5 எழுத்தை கண்டுபிடிச்சா ரூ.5 லட்சம்.. 'மகா கவிதை' நூலுக்காக மெகா பரிசு போட்டியை அறிவித்த வைரமுத்து!
சென்னை: கவிஞர் வைரமுத்துவின் 39வது நூலான 'மகா கவிதை' விரைவில் வெளியாக உள்ள நிலையில் அதன் தலைப்பை வைத்து ரூ. 5 லட்சம் பரிசு போட்டி ஒன்றை அறிவித்துள்ளார் வைரமுத்து.
இன்று தமிழ்த் திரையிசை பாடலாசிரியர்களில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் வைரமுத்து, 1980ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜா இசையில் வெளிவந்த 'நிழல்கள்' திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கவிஞராக நுழைந்தார். 40 ஆண்டு காலத்தைக் கடந்த சினிமா வாழ்க்கையில், அவர் 7,500க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியுள்ளார். இத்தனை ஆண்டு காலமாக இந்தியாவின் முன்னணி திரையிசைக் கவிஞராக வைரமுத்து கோலோச்சி வருகிறார்.

ட்ரெண்டிங்காக புதிய பாடலாசிரியர்கள் அறிமுகமாகி வரும் இக்காலத்திலும், தொடர்ந்து, படங்களுக்கு பாடல் வரிகளை எழுதி வருகிறார் வைரமுத்து. இதுவரை தனது திரையிசை பாடல்களுக்காக ஏழு தேசிய விருதுகளை வென்றுள்ளார் வைரமுத்து. இது எந்த இந்திய பாடலாசிரியருக்கும் இதுவரை கிடைக்காத கவுரவம். மேலும், பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் சாகித்ய அகாடமி விருது ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
திரையிசை மட்டுமின்றி, இலக்கியத்திலும் வைரமுத்துவின் பங்களிப்பு பெரிது. இதுவரை வைரமுத்து தமிழ் மொழியில் கவிதைகள் மற்றும் நாவல்கள் என 38 புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றில் பல ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், மற்றும் ரஷ்ய் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. வைரமுத்துவின் பல புத்தகங்கள் தமிழ்நாட்டில் அதிக விற்பனையான புத்தகங்கள் என்ற சாதனையைப் படைத்துள்ளன.
இந்நிலையில், வைரமுத்துவின் 39வது நூல் விரைவில் வெளியாக உள்ளது. இதுவரை எந்த ஊடகத்திலும் வெளிவராத கவிஞர் வைரமுத்துவின் இந்த புத்தம் புதிய படைப்புக்கு 'மகா கவிதை' என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளிவரும் வைரமுத்துவின் கவிதை நூல் இதுவாகும். விரைவில் இந்த நூல் வெளியிடப்பட உள்ளது. இதன் அட்டைப்படம் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த நூலை சூர்யா பதிப்பகம் வெளியிடுகிறது.
வைரமுத்துவின் 'மகா கவிதை' நூல் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இந்த நூல் தொடர்பாக, ரூபாய் 5 லட்சம் பரிசுப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளார் கவிஞர் வைரமுத்து. 'மகா கவிதை' என்னும் தலைப்பில் உள்ள ஐந்து எழுத்துகளில் 5 உள்ளடக்கங்கள் ஒளிந்துள்ளதாகவும், அதை கண்டுபிடிப்பவருக்கு 1 எழுத்துக்கு ரூபாய் 1 லட்சம் என மொத்தமாக 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் வைரமுத்து அறிவித்துள்ளார்.
போட்டியில் பங்கு பெற விரும்புவோர் 5 எழுத்துக்களின் உள்ளடக்கங்களையும் [email protected] என்ற இ-மெயில் முகவரிக்கு நவம்பர் 30ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்றும், இந்த போட்டியில் பரிசு வெல்பவர்களுக்கு, ரூ.5 லட்சம் பரிசை விழா மேடையில் வைத்து வழங்குவோம் என்றும் வீடியோவில் தெரிவித்துள்ளார் வைரமுத்து.
'மகா கவிதை'
— வைரமுத்து (@Vairamuthu) October 19, 2023
அறிவுப் போட்டி அறிவிப்பு
ஐந்து லட்சம் பரிசு#மகாகவிதை #MahaKavithai pic.twitter.com/TUuMQf1orw
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications