• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வள்ளலார் 200...ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல திமுக..ஓராண்டுக்கு அன்னதானம்..முதல்வர் அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: வள்ளலாரின் 200வது பிறந்தநாளை முன்னிட்டு 52 வாரங்கள் வள்ளலார் முப்பெரும் விழா கொண்டாடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல என்று கூறிய முதல்வர் ஸ்டாலின் பசிப்பிணி போக்கிய ராமலிங்க அடிகளாரின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக ஓராண்டுக்கு அன்னதானம் நடைபெறும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திருவருட் பிரகாச வள்ளலார் முப்பெரும் விழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பாக டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் தலைமையில் 14 பேர் கொண்ட சிறப்பு குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. வள்ளலார் தருமசாலை துவக்கிய 156-வது ஆண்டு தொடக்கமும், வள்ளல் பெருமான் இவ்வுலகிற்கு வருவிக்க உற்ற 200-வது ஆண்டு தொடக்கமும் மற்றும் ஜோதி தரிசனம் காட்டுவித்த 152-வது ஆண்டும் வரவிருப்பதையொட்டி இம்மூன்று நிகழ்வுகளையும் இணைத்து அவரது 200-வது அவதார ஆண்டான அக்டோபர் 2022 முதல் அக்டோபர் 2023 வரை, 52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் முப்பெரும் விழாவினை நடத்திடவும் அவ்விழாவினை சிறப்புற நடத்திடுவதற்கான செயல் திட்டங்களை வகுத்திட கீழ்க்காணும் 14 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்புக்குழு ஒன்றினை அமைத்திடவும் அனுமதி வழங்கி அரசு ஆணையிடுகிறது என்று அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்ப்பில் வள்ளலார் முப்பெரும் விழா தொடங்கியது. வள்ளலார் முப்பெரும் விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் வள்ளலார்-200 இலச்சினை, தபால் உறை, சிறப்பு மலர் ஆகியவற்றை முதல்வர் வெளியிட்டார்.

நடுரோட்டில் நீச்சல் குளமா? ஸ்டாலின் ஐயா.. பழைய வீடியோவை பகிர்ந்து.. சிக்கலில் மாட்டிய பாஜக நிர்மல்! நடுரோட்டில் நீச்சல் குளமா? ஸ்டாலின் ஐயா.. பழைய வீடியோவை பகிர்ந்து.. சிக்கலில் மாட்டிய பாஜக நிர்மல்!

வள்ளலார் முப்பெரும் விழா

வள்ளலார் முப்பெரும் விழா

இதனை தொடர்ந்து வள்ளலார் முப்பெரும் விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; வள்ளலார் ஏற்றிய தீபத்திற்கு 152 ஆண்டுகள் ஆகிறது. வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க வல்லுநர் குழு ஆலோசனை பெறப்பட்டுள்ளது. ரூ.100 கோடியில் விரைவில் வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமான பணி தொடங்கும். பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாகவும் அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாகவும் திமுக அரசு அறிவித்தது.

ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல

ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல

வள்ளலார் பிறந்நாளை தனிப்பெரும் கருணை நாளாக திமுக அரசு அறிவித்துள்ளது. ஆன்மிகத்துக்கு எதிரானது அல்ல திமுக, ஆன்மிகத்தை அரசியலுக்கும் சுயநலத்துக்கும் பயன்படுத்துவதற்கு எதிரானதுதான் திமுக ஆட்சி. திராவிட மாடல் ஆட்சி ஆன்மிகத்துக்கு எதிரானது என்று மதத்தை வைத்து பிழைக்கக்கூடிய சிலர் பேசி வருகிறார்கள். தமிழ் மண்ணின் சமய பண்பாட்டை அறிந்து திமுக அரசு செயல்படுகிறது. வள்ளலாரை போற்றுவது திமுக அரசின் கடமை என்று கூறினார்.

ஓராண்டுக்கு அன்னதானம்

ஓராண்டுக்கு அன்னதானம்

அமைச்சர் சேகர்பாபு ஆன்மீக செயற்பாட்டாளர். வள்ளலார் நகரை முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவாக்கினார்.
வள்ளலார் ஏற்றி வைத்த தீபத்திற்கு 152 ஆண்டுகள் ஆகின்றன. திமுக அரசு ஆட்சிப்பொறுப்பேற்றதும் வள்ளலார் பிறந்தநாளை தனிப்பெரும் கருணை நாளாக அறிவித்து கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று கூறியிருக்கிறோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

ராமலிங்க அடிகளார்

ராமலிங்க அடிகளார்

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற வாக்கியத்திற்கு சொந்தக்காரர் வள்ளலார். மக்களின் பசிப்பிணி போக்கிய வள்ளலாரின் இயற்பெயர் ராமலிங்க அடிகளார் அக்டோபர் 5, 1823 கடலூர் மாவட்டம் மருதூரில், ராமையாபிள்ளை - சின்னமைய்யார் தம்பதிக்கு மகனாக பிறந்தார். சிறந்த சொற்பொழிவாளர், நூலாசிரியர், மொழி ஆய்வாளர், சித்த மருத்துவர் , சமூக சீர்திருத்தவாதி என பன்முகங்களை கொண்டவர் வள்ளலார். சன்மார்க்கத்திற்காக வாழ்வை அர்பணித்த வள்ளலாரின் 197 ஆவது பிறந்த நாளையொட்டி சிறப்பு பிராத்தனைகள் மற்றும் அன்னதானங்கள் நடைப்பெற்றன.

பசிப்பிணி போக்கிய வள்ளலார்

பசிப்பிணி போக்கிய வள்ளலார்

1867ஆம் ஆண்டு வடலூரில் தர்ம சாலை ஒன்றை தொடங்கி அனைவருக்கும் உணவு வழங்கினார். மக்களின் பசியை போக்க வழி கண்டவர் வள்ளலார். வள்ளலார் வாழ்ந்த காலத்தில் அவரது கருத்துக்கள் அனைத்தும் முற்போக்காகவே பார்க்கப்பட்டன. அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை என்று முழங்கியவர் வள்ளலார். இவர் பாடிய ஆறாயிரம் பாடல்கள், திருவருட்பாவாக தொகுக்கப்பட்டுள்ளது. ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டுள்ள இது, முதலில் இராமலிங்கஅடிகளின் தலைமைச் சீடர் தொழுவூர் வேலாயுதனாரால் நான்கு திருமுறைகளாக வெளியிடப்பட்டது.

English summary
Chief Minister Stalin has announced that 52 weeks of Vallalar Mupperum Festival will be celebrated on the occasion of Vallalar's 200th birth anniversary. Chief Minister Stalin said that DMK is not anti-spiritual and to celebrate the birthday of Ramalinga Adigalar, Chief Minister Stalin has also announced that a one-year food donation will be held.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X