ஊறுக்காயா? தமிழை புளிக்க வைக்காதீர்கள்! தப்புக்கு தங்க முலாம் பூசாதீர்கள்! கவிஞர் வைரமுத்து ஆதங்கம்
சென்னை: தப்பும் தவறுமாய் தமிழ் எழுதுகிறவர்கள், சரியான எழுத்தை தவறு என்கிறார்கள், நல்ல தமிழ் அறியாவிட்டால் கேட்டுக் கற்றுத் தெரிந்து தெளியுங்கள் என கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் வளர்ச்சித் துறை உள்ளிட்ட அமைப்புகள் தமிழர்களின் அன்றாடத் தமிழோடு இயங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து கவிப்பேரரசு வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சமூக ஊடகங்களில்
நல்ல நகைச்சுவைகளைப் பார்க்கிறேன்

தப்பும் தவறுமாய்த்
தமிழ் எழுதுகிறவர்கள்
சரியான எழுத்தைத்
தவறென்கிறார்கள்
'ட'ண்ணகரம் 'ற'ன்னகரம்
பொது 'ள'கரம் வகர 'ல'கரம்
எங்கே ஆளப்பட வேண்டும்
என்று அறியாதவர்கள்
தேவையில்லாத
திருத்தம் சொல்கிறார்கள்
வினைத்தொகையில்
வல்லெழுத்து மிகாது என்று
அறியாதவர்கள்
'ஊறுக்காய்' என்று எழுதித்
தமிழைப் புளிக்கவைக்கிறார்கள்
'நினைவுகூறுதல்' என்றே
எழுதிப் பழக்கப்பட்டவர்கள்
'நினைவுகூர்தல்' என்ற
சரியான சொல்லாட்சியைத்
தவறென்று சொல்லித்
தமிழின் கற்பைச்
சந்தேகப்படுகிறார்கள்
'எலும்புவில் தேய்மானம்'
என்று எழுதுவது தவறென்று
அறிந்தவர்கள் கூடக்
'கொழும்புவில் குண்டுவெடிப்பு'
என்று எழுதுகிறார்கள்
வருமொழி வடமொழியாகவோ
மெல்லொலியாகவோ இருப்பின்
வல்லெழுத்து மிகத்தேவையில்லை
என்ற பொதுவிதி அறியாதவர்கள்
எனது தண்ணீர் தேசம் நாவலில்
'த்' எங்கே என்று குத்துகிறார்கள்
திருநிறைசெல்வியே சரி
என்று தெரியாதவர்கள்
திருநிறைச்செல்வி என்று எழுதிப்
பிழையே சரியென்கிறார்கள்
இவர்களோடு மல்லுக்கட்டுவதை
நான் அழகான சண்டை என்றே
கருதுகிறேன்
எமக்குத்
தமிழ் சொல்லித்தரும் பணியில்
ஈடுபடுகிறவர்களைப் பார்த்து
நான் கோபம் கொள்வதில்லை;
கும்பிட்டுச் சிரிக்கிறேன்
நல்ல தமிழ் அறியாவிடில்
கேட்டுக் கற்றுத்
தெரிந்து தெளியுங்கள்
சரியானதைப்
பழிப்பதன் மூலம்
தப்புக்குத்
தங்க முலாம் பூசாதீர்கள்
தமிழ் வளர்ச்சித்துறை,
செம்மொழித் தமிழாய்வு
மத்திய நிறுவனம்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
தமிழ் வளர்ச்சிக் கழகம்,
உலகத் தமிழ்ச் சங்கம்
முதலிய அமைப்புகள்
தமிழர்களின் அன்றாடத்
தமிழோடு இயங்க வேண்டும்
சமூக ஊடகங்களில்
— வைரமுத்து (@Vairamuthu) July 28, 2025
நல்ல நகைச்சுவைகளைப்
பார்க்கிறேன்
தப்பும் தவறுமாய்த்
தமிழ் எழுதுகிறவர்கள்
சரியான எழுத்தைத்
தவறென்கிறார்கள்
‘ட’ண்ணகரம் ‘ற’ன்னகரம்
பொது ‘ள’கரம் வகர ‘ல’கரம்
எங்கே ஆளப்பட வேண்டும்
என்று அறியாதவர்கள்
தேவையில்லாத
திருத்தம் சொல்கிறார்கள்
வினைத்தொகையில்
வல்லெழுத்து…
இவ்வாறு கவிஞர் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார். தமிழை எழுதுவதிலும் படிப்பதிலும் நிறைய பேர் தவறுகளை செய்கிறார்கள். இலக்கணத்திற்கென விதிகள் உள்ளன. அந்த விதிகளை சரியாக படிக்காமல் எல்லாவற்றுக்கும் ஒற்றெழுத்து போட்டு பலர் தமிழை கொல்கிறார்கள் என்பது நிறைய எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்களின் ஆதங்கமாக இருந்து வருகிறது.
அந்த வகையில் அண்மையில் திருக்குறளின் முப்பாலுக்கும் உரை எழுதியிருந்த வைரமுத்து, நல்ல தமிழ் தெரியாதவர்கள் நன்கு படிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். வினைத் தொகையில் வல்லெழுத்து மிகாது என அறியாதவர்கள் ஊறுகாய் என்பதற்கு பதிலாக ஊறுக்காய் என கூறுகிறார்கள். சிலர் ஊறுகாய் என சொல்வதிலும் ஊர்க்கா என சொல்லி தமிழை மோசமாக கையாள்கிறார்கள்.
அதிலும் பலருக்கு எதற்கு மூன்று சுழி ண, எதற்கு இரண்டு சுழி ன, ல, ள, ழ வித்தியாசம் தெரியாமல் ஏதோ கை போன போக்கில் எழுதுகிறார்கள். அதிலும் தப்பும் தவறும் எழுதிவிட்டு தாங்கள் எழுதியதுதான் சரி என்றும் வாதம் செய்கிறார்கள். இது மிகவும் தவறானது. எல்லாவற்றிற்கும் மேல் நாவலான தண்ணீர் தேசத்தில் த் என்ற எழுத்தை (தண்ணீர்த் தேசம்) குத்துகிறார்கள் என கவிஞர் வைரமுத்து கவலை கொள்கிறார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications