35 % மானியம் தரும் தமிழக அரசின் சூப்பர் திட்டம்.. வேளாண் மதிப்பு கூட்டு மையம்.. விவசாயிகளுக்கு ஹேப்பி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக விவசாயிகளின் வசதிக்காகவும், நன்மைக்காகவும், அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்காகவும் அரசு பல்வேறு நலத்திட்டங்களை, உதவிகளை, சலுகைகளை வழங்கி வருகிறது. அந்தவகையில், வேளாண் மதிப்புகூட்டு மையங்கள் அமைக்க, 1.50 கோடி ரூபாய் வரை மானியம் வழங்கப்படும் என்று வேளாண்துறை சர்ப்ரைஸ் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.. இது குறித்து வேளாண்துறை அறிக்கை சொல்வதென்ன?

வேளாண் பொறியியல் துறையின் மூலம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் "மதிப்புக் கூட்டும் எந்திர சேவை மையங்கள்" மானியத்தில் அமைக்கும் திட்டத்தினை கடந்த 2021-22-ம் ஆண்டு முதல் நம்முடைய தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

Subsidy valuation machine service centers TN gov

விளை பொருட்கள் லாபம்

அந்தவகையில், விவசாயிகள் விளை பொருட்களை, தங்கள் பகுதிகளிலேயே மதிப்புக்கூட்டி, அதிக விலைக்கு விற்று லாபம் பெற்றிட மதிப்புக்கூட்டும் எந்திர சேவை மையங்கள், விவசாய குழுக்கள் அல்லது உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம் அமைக்கப்படுகின்றன.

வேளாண் விளை பொருட்களை மதிப்புகூட்டும் எந்திரங்களான சிறிய பருப்பு உடைக்கும் எந்திரம், தானியம் அரைக்கும் எந்திரம், மாவு அரைக்கும் எந்திரம், கால்நடை தீவனம் அரைக்கும் எந்திரம், சிறிய வகை நெல் அரவை எந்திரம், நெல் உமி நீக்கும் எந்திரம். கேழ்வரகு சுத்தப்படுத்தி கல்நீக்கும் எந்திரம், தேங்காய் மட்டை உரித்தெடுக்கும் எந்திரம், நிலக்கடலை செடியில் இருந்து காய் பிரித்தெடுக்கும் எந்திரம்,

50 சதவீத மானியம்

நிலக்கடலை தோல் உரித்துதரம் பிரிக்கும் எந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு எந்திரம், வாழை நார் பிரித்தெடுக்கும் கருவி, பாக்கு உடைக்கும் எந்திரம் மற்றும் சூரிய கூடார உலர்த்திகள் போன்றவற்றில் விவசாயக் குழுக்கள் தங்களுக்கு எந்தவகை எந்திரங்களை வழங்கும்.. மதிப்புக்கூட்டும் எந்திர சேவை மையங்கள் அமைத்திட 50 சதவீத மானியம் பின்னேற்பு மானியமாக இதில் வழங்கப்பட்டு வருகின்றன.

50 சதவீத மானியம் என்பது அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். இதைத்தவிர ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயக் குழுக்களுக்கு கூடுதலாக 20 சதவீதம் மானியம் வழங்கப்படும். அரசு வழங்கும் இந்த மானியத்தின்மூலம் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பலனை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில், வேளாண் மதிப்புகூட்டு மையங்கள் அமைக்க, 1.50 கோடி ரூபாய் வரை மானியம் வழங்கப்படும் என்று வேளாண்துறை தற்போது அறிவித்துள்ளது.. இது குறித்து வேளாண்துறை அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.

அதில், "வேளாண் பொருட்களை பதப்படுத்துதல், மதிப்பு கூட்டுதல் போன்ற தொழில்களை துவங்க முன்வரும், தொழில் முனைவோர் மற்றும் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில், சிறப்பு திட்டம் செயல் படுத்த, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

35% மானியம் தரும் தமிழக அரசு

அதன்படி, 10 கோடி ரூபாய் வரையிலான, புதிய மதிப்பு கூட்டுதல் திட்டங்களுக்கு, முதலீட்டு மானியமாக 25 சதவீதம்; பெண்கள், தொழில் வளர்ச்சியில், பின் தங்கியுள்ள வட்டாரங்களில் துவக்கப்படும் தொழில்களுக்கு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, கூடுதலாக 10 சதவீதம் என, மொத்தம் 35 சதவீதம் மானியம் வழங்கப்படும்.

அனைத்து பிரிவினருக்கும், 5 சதவீத வட்டி மானியம், ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்படும். திட்ட மதிப்பீட்டில், பயனாளிகள் பங்களிப்பு, குறைந்தபட்சம் 5 சதவீதமாக இருக்க வேண்டும்.

ரூ.1.50 கோடி, 5 சதவீதம் வட்டி மானியம்

மீதமுள்ள தொகை, வங்கி கடனாக பெறப்பட வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற ஆர்வமுள்ள, வேளாண் தொழில் முனைவோர், விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, வங்கியின் கடன் ஒப்புதல் பெற வேண்டும். பின்னர் மானியம் பெறுவதற்கான விண்ணப்பங்கள், மாவட்ட தொழில்நுட்ப குழு மற்றும் மாநில அளவிலான, திட்ட ஒப்புதல் குழுவால், மதிப்பாய்வு செய்யப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில் முனைவோருக்கு, தொழில் திட்டத்திற்கு ஏற்ப, மானிய தொகை அதிகபட்சமாக, 1.50 கோடி ரூபாய் வழங்கப்படும். ஐந்து ஆண்டுகளுக்கு, 5 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+