திண்டுக்கல் வருகிறேன்.. நான் பெற்ற தங்க பேனாவை நந்தினிக்கு தருகிறேன்.. வைரமுத்து நெகிழ்ச்சி ட்வீட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்களை பெற்ற அரசு பள்ளி மாணவி நந்தினிக்கு தான் பெற்ற தங்க பேனாவை பரிசாக தருகிறேன் என கவிஞர் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்வு மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடந்தது. தமிழகத்தில் 8 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதினர்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மே 7 ஆம் தேதி நீட் தேர்வு இருப்பதால் மாணவர்கள் மனரீதியாக பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டன.

Vairamuthu praises Government school student Nandhini who got 600 marks in Tamilnadu 12th ecxam

தேர்வு முடிவுகள் நேற்றைய தினம் வெளியானது. இதில் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த தேர்வில் திண்டுக்கல் அரசு பள்ளி மாணவி நந்தினி 600 க்கு 600 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார். தச்சு தொழிலாளியின் மகளான இவருக்கு சிஏ படிக்க விருப்பம் என தெரிவித்துள்ளார். ஏழ்மையிலும் பெற்றோருக்கும், அரசு பள்ளிக்கும் பெருமை சேர்ந்த நந்தினிக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில் அவரை கவிஞர் வைரமுத்துவும் பாராட்டியுள்ளார்.

Vairamuthu praises Government school student Nandhini who got 600 marks in Tamilnadu 12th ecxam

இதுகுறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

ஒரு
தச்சுத் தொழிலாளியின் மகள்
மாநிலத் தேர்வில்
உச்சம் தொட்டிருப்பது
பெண்குலத்தின் பெருமை
சொல்கிறது

எப்படிப் பாராட்டுவது?

அண்மையில் நான்பெற்ற
தங்கப் பேனாவைத்
தங்கை நந்தினிக்குப்
பரிசளிக்கிறேன்

திண்டுக்கல் வருகிறேன்;
நேரில் தருகிறேன்

உன் கனவு
மெய்ப்படவேண்டும் பெண்ணே!

Vairamuthu praises Government school student Nandhini who got 600 marks in Tamilnadu 12th ecxam

இவ்வாறு தனது ட்விட்டரில் வைரமுத்து கூறியிருக்கிறார். இதற்காக அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அழகி, சொல்ல மறந்த கதை உள்ளிட்ட சினிமாக்களை இயக்கியவர் இயக்குநர் தங்கர்பச்சான். இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கருமேகங்கள் கலைகின்றன என்ற படத்தை எடுத்துள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வைரமுத்துவுக்கு அந்த படக்குழுவினர் சார்பில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் தயாரிப்பாளர் வீரசக்தி, வைரமுத்துவை பாராட்டி பேசினார். அப்போது வைரமுத்துவுக்கு தங்க பேனாவை பரிசாக கொடுத்தார். இந்த பேனாவைதான் மாணவி நந்தினிக்கு வைரமுத்து கொடுப்பதாக கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+