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி நாடாளுமன்றத்தில் திமுக கோரியது. மேலும் நீட் தேர்வால் உயிர் பலி ஏற்பட்டுள்ளதால் அந்த தேர்விலிருந்து தமிழகம், புதுவைக்கு விலக்கு அளிக்குமாறு எம்.பி.க்கள் வைத்திலிங்கம், ஆ.ராசா, செல்வராஜ், மாணிக்கம்தாகூர், ராஜேஷ் பாய் நரன்பாய் சவுடாஸமா ஆகியோர் எழுத்துப்பூர்வமாக எழுப்பி இருந்த கேள்விக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் நிஷங்க் பதில் அளித்தார்.
அவர் கூறுகையில் நீட் தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதே வேளையில் கூட்டு நுழைவுத்தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை கணினி சார்ந்த தேர்வாக நடத்தப்படுகிறது. நீட் தேர்வு மத்திய இடைநிலை கல்வி சி.பி.எஸ்.இ. மூலம் கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்பட்டது.
நீட் தேர்வில் தேர்ச்சி அடையாமல் போனதற்காக மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டதாக எந்தவித தகவலும் இல்லை என தெரிவித்திருந்தார். இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளரும் ராஜ்யசபா எம்பியுமான வைகோ கூறுகையில் நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு நாடகம் நடத்துகிறது.
நீட் தேர்வால் 6 உயிர்கள் பறிபோய் இருக்கிறது. தமிழ்நாடு அரசு பாஜகவின் கொத்தடிமை அரசாக இருக்கிறது என்றார் வைகோ.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications