வள்ளுவர் மறை.. வைரமுத்து உரை! அனைவரும் வாருங்கள்.. கவிப்பேரரசு அழைப்பு!
சென்னை: கவிஞர் வைரமுத்து எழுதிய 'வள்ளூவர் மறை, வைரமுத்து உரை' எனும் நூல் நாளை வெளியாக இருக்கிறது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக்கொள்கிறார். இந்நிலையில் வைரமுத்து அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
உலக பொதுமறையாக விளங்கும் திருக்குறளுக்கு பலரும் உரை எழுதியுள்ளனர். பரிமேலழகர், வ.உ.சிதம்பரனார், திரு.வி.கல்யாணசுந்தரனார், தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், தேவநேய பாவாணர், நாமக்கல் கவிஞர், மு.வரதராசனார், புலவர் குழந்தை, சி.இலக்குவனார், கருணாநிதி, நெடுஞ்செழியன் ஆகியோர் வரிசையில் தற்போது வைரமுத்தும் இடம் பெற்றிருக்கிறார்.

கடந்த ஆண்டு நடந்த திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவின் நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றியிருந்த வைரமுத்து, திருக்குறளுக்கு உரை எழுதப்போவதாக அறிவித்திருந்தார். இதனையடுத்து தற்போது அதை முழுமையாக எழுதி முடித்திருக்கிறார். இந்நிலையில் இந்த நூல் எப்படி இருக்கும் என்பதற்கான விளக்கத்தை வீடியோ மூலம் வைரமுத்து வெளியிட்டிருந்தார்.
அதில், "மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின், என்கிற 969வது குறளுக்கு காலங்காலமாக ஒரு பிழைப்பட்ட பொருளே சொல்லப்பட்டு வந்திருக்கிறது. 'கவரி மான்' என்று பொருள் கொண்டு ஒரு மயிர் உதிர்ந்து விட்டாலும், கவரி மான் இறந்துவிடும். அதுபோல, மானத்தை இழந்தவர்கள் உயிரிழந்துவிடுவார்கள் என்பது சொல்லப்பட்டு வந்த பொருள்.
ஒரு மயிர் உதிர்வது என்பது எந்த விலங்குக்கும் எளிதான விஷயம்தான். அது வளர்சிதை மாற்றம்தான். ஒரு மயிர் உதிர்வதால் எந்த விலங்கும் இறந்துவிடுவதாக அறிவியல் கூறவில்லை. இந்த குறளுக்கு நேரிய பொருள், அறிவியல் கூறிய பொருளை எழுதியுள்ளேன்.
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்
இந்த குறளில் 'கவரி மா' என்பதுதான் பொருளே தவிர, கவரி மான் என்பது அல்ல. சொல்லாட்சி, கவரி மா என்றுதான் இருக்கிறது. மா என்றால் விலங்கு. உடலில் கற்றை முடியை கவரியாக கொண்டு குளிரை தாங்கிக்கொண்டிருக்கும் பனி நாட்டு விலங்கு. அந்த கற்றை முறை முழுவதும் விழுந்துவிட்டால் குளிர் தாங்காமல் அந்த விலங்கு இறந்துவிடும்.
அதுபோல மானமுள்ள உயர்ந்த சான்றோர், தங்கள் மானத்திற்கு இழுக்கு நேர்ந்துவிடின் இறந்துவிடுவர் என்று எழுதியிருக்கிறேன். அறிவுலகம் இதை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகிறேன்" என கூறியிருந்தார்.
இந்நிலையில் நாளை நூல் வெளியிட்டு விழா நடக்கிறது. இதற்கு முதலமைச்சர் வருகை தருகிறார். எனவே அனைவரும் வர வேண்டும் என்று வைரமுத்து அழைப்பு விடுத்திருக்கிறார்.
-
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
சென்னை பெருங்குடி ஹாஸ்டலில் குளித்த 29 வயது பெண்.. மறைந்திருந்த இளைஞருக்கு மறக்க முடியாத சம்பவம் -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
"எங்கே பாரதிராஜா? இனி நான் என்ன பதில் சொல்வேன்?” கதறிய வைரமுத்து... கண்கலங்க வைத்த இறுதி மரியாதை! -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்! -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட்












Click it and Unblock the Notifications