காதலர்கள் தினம்: மெரினாவுக்கு போறீங்களா? காதலிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டால் போச்சு! காதலர்களே உஷார்
சென்னை: சென்னையில் காதலர் தினத்தையொட்டி மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களில் அத்துமீறும் ஜோடிகள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸார் ரோந்து பணியில் ஈடுபடவுள்ளார்கள்.
காதலர் தினம் நாளை பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சுற்றுலா தலங்களில் காதலர்கள் நிரம்பி வழிவர். அந்த வகையில் சென்னையில் மெரினா, எலியட்ஸ் கடற்கரை, மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களில் காதலர்கள் அதிகம் கூடுவர்.

குறிப்பாக மெரினா கடற்கரையில் காதலர்கள் வருகை அதிக அளவில் இருக்கும். இந்த நிலையில் படகுக்கு அடியில் ஏதாவது கடையின் மேடைக்கு அடியில், ஒதுக்குப்புறம், என காதலர்கள் அத்துமீறுவது வாடிக்கை.
இவர்களின் இந்த மாதிரியான சில்மிஷங்களை பொது இடங்களில் செய்வதால் குழந்தைகளை அழைத்து கொண்டு கடற்கரைக்கு வர முடியாத நிலை உள்ளது. அது போல் பூங்காக்களிலும் இப்படித்தான் இருட்டான இடங்களுக்கு சென்று அங்கு அத்துமீறுவது, இதனால் அந்த இடங்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்வோர் முகம் சுளிக்கும் நிலை உள்ளது.
மேலும் பூங்காக்களில் உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்வோரும் சங்கோஜப்படுகிறார்கள். நல்ல நாளிலேயே இப்படி என்றால் காதலர்கள் தினம் என்றால் கேட்கவே வேண்டாம். இதனால் மெரினாவில் அத்துமீறும் காதல் ஜோடிகளை கண்காணிக்க போலீஸார் ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க காதலர் தினம் என்பதே கலாச்சார சீர்கேடு என சில அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. காதலர்கள் தினத்தன்று கழுதைக்கும் கழுதைக்கும் திருமணம் செய்வது, நாய்களுக்கு திருமணம் செய்வது போன்ற செயல்களை செய்து எதிர்ப்பை காட்டுகிறார்கள். மேலும் சிலர் அவர்களை மறைமுகமாக புகைப்படம், வீடியோ எடுத்து மிரட்டவும் செய்கிறார்கள்.
காதலர்களை யாராவது வந்து மிரட்டினால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உயரதிகாரிகள் வாய்மொழி உத்தரவை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தற்போது பள்ளி மாணவர்கள் கூட காதலர்களாக உலா வருகிறார்கள். அவர்களை கண்டறிந்து எச்சரிக்கை விடுத்து வீடுகளுக்கு அனுப்பவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
காதலர்கள் தினத்தன்று காதலர்கள் பரிசாக நிறைய பொருட்களை கொடுத்துக் கொள்வார்கள். இவை காதலர்களின் பொருளாதார தரத்தின் படி மாறுபடும். வாழ்த்து அட்டைகள், சாக்லேட், பொம்மைகள், நகை, செல்போன், ரோஜாப்பூக்கள், டிரஸ் உள்ளிட்ட விதவிதமான பொருட்களை வாங்கி பரிசாக அளிப்பர்.
பொதுவாக இவற்றையெல்லாம் காதலர்கள் வாங்கி பரிசாக கொடுத்தாலும் ரோஜா பூ எப்போதும் முக்கியத்துவம் பெறுகிறது. பல வண்ணங்களில் விற்பனைக்கு குவிக்கப்படும் ரோஜாப்பூக்களின் விலை தற்போது உயர்ந்துள்ளது. ஒவ்வொரு காதலர் தினத்தன்றும் பூக்களின் விலை உயரும். அந்த வகையில் இந்த ஆண்டும் உயர்ந்துள்ளது.
எல்லா வண்ணங்களிலும் ரோஜா பூக்கள் கிடைப்பதால் இதை காதலர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கிறார்கள். பனி, வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்த ஆண்டு ரோஜா பூக்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால் நாளைய தினம் ரோஜாக்களின் தேவை அதிகமாக இருப்பதால் அதன் விலை 4 மடங்கு உயர்ந்துள்ளதாக தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications