சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜூலை 11 இல் பொதுக் குழு நடைபெறாது.. நீதிமன்ற அவமதிப்பு.. கோர்ட்டுக்கு செல்வோம்.. வைத்திலிங்கம்

Google Oneindia Tamil News

சென்னை: ஜூலை 11-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவித்த பொதுக் குழு நடைபெறாது என்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்வோம் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    மேடையிலேயே கடுப்பான EPS | AIADMK பொதுக்குழு கூட்டம் | Oneindia Tamil

    இதுகுறித்து வைத்திலிங்கம் கூறுகையில் அவைத் தலைவராக தமிழ் மகன் உசேனை தேர்வு செய்தது செல்லாது. பொதுவாக அவைத் தலைவர் என்பவர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டு அதிமுக நிறுவன தலைவர், அதிமுக பொதுச் செயலாளர் ஆகியோரால் அறிவிக்கப்படுவது வழக்கம்.

    சதிகாரங்க.. அதிமுகவை அழிவுப்பாதைக்கு கொண்டு போறாங்க.. பொதுக்குழு செல்லாது.. வைத்திலிங்கம் தடாலடி! சதிகாரங்க.. அதிமுகவை அழிவுப்பாதைக்கு கொண்டு போறாங்க.. பொதுக்குழு செல்லாது.. வைத்திலிங்கம் தடாலடி!

    23 தீர்மானங்கள்

    23 தீர்மானங்கள்


    தற்போது அவைத் தலைவர் என்பவர் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரால் அறிவிக்கப்பட வேண்டும். மேலும் 23 தீர்மானங்களை நிராகரித்திருக்கிறார்கள். அதற்கு அவர்களுக்கு உரிமையே இல்லை. அவைத் தலைவருக்கு பொதுக் குழுவை கூட்ட எந்த அதிகாரமும் இல்லை.

     பொதுக் குழு கூட்டம்

    பொதுக் குழு கூட்டம்

    இன்று நடந்த பொதுக் குழு கூட்டத்தில் நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளது. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம். ஜூலை 11-ஆம் தேதி பொதுக் குழு நடைபெறாது. பொதுக் குழுவில் பதவி வெறி தலைக்கேறி காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டனர். 23 தீர்மானங்களையும் நிராகரித்ததால் இந்த பொதுக் குழுவே செல்லாது.

    ஓரங்க நாடகம்

    ஓரங்க நாடகம்

    இன்று நடந்தது பொதுக் குழுவே இல்லை. அரை மணி நேரத்தில் நடத்தி முடிக்கப்பட்ட ஓரங்க நாடகம், பொதுக் குழுவே செல்லாததாகிவிட்டது. தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டு விட்டதால் பொதுக் குழுவே செல்லாததாகிவிட்டது. கூட்டுத் தலைமை குறித்து பேச்சுவார்த்தைக்கு தயார் என்றார்.

    செல்லாது

    செல்லாது

    வரும் ஜூலை 11-ஆம் தேதி அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்படுவார் என அவருடைய தரப்பு உறுதியாக சொல்லி வருகிறது. இந்த நிலையில் வரும் 11 ஆம் தேதி பொதுக் குழு கூடாது. பொதுக் குழு கூடுவதற்கு ஒருங்கிணைப்பாளரின் கையெழுத்து வேண்டும் என வைத்திலிங்கம் சொல்கிறார். மேலும் பொதுக் குழுவே செல்லாததாகிவிட்டாலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பதவிகளில் அப்படியே நீடிப்பார்கள் என்பதையும் வைத்திலிங்கம் தெளிவுப்படுத்திவிட்டார்.

    English summary
    AIADMK Joint Organiser Vaithilingam says that No General council be convened on July 11.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X