இரு மொழிக் கொள்கையை தாங்கிப் பிடிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தயங்க தேவையில்லை.. வைரமுத்து
சென்னை: இரு மொழிக் கொள்கையை தாங்கிப் பிடிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தயங்க தேவையில்லை என கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கையை தயார் செய்ய கஸ்தூரி ரங்கன் தலைமையில் மத்திய அரசு 2017ஆம் ஆண்டு ஒரு குழுவை நியமித்தது. இந்த குழு 2019-இல் தனது அறிக்கையை வெளியிட்டது.

அதன் மீதான கருத்துகளை ஜூன் 30-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என கூறப்பட்டது. பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் அந்த வரைவில் ஓரிரு திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. திருத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தை மத்திய அரசு இணையதளத்தில் வெளியிட்டது.

இந்த சூழலில் புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. மும்மொழி கொள்கை இதில் திணிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டரில் கூறுகையில் அண்ணா - கலைஞர் இறுதி செய்ததும், எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா உறுதி செய்ததும் இருமொழிக் கொள்கைதான். முதலமைச்சர் பழனிச்சாமி அரசும் அதைத் தாங்கிப் பிடிக்கத் தயங்கத் தேவையில்லை. தேசியக் கொடியை மதிப்போம்; திராவிடக் கொடியும் பிடிப்போம் என தெரிவித்துள்ளார்.
Recommended Video
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications