கருணாநிதி 2-ம் ஆண்டு நினைவு நாள்- வைரமுத்து மலர்தூவி நினைவஞ்சலி
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 2-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து இன்று மலரஞ்சலி செலுத்தி வணங்கினார்.

தமிழக அரசியல் முகமாக, திராவிடர் பேரியக்கத்தின் அடையாளமாக திகழ்ந்தவர் கருணாநிதி. 2 ஆண்டுகளுக்கு முன்னர் இதே ஆகஸ்ட் 7-ந் தேதி கருணாநிதி காலமானார்.

கருணாநிதியின் 2-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உலகம் முழுவதும் தமிழர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கருணாநிதியின் உருவபடத்துக்கு அக்கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் மலர்தூவி வணக்கம் செலுத்தினர்.

சென்னையில் கருணாநிதியின் நினைவிடத்திலும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. சென்னை கடற்கரையில் உள்ள நினைவிடம், கோபாலபுரம் இல்லம், சிஐடி காலனி இல்லம் ஆகியவற்றுக்கு சென்ற கவிஞர் வைரத்து, கருணாநிதியின் உருவபடத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.













Click it and Unblock the Notifications