சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒற்றை தலைமை.. என்னது இது ஜெயக்குமார் அப்படி சொல்கிறார்.. வைத்திலிங்கம் இப்படி சொல்றாரே!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து யாரும் பேசவில்லை என முன்னாள் எம்பி வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    ஒற்றைத்தலைமைதான் அவசியம்.. பெரும்பான்மையான நிர்வாகிகள் வலியுறுத்தல் - ஜெயக்குமார்

    அதிமுகவில் ஜெயலலிதா இருந்தவரை சட்டசபையை தவிர அமைச்சர்களோ எம்எல்ஏக்களோ வேறு எங்கும் பேசமாட்டார்கள். அவர்களுடைய குரல் எப்படி இருக்கும் என்பது கூட பெரும்பாலும் தெரியாது.

    ஆனால் ஜெயலலிதா மறைந்த பிறகு நிலைமை அப்படியே தலைகீழ் மாறிவிட்டது. ஆளாளுக்கு ஒன்று பேசுகிறார்கள். கூட்டணி கட்சியில் இருந்த பாஜகவை அனுசரிக்கும் போக்கை எடப்பாடி பழனிச்சாமி எடுக்கிறார், ஆனால் மற்றவர்களோ கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

    அதிமுக பொதுச் செயலாளராகிறாரா எடப்பாடி பழனிச்சாமி?.. நடந்தது என்ன? ஓபிஎஸ் கொடுத்த கடும் வார்னிங்? அதிமுக பொதுச் செயலாளராகிறாரா எடப்பாடி பழனிச்சாமி?.. நடந்தது என்ன? ஓபிஎஸ் கொடுத்த கடும் வார்னிங்?

    தேர்தல் தோல்வி

    தேர்தல் தோல்வி

    அது போல் தேர்தல் தோல்வி உள்ளிட்டவைகளில் கூட ஆளாளுக்கு ஒரு கருத்தை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்கள். சரி இங்கு இப்படி என்றால் நேற்று நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும் இப்படிதான் இருக்கிறது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து ஆலோசனை நடத்தியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

    ஒற்றை தலைமை

    ஒற்றை தலைமை

    ஒற்றை தலைமை வேண்டும் என்பதை பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் ஆலோசித்தனர் என்றும் அந்த ஒற்றை தலைமை யார் என்பதை கட்சிதான் முடிவு செய்யும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கு வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார்.

     அதிமுக மாவட்டச் செயலாளர்

    அதிமுக மாவட்டச் செயலாளர்

    அப்போது அவர் கூறுகையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து பேசவில்லை. அது போல் வரும் 23 ஆம் தேதி பொதுக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானங்கள் குறித்தும் பேசவிலலை என்றார். ஒற்றை தலைமை குறித்து பேசியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்த நிலையில் அதற்கு முரண்பாடாக ஒரு கருத்தை கூறியுள்ளார வைத்திலிங்கம்.

    எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்பு

    எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்பு

    முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றது முதல் இன்று வரை அதிமுகவின் முகமாக ஜெயக்குமார்தான் பெரும்பாலும் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் அளித்து வருகிறார். ஆனால் இந்த முறை அவரது கருத்துக்கே எதிர்க்கருத்து சொல்லப்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதை வெளியே சொல்லக் கூடாது என தலைமை உத்தரவு பிறப்பித்திருந்ததாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    EX MP Vaithilingam says that there was no discussion about single leadership.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X