புருஷன் விட்டுட்டு போயிட்டாரு.. எல்லாம் உலக பேமஸ் ஆனது தான் காரணம்! அதிர வைத்த வள்ளி கும்மி சங்கீதா
சென்னை: கொங்கு மண்டலத்தில் மிகவும் புகழ்பெற்ற வள்ளி கும்மி இப்போது தமிழகம் முழுவதும் நிகழ்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. அப்படி திடீரென வள்ளி கும்மி மூலம் ட்ரெண்ட் ஆன சங்கீதா மீண்டும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். உலக அளவில் பேமஸ் ஆனதால் தனது கணவர் தன்னை விட்டு பிரிந்து விட்டதாக கூறி அதிர வைத்திருக்கிறார்.
வள்ளி கும்மி என்பது கொங்கு வட்டாரங்களில் நடத்தப்படும் ஒரு வகை நடனத்தோடு சேர்ந்த கலையாகும். கொங்கு மண்டலத்தின் அருமை பெருமைகளை பாடலோடு நடனமாக ஆடுவார்கள். தென் மாவட்டங்களில் ஒயிலாட்டம் போல கொங்கு மண்டலங்களின் வள்ளி கும்மி மிகவும் பிரசித்தி பெற்றது. கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வள்ளி கும்மி அரங்கேற்றம் செய்யப்படுகிறது.
ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தனித்தனியாக வள்ளி கும்மி குழு ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் தான் சங்கீதா.

நடனம் ஆடிக் கொண்டிருக்கும் போதே அவரது கணவர் அதனை வீடியோ எடுத்து வெளியிட நாக்கை துருத்தியவாறு கண்சிமிட்டினார். என்ன ஆனது என தெரியவில்லை நெற்றிசனன்களுக்கு ஒரே இரவில் அவரை தமிழகம் முழுவதும் தெரியும் நபராக மாற்றி விட்டனர். இவர் தான் வள்ளி கும்மி கலையை உலகறிய செய்தார் என ரைட்டப்புகள் வேறு தொடர்ந்தது. இது ஒருபுறம் இருக்க வள்ளிக் கும்மியை விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் பக்கம் திரும்பினார் சங்கீதா. பாடல்களுக்கு நடனமாடி வீடியோ போட வள்ளி கும்மியில் அவரை புகழ்ந்த நெட்டிசன்கள் ரீல்ஸ்களில் கடுமையாக விமர்சிக்க தொடங்கினர்.
மேலும் ஒரு சில நிறுவனங்களுக்கு அவர் பெய்து பிரமோசனம் செய்தார். இதை அடுத்து ஒட்டுமொத்தமாக அவரை ஆன்லைனில் தாக்குதல் நடத்தத் தொடங்கினார்கள். இடையில் என்னை ஏன் இப்படி செய்கிறீர்கள் என பல யூட்யூப் சேனல்களுக்கும் சென்று பேட்டி கொடுத்தார். அந்த சேனல்களும் நன்றாக காசு பார்த்த நிலையில், பல சேனல்களுக்கு சென்று பேட்டி தந்தார். சில நாட்கள் காணாமல் போயிருந்த அவர் தற்போது மீண்டும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் என்னை ஏன் ட்ரோர்ல் செய்தீர்கள் என கேட்க வந்திருக்கிறேன் என கண்ணீர் மல்க பேசினார். இந்த நிலையில் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மீண்டும் விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறார் சங்கீதா. நீங்களாகவே வீடியோ போட்டுவிட்டு நீங்களாகவே புரமோஷன் செய்துவிட்டு நீங்களாகவே புலம்புவது எதற்கு என தற்போது விமர்சிக்கின்றனர்.
இந்த நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள சங்கீதா என்னை மட்டும் ஏன் இப்படி விமர்சிக்கிறார்கள் என தெரியவில்லை என புலம்பியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்," ஆன்லைனில் என்ன நடக்கிறது என தெரியவில்லை. என்னை மட்டும் குறி வைத்து விமர்சிக்கிறார்கள். என் உடல் அமைப்பை பற்றியும் முகத்தைப் பற்றியும் அருவருக்கத்தக்க வகையில் பேசுகிறார்கள். சிலரோ நான் திருநங்கை என கூறுகிறார்கள். என் முகமும் உடலும் இப்படி அமைந்ததற்கு நான் பொறுப்பாகவில்லை. நான் அழகாகவே உணர்கிறேன். ஆனால் மற்றவர்கள் ஏன் என்னை விமர்சிக்கிறார்கள் என தெரியவில்லை. ஓரளவு புகழ் வரத் தொடங்கியதும் எனது கணவரே என்னை விட்டு பிரிந்து விட்டார். என கொட்டி தீர்த்து இருக்கிறார். அந்த பேட்டியில் பலர் அவருக்கு ஆறுதலும், சிலர் இது நீங்களே தேடிக் கொண்டது என விமர்சனத்தையும் வைத்து வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications