பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. வைரமுத்து பாடல் வரியை மாற்றி அவருக்கே அனுப்பிய நெட்டிசன்ஸ்
சென்னை: பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், வைரமுத்து எழுதிய பாடல் வரிகளை மாற்றி, அதை அவருக்கே ரசிகர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டரின் விலை ஒன்றும் சொல்ல முடியாத அளவுக்கு எக்குத்தப்பாய் எகிறி வருகிறது. தற்போது, கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. சமீபத்தில் கடந்த 1-ம் தேதி ரூ.25 உயர்த்தப்பட்ட நிலையில், 2-வது முறையாக மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பெட்ரோல் - டீசல் விலையும் தொடர்ச்சியாக விலை உயர்ந்து வருகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 91.45 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. அதிகபட்சமாக இந்தூரில் 97.35 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலை ஏற்றத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்துவின் ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது. அவர் 'இயற்கை எனும்' படத்தில் எழுதிய, 'காதல் வந்தால் சொல்லி அனுப்பு.. உயிரோடிருந்தால் வருகிறேன்' என்ற பாடலை லைட்டாக உல்டா செய்து அவருக்கே ரசிகர்கள் அனுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து வைரமுத்து இன்று தனது ட்விட்டர் பதிவில், "என் பாட்டு வரியை மாற்றி
எனக்கே அனுப்புகிறார்கள் :
'காதல் வந்தால் சொல்லி அனுப்பு;
பெட்ரோல் இருந்தால் வருகிறேன்'
#PetrolDieselPriceHike
என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு ரசிகர்கள், இந்த காலத்தில் உங்களை இந்தப் பாடலை எழுத சொல்லி இருந்தால், நீங்களும் இப்படித்தான் தான் எழுதியிருப்பீர்கள் என்று பதிலளித்து வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications