Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"திராவிட மாடல்.." இந்திய தலைவர்களை ஒற்றுமைப்படுத்தும்... வைரமுத்து பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: "உங்களில் ஒருவன்" புத்தகம் வெளியிட்ட விழாவில் பேசிய கவிஞர் வைரமுத்து, திராவிட மாடல்தான் நாளைய தினம் தேசிய அளவில் தலைவர்களை ஒருங்கிணைக்கப் பயன்படலாம் என்று தெரிவித்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது பிறப்பு, அரசியல் பயணம், திருமணம், மிசா கைது வரை வாழ்க்கை குறிப்புகளை "உங்களில் ஒருவன்" என்ற பெயரில் சுயசரியைதாக எழுதியுள்ளார்.

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் எழுதியுள்ள இந்த புத்தகத்தை வெளியிடும் விழாவில் ராகுல் காந்தி, பிரனாய் விஜயன், உமர் அப்துல்லா, தேஜஸ்வி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

வைரமுத்து பேச்சு

வைரமுத்து பேச்சு

அந்தக் கூட்டத்தில் பேசிய கவிஞர் வைரமுத்து, "ஒவ்வொருவருக்கும் வணக்கம் இது பெரிய மேடை. ஒரு மேடை பெருமை கொள்வது அலங்காரங்களால் இல்லை. ஒரு பெரிய மேடையில் பெருமை என்பது அதன் உள்ளடக்கம் மற்றும் உரையாற்றும் தலைவர்களால். இந்த மேடையைப் பார்த்து, வியந்து நிற்கிறேன் இது கிடைத்தற்கரிய மேடை. யார் யார் அமர்ந்திருக்க ஆளுமைகள் என்று பார்த்தால், இந்தியா புருவங்களை உயர்த்தி பார்க்கும். இந்தியாவின் தேசிய நட்சத்திரம் ராகுல்காந்தி, கேரள முதலமைச்சர் பிரனாய் விஜயன், முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, இளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், அமைச்சர்கள் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி ஆர் பாலு, கனிமொழி மற்றும் நடிகர் சத்யராஜ். இத்தனை பெருமக்களால் இந்த மேடை உயர்ந்து நிற்கிறது. இந்த மேடையில் எங்கள் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், தான் எழுதிய சுயசரிதையைத் தேசிய அடையாளங்களோடு வெளியிடுகிறார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சர். இந்த மாநிலத்தின் கதை. ஆனால் தேசிய அடையாளங்களோடு வெளியிடுகிறார். இத்தனை பெருமைகளை ஒன்றுதிரட்டி வெளியிடுகிறார். ஒரு மகா கவிஞர் சொன்னது மாதிரி நிலவுகளையும் நட்சத்திரங்களையும் ஒரு மேடையில் கொட்டி வைத்திருக்கிறார். இப்படி இந்த ஆளுமை எப்படி இவருக்கு ஏற்பட்டது. இந்த சிந்தனை எப்படி முளைத்தது. இன்று நேற்று வந்த சிந்தனை இல்லை. இந்த நூலைப் படித்தால் இந்த கேள்விக்கு விடை கிடைக்கும். அனைவரும் இந்த புத்தகத்தை வாசிக்க வேண்டும். இந்த புத்தகத்தை முழுமையாக வாசிக்க முடியவில்லை என்றால் முதல்வர் ஸ்டாலின் எழுதிய அந்த முன்னுரையை மட்டும் பேச்சாளர்கள் மனப்பாடம் செய்து மேடைகளில் பேசுங்கள். இந்த விஷயம் சாதாரணமாக ஒரு நாளில் தோன்றியதல்ல!

பல சாதனைகள்

பல சாதனைகள்

1970 பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை ஒரு இளைஞர் தமிழ்நாடு, ஆந்திர, புதுச்சேரி முதல்வர்களைக் கூட்டி ஒரே மேடையில் அமர வைத்துக் கொண்டாடினார். அதுவும் 17 வயதில்.. அந்த இளைஞருக்குப் பெயர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இவருக்குப் பிறவிக்குணம் செயல்படுவது, சிந்திப்பது, விரிந்து உரையாடுவது. களம் காணுவது. இவை அவருக்குப் பிறவிக் குணம், உதிரத்தில் ஊறிய குணம். அண்ணா பெரியார் கலைஞர் என்ற மூன்று பேருடைய ஆளுமைகளை தனக்குள் வாங்கி நடைபெற வேண்டும் என்ற வேகம். அவரிடம் இருக்கிறது. கடந்த 9 மாதங்களாகத் தமிழ்நாட்டை ஒட்டுமொத்த இந்தியாவே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒன்றா இரண்டா பல சாதனைகள்! சொல்வதற்குக் கருணாநிதியின் உவமைகளைப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஸ்டாலினின் சாதனைகளைச் சொல்ல வேண்டும் என்றால் ஆயிரம் நாற்படை ஆதிசேஷன் கூட கம்பர் இடம் இன்னொரு நாக்கை கடன் வாங்க வேண்டும். ஒரு நாள் பார்த்தால் பெண்களுக்கு இலவச பயணம், ஒரு நாள் பார்த்தால் பெட்ரோல் விலை குறைப்பு, ஒரு நாள் பார்த்தால் 7.5 இட ஒதுக்கீடு, ஒரு நாள் பார்த்தால் தமிழ் அர்ச்சகர்கள் நியமனம். இப்படி தினம்தோறும் ஒரு புதிய சாதனை.

கொள்கை பிடிவாதம்

கொள்கை பிடிவாதம்

நேற்று ஓடிய தண்ணீர் இன்றும் ஓடிக் கொண்டிருந்தால் அதன் பெயர் நதி அல்ல. இன்று ஓடுகிற நீர் புதிதாக இருந்தால்தான் அதன் பெயர் நதி! இன்றைக்கு ஒரு சாதனை புதிதாக இருந்தால் தான் அதன் பெயர்தான் அரசு. அந்த அரசு என்ற திட்டத்தைத் தான் முதல்வர் ஸ்டாலின் தனது நெஞ்சில் வைத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்த சாதிக்கும் பெரும் குணம் முதல்வர் ஸ்டாலினுக்கு எப்படி வந்தது. யார் ஒருவனுக்குக் கொள்கை பிடிவாதம் இருக்கிறதோ, அவனுக்குத் தான் சாதிக்கத் தெரியும்! கொள்கை பிடிவாதம் என்பது ஒரு தமிழச்சியின் கற்பு போன்றது. தமிழச்சி ஒரு தனது கற்பில் எப்படி பிடிவாதமாக இருப்பாரோ, அப்படித்தான் தலைவன் தனது கொள்கையில் பிடிவாதமாக இருப்பான். அந்தக் கொள்கை பிடிவாதம் எப்படி வந்தது என்பதை இந்த புத்தகத்தில் கண்டுபிடித்தேன். முதல்வராக இருக்கும் அண்ணாவுக்கு பாராட்டு விழா எடுக்க வேண்டும் என்று கேட்கிறார் அந்ல இளைஞர். உடல்நிலை காரணம் காட்டி மறுக்கிறார் அண்ணா. நான் கேட்கும் இடத்திற்கு நீங்கள் வந்தால் மகிழ்ச்சி அடைவேன் என்கிறார் அந்த இளைஞர். அண்ணா அப்போது கூறியது தனது வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரியது பாராட்டு என்று ஸ்டாலின் அதைக் குறிப்பிடுகிறார். அண்ணா சொன்ன வார்த்தை, "சரியா போச்சு, பிடிவாதத்தில் உங்கள் அப்பாவை மிஞ்சிவிடுவாய் போல இருக்கு. இது அண்ணா சொன்னது. இந்த பிடிவாதம் தான் கொள்கை பிடிவாதம். அது தான் இவரை இந்த இடத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

மொழிப்பற்று

மொழிப்பற்று


என்னைப் போன்றவர்கள், இவர் அருகில் இருந்து இவரை நேசிப்பதற்கு, இவரை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்று கருதுவதற்கும் ஒரு மிக முக்கியமான காரணம் அவரது மொழிப்பற்று. அந்த மொழிப்பற்று என்பது ரத்தத்தில் ஊறிய குணம், திராவிட இயக்கத்தின் கொள்கைகள் ஒவ்வொரு தலைமுறைக்கும் கடத்தப்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் கொள்கைதான்! கொள்கைப் பிடிப்பின் மூலம் தான் மொழிப்பற்று, சுயமரியாதை, பகுத்தறிவு ஆகியவை ஒரு நூற்றாண்டைக் கடந்து பயணிக்கிறது. எங்களுக்கு மொழி என்பது வெறும் கருவி அல்ல! மொழி என்பது எங்களுக்கு எல்லை, நாகரிகம் அடையாளம்! தமிழ் இந்தியா முழுக்க பேசப்பட்டது என்பதற்கு அம்பேத்கர் சாட்சி சொல்கிறார். தமிழ் என்பது தென்னிந்தியர்களுக்கான மொழி அல்ல, ஆரியர்கள் வருவதற்கு முன் அது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து இடங்களிலும் பேசப்பட்டது என்று சொல்கிறார் அம்பேத்கர்: இந்தியா முழுக்க இருந்திருக்க வேண்டிய மொழி.. ஆனால் தமிழகத்துக்குள் முடிந்துவிட்டது. மொழியை அடித்து அடித்து தெற்கு முனைக்குத் திருப்பி விட்டனர்.

திராவிட மாடல்

திராவிட மாடல்

கோவை மாநாட்டில் கருணாநிதி முன்னிலையில் இதே இளைஞர் "மொழிக்காக நாங்கள் உயிரையும் கொடுப்போம். என் தந்தைக்கு சில பிள்ளைகள் இருக்கிறார்கள். நான் ஒருவன் போனால், அவர் ஒன்றும் கவலைப்பட மாட்டார்" என்று சொன்னவர் இவர். அந்த கட்சி தான் இன்று நம்மை ஆள்கிறது.

Recommended Video

    தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் | Oneindia Tamil
    வடஇந்தியாவில் திராவிடம்

    வடஇந்தியாவில் திராவிடம்

    தென்னகத்தில் தோற்றுவித்த இந்த செய்தி ஏன் வட இந்தியாவை ஆழக்கூடாது. திராவிடம் என்ற வார்த்தையைச் சற்று ஒதுக்கிவிட்டு.. தமிழ்நாடு மாடல் என்று கூட நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் அல்லது சமூக மாடல் என்று கூட எடுத்துக் கொள்ளலாம். இந்தியா முழுவதும் சமத்துவம் பெறுவதற்கு இந்த திராவிட மாடலை அமைத்துக் கொடுப்பவர் முதல்வர் ஸ்டாலின். பெரியாரின் நீட்சி அண்ணா, அண்ணாவின் ஆட்சி கலைஞர். இந்த மூன்று பேரின் நீட்சி என்று ஸ்டாலினே சொல்வதைவிட இந்த மூன்று பேரின் திரட்சியாக ஆக வேண்டும் என்று ஆசைப்படுபவர் ஸ்டாலின் என்றுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டும் அதை நோக்கித்தான் அவர் பயணம் மேற்கொள்கிறார்" என்றார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+